நிஸ்ஸான் இந்தியாவின் புதிய விளம்பர தூதராக ஜான் ஆப்ரஹாம் நியமனம்
உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம் . ஒரு சமயத்தில் நிஸ்ஸான் GT – R கார்களின் வேகத்தைப் பற்றி வர்ணிக்கையில் இந்த கார் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற வேகத்துடன் இருப்பதாக பல ஊடகங்கள் வர்ணித்தன. இந்த செய்தி நிச்சயம் நிஸ்ஸான் நிறுவனத்திற்கு ஏதோ ஒன்றை உணர்த்தி இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது. பிரபல பாலிவுட் நடிகரான ஜான் ஆப்ரஹாமை தனது புதிய விளம்பர தூதுவராக நியமித்துள்ளது. இவர் ஏற்கனவே யமஹா பைக் நிறுவனத்திற்கு விளம்பர தூதராக இருந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.
கீழே நாம் இணைத்துள்ள வீடியோ பட காட்சியில் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் நிஸ்ஸான் நிறுவனத்தின் எக்ஸ் - ட்ரெயில் வாகனத்தைக் குறித்த தனது கருத்துக்களை ஜான் ஆப்ரஹாம் பதிவு செய்திருப்பது இடம் பெற்றுள்ளது. இந்த படக்காட்சி நிஸ்ஸான் நிறுவனத்தின் பிரத்தியேக யூ - ட்யூப் சேனலிலும் இடம் பெற்றுள்ளது. GT-R சூப்பர் கார் மற்றும் எக்ஸ் - ட்ரெயில் வாகனங்கள் வரும் செப்டெம்பர் மாதம் 2016 ல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிஸ்ஸான் இந்தியாவின் தலைவர் , ஜான் ஆப்ரஹாம் உடனான இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவிக்கையில் , ஜான் இளைய சமுதாயத்தினரை கவர்ந்தவர் என்பதாலும் , எதிர்காலத்தில் நிஸ்ஸான் அறிமுகப்படுத்த உள்ள வாகனங்கள் இந்த இளைஞர் சமுதாயத்தினரை குறிவைத்தே இருக்க போகிறது என்பதாலுமே அவரை விளம்பர தூதராக நியமித்ததாக தெரிவித்துள்ளார். காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களில் எக்ஸ் - ட்ரெயில் வாகனங்களைப் பற்றி ஆழமான கருத்துக்களை ஜான் தெரிவித்தார். இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் இந்த SUV வாகனம் 2.0 லிட்டர் MR20 DD பெட்ரோல் மோட்டார் பொருத்தப் பெற்றுள்ளது. இந்த மோட்டார் 40.8PS சக்தியை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் யூநிட் உடன் இணைக்கப்பட்டு இவ்விரண்டும் கூட்டாக 184.8PS அளவு சக்தி மற்றும் 360Nm அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது . இந்த ஹைப்ரிட் யூனிட் CVT கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. . இதனால் ஹோண்டா BR – V போன்ற இந்த பிரிவில் உள்ள வாகனங்களுடன் இந்த எக்ஸ் - ட்ரெயில் வாகனங்கள் சரிக்கு சரியாக போட்டியிடும் .
மேலும் வாசிக்க
நவீன நிஸ்ஸான் GTR காரின் புகைப்படத் தொகுப்பு: அனைத்து வித பார்வையாளர்களையும் கவர்ந்த காட்ஜில்லா