IIMS 2015-ல் நிசான் X-ட்ரெயில் காட்சிக்கு வந்தது
published on ஆகஸ்ட் 21, 2015 10:18 am by manish for நிசான் எக்ஸ்-டிரையல்
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
நிசான் நிறுவனத்தின் நிசான் X-ட்ரெயிலின் மூன்றாவது தலைமுறை கார், தற்போது நடந்து வரும் இந்தோனேஷியா இன்டர்நேஷனல் மோட்டார் ஷோ 2015 (IIMS 2015) அல்லது காய்கின்டோ இந்தோனேஷியா இன்டர்நேஷ்னல் ஆட்டோ ஷோவில் (GIIAS) வெளியிடப்பட்டது. இந்தியாவில் வரும் பண்டிகை காலத்தில் இந்த கார் அறிமுகம் செய்யப்படலாம் என்று ஒரு சமீபத்திய தகவல் தெரிவிக்கிறது. பல தீவுகள் நிறைந்த இந்தோனேஷியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த SUV, கடந்த ஆண்டு அந்நாட்டிலுள்ள ஜாவாவின் மேற்கு பகுதியில் உள்ள சிகம்பேக் என்ற இடத்தில் கூட்டி இணைக்கப்பட்டது (அசெம்பிள்). இந்த காரில் மெலிந்த முகப்பு விளக்குகள் (ஹெட்லேம்ப்), ‘V-மோஷன்’ கிரில், C-வடிவிலான பின்புற விளக்குகள் (டெயில்லேம்ப்) மற்றும் D-பில்லர் ஒழுங்கான முறுக்கு (கின்க்) ஆகிய அம்சங்களைக் காண முடிகிறது. இந்த இந்தோனேஷியன் சிறப்பு மாடலில் என்ஜின் தேர்வுகளாக MR20DD 2.0-லிட்டர் நேரடி-உட்புகுத்தும் (டையரேக்ட்-இன்ஜெக்ட்டு) நான்கு-சிலிண்டர் என்ஜின் மூலம் 144 PS மற்றும் 200 Nm அளிக்கிறது. அல்லது QR25DE 2.5-லிட்டர் MPI நான்கு-சிலிண்டர் என்ஜின் மூலம் 171 PS மற்றும் 233 Nm கிடைக்கிறது. QR25DE என்ஜின் உடன் எக்ஸ்ட்ரோனிக் CVT பொருத்தப்பட்டுள்ளது. MR20DD என்ஜின், ஆறு-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் அல்லது எக்ஸ்ட்ரோனிக் CVT பொருத்தப்பட்ட நிலையில் என இரு தேர்வுகளில் கிடைக்கிறது. இந்தியாவில் இந்த காரில், பெரும்பாலும் 2.0 DCi மோட்டார் உடன் CVT கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டு அளிக்கப்படலாம். இந்தோனேஷிய சந்தையில் ப்ரென்ட்-வீல் ட்ரைவ் வகை மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும். AWD வகையை சேர்ந்த வாகனங்கள் விற்பனைக்கு கிடைக்காது.
X-ட்ரெயில் காரில் ஆட்டோ ஹெட்லைட்கள், ஆக்டிவ் ரைடு கன்ட்ரோல், LED டேடைம் ரன்னிங் லேம்ப்கள் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றிருக்கும். ஒரு உயர் மட்ட மாடலான இதில், சிறப்பான டோர் மிரர்கள், ஃபுல்- LED ஹெட்லைட்கள், கீலஸ் என்ட்ரீ, புஷ்-பட்டன் ஸ்டார்ட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், டுவல்-ஸோன் கிளைமேட் கன்ட்ரோல், மின்னூட்டத்தால் இயக்கப்படும் முன்பக்க இறுக்கைகள், க்ரூஸ் கன்ட்ரோல், 18-இன்ச் வீல்கள், லேதர் இறுக்கைகள் மற்றும் ஆரவூன்டு வ்யூ மானிட்டர் ஆகிய அம்சங்கள் காணப்படுகின்றன.
மேலும், வாகன டைனாமிக் கன்ட்ரோல் (VDC), ஆக்டிவ் என்ஜின் பிரேக்கிங், முன்பக்க இரட்டை ஏர்பேக்கள், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், ABS உடன் EBD, பிரேக் அசிஸ்ட் மற்றும் ISOFIX சைல்டு சீட் ஆங்கர்கள் ஆகியவை உட்பட பல பாதுகாப்பு அம்சங்களும் இந்த காரில் காணப்படுகிறது. இந்த கார், ஃப்ளோரல் வைட், பிரிமியம் ப்ரோன்ஸ் மெட்டாலிக், ஸ்மோக்கி க்ரே மெட்டாலிக், டைமண்ட் சில்வர் மெட்டாலிக் மற்றும் ஃபேன்ட்டம் ப்ளாக் பாடி ஸ்ஸேடுகள் என பல நிற வேறுபாடுகளில் கிடைக்கிறது.
0 out of 0 found this helpful