• English
  • Login / Register

நிஸானின் க்யா சோனெட்டும், அதற்குப் போட்டியாக வரும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவும் 2020 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் அறிமுகமாக உள்ளது

published on பிப்ரவரி 14, 2020 03:37 pm by sonny for நிசான் மக்னிதே 2020-2024

  • 52 Views
  • ஒரு கருத்தை எழுதுக

ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகமாகவுள்ள ரெனால்ட்-நிஸானின் புதிய 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் மூலம் இது இயக்கப்படும்.

  • நிஸான் இஎம்2 மற்றும் ரெனால்ட் எச்பிசி ஆகியவை தங்களது தளத்தை ட்ரைபருடன் பகிர்ந்து கொள்ளும்.

  • அவை ரெனால்ட்-நிஸானின் புதிய 1.0-லிட்டர் டர்போ-பெட்ரோல் இயந்திரம் மூலம் இயக்கப்படும்.

  • இணைய அணுகலுடன் கூடிய பின்புற விளக்கு வடிவமைப்பு இல்லாமல் எல்இடி பொருந்திய பின்புற விளக்குகளை சமீபத்திய ஈஎம்2 வின் முன் காட்சி வெளிப்படுத்தி இருக்கிறது.

  • நிஸானின் சப்-4 எம் எஸ்யூவி செப்டம்பர் 2020 க்குள் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Nissan’s Kia Sonet, Maruti Vitara Brezza Rival To Launch Around Mid-2020

பல தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து செயல்படும் இந்திய நான்கு சக்கர வாகனத் தொழில்துறையில் இந்த சப்-4 எம் எஸ்யூவி வகையானது மிகவும் பிரபலமான ஒன்றாகும்.  தற்போது, நிஸான் இந்தியாவுக்காக இஎம் 2 என்ற குறியீட்டுப் பெயருடன் புதுவிதமாகத் தயாரிக்கப்பட்ட வடிவமைப்புடன் தனது போட்டியைத் தொடங்குகிறது.

 இ‌எம்2 முதன்முதலில் ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து தற்போது நிஸான் இ‌எம்2 இன் எல்‌இ‌டி பொருந்திய பின்புற விளக்கிற்கான மற்றொரு முன் காட்சியை வெளியிட்டுள்ளது. பக்கவாட்டைச் சுற்றிலும் பிளவு வடிவமைப்பைக் கொண்டிருக்கும் என்று இந்த முன் காட்சி குறிப்பிடுகிறது. பொருட்களை வைக்கும் இடத்திற்கான தனிப்பட்ட அமைப்பு எதுவும் இல்லாததால், தற்போது பயன்பாட்டிலுள்ள இணைய அணுகலுடனான பின்புற விளக்குகள் இல்லாதது போல் தெரிகிறது. நிஸான் சப்-4எம் எஸ்யூவியின் முதல் முன் காட்சியானது கிக்ஸைப் போன்ற ஒரு அழகான தோற்ற அமைப்பைக் குறிக்கிறது.

Nissan’s Kia Sonet, Maruti Vitara Brezza Rival To Launch Around Mid-2020

நிஸான் இஎம்2 மற்றும் எச்பிசி என்ற குறியீட்டுப் பெயருடைய ரெனால்ட்டின் வரவிருக்கும் சப்-4 மீட்டர் எஸ்யூவி, அதனுடைய தளத்தை ரெனால்ட் ட்ரைபருடன் பகிர்ந்து கொள்ளும். இது ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் அறிமுகமாகவுள்ள ரெனால்ட்-நிஸானின் புதிய 1.0-லிட்டர் டிசிஇ 100 டர்போ-பெட்ரோல் இயந்திரம் மூலம் இயக்கப்படும். இந்த இயந்திரம் ஐரோப்பாவில் உள்ள நிஸான் மைக்ரா மற்றும் ரெனால்ட் கிளியோ போன்ற கார்களுடன் கிடைக்கிறது. இது இரண்டு இயக்க நிலையில் கிடைக்கிறது: 100பிஎஸ் மற்றும் 160என்எம் உடைய 5-வேகக் கைமுறை மற்றும் சிவிடி உடன் 117 பிஎஸ் மற்றும் 180என்எம் அதிக ஆற்றல்மிக்க 6-வேகக் கைமுறையுடன் (+ 20 என்எம் அதிகமாக) கிடைக்கிறது. நிஸான் இந்தியாவில் சிவிடி விருப்பத்துடன் 117பிஎஸ் பதிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Renault’s 1.0-litre Turbo-Petrol Engine Showcased At Auto Expo 2020

சிறப்பம்சங்களைப் பொறுத்தவரை, நிஸான் இஎம்2வில் இணைய அணுகல் கார் தொழில்நுட்பம் (ஒரு ஆப்பின் மூலம் உட்புறம் முன்கூட்டியே குளிர்விக்கும் அமைப்பு போன்ற தொலைதூர இயக்கி செயல்பாட்டை வழங்குகிறது), 8-அங்குல தொடுதிரை ஒளிபரப்பு அமைப்பு மற்றும் நான்கு காற்றுப்பைகள் ஆகியவை பொருத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மைய திரையில் காண்பிக்கப்படும் காரின் காட்சியை 360-டிகிரி கோணத்தில் திரையிட்டுக் காட்டுகின்ற அமைப்பும் இதில் இடம் பெறலாம். 

 ஹூண்டாய் வென்யூ, முகப்பு மாற்றம் செய்யப்பட்ட,  பெட்ரோல் இயந்திரம் மட்டும் உள்ள மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, மஹிந்திரா எக்ஸ்யூவி 300, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் வரவிருக்கும் க்யா சோனெட் போன்றவற்றிற்குப் போட்டியாக நிஸான் தனது சப்-4 எம் எஸ்யூவியை செப்டம்பர் 2020க்குள் அறிமுகப்படுத்தவுள்ளது. இதனுடைய விலை ரூபாய் 7 லட்சம் முதல் ரூபாய் 11 லட்சம் வரை இருக்கும்.

மேலும் படிக்க: விட்டாரா பிரெஸ்ஸா ஏஎம்டி

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Nissan மக்னிதே 2020-2024

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience