• English
  • Login / Register

நிஸ்ஸான் இந்தியாவின் புதிய விளம்பர தூதராக ஜான் ஆப்ரஹாம் நியமனம்

நிசான் எக்ஸ்-டிரையல் க்காக பிப்ரவரி 10, 2016 07:08 pm அன்று manish ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

  • 21 Views
  • ஒரு கருத்தை எழுதுக

 Nissan X-Trail

உங்களில் பலருக்கு நினைவிருக்கலாம் . ஒரு சமயத்தில் நிஸ்ஸான் GT – R கார்களின் வேகத்தைப் பற்றி வர்ணிக்கையில்  இந்த கார்  ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் போன்ற  வேகத்துடன் இருப்பதாக பல ஊடகங்கள்  வர்ணித்தன.  இந்த செய்தி நிச்சயம் நிஸ்ஸான் நிறுவனத்திற்கு ஏதோ ஒன்றை உணர்த்தி இருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.  பிரபல பாலிவுட் நடிகரான  ஜான் ஆப்ரஹாமை தனது புதிய விளம்பர தூதுவராக நியமித்துள்ளது.  இவர் ஏற்கனவே யமஹா பைக் நிறுவனத்திற்கு விளம்பர தூதராக இருந்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

கீழே நாம் இணைத்துள்ள வீடியோ பட காட்சியில் 2016 ஆட்டோ எக்ஸ்போவில் நிஸ்ஸான் நிறுவனத்தின் எக்ஸ் - ட்ரெயில் வாகனத்தைக் குறித்த தனது கருத்துக்களை ஜான் ஆப்ரஹாம் பதிவு செய்திருப்பது இடம் பெற்றுள்ளது. இந்த படக்காட்சி  நிஸ்ஸான் நிறுவனத்தின் பிரத்தியேக யூ - ட்யூப் சேனலிலும்  இடம் பெற்றுள்ளது.   GT-R சூப்பர் கார் மற்றும் எக்ஸ் - ட்ரெயில் வாகனங்கள் வரும் செப்டெம்பர் மாதம் 2016 ல் இந்தியாவில் விற்பனைக்கு வரும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

நிஸ்ஸான் இந்தியாவின் தலைவர் ,  ஜான் ஆப்ரஹாம் உடனான இந்த ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவிக்கையில் , ஜான் இளைய சமுதாயத்தினரை கவர்ந்தவர் என்பதாலும் , எதிர்காலத்தில்  நிஸ்ஸான் அறிமுகப்படுத்த உள்ள வாகனங்கள் இந்த இளைஞர் சமுதாயத்தினரை குறிவைத்தே இருக்க போகிறது என்பதாலுமே அவரை விளம்பர தூதராக நியமித்ததாக தெரிவித்துள்ளார்.  காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்களில் எக்ஸ் -  ட்ரெயில் வாகனங்களைப் பற்றி ஆழமான  கருத்துக்களை ஜான்  தெரிவித்தார். இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் இந்த SUV வாகனம் 2.0 லிட்டர் MR20 DD பெட்ரோல் மோட்டார் பொருத்தப் பெற்றுள்ளது. இந்த மோட்டார் 40.8PS  சக்தியை உற்பத்தி செய்யும் எலெக்ட்ரிக் யூநிட் உடன் இணைக்கப்பட்டு இவ்விரண்டும் கூட்டாக 184.8PS அளவு சக்தி மற்றும் 360Nm  அளவு டார்க் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் வகையில் ட்யூன் செய்யப்பட்டுள்ளது .  இந்த  ஹைப்ரிட் யூனிட் CVT கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.  . இதனால் ஹோண்டா BR – V போன்ற இந்த  பிரிவில் உள்ள வாகனங்களுடன்  இந்த எக்ஸ் - ட்ரெயில் வாகனங்கள்  சரிக்கு சரியாக போட்டியிடும் . 

மேலும் வாசிக்க 

நவீன நிஸ்ஸான் GTR காரின் புகைப்படத் தொகுப்பு: அனைத்து வித பார்வையாளர்களையும் கவர்ந்த காட்ஜில்லா

was this article helpful ?

Write your Comment on Nissan எக்ஸ்-டிரையல்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

டிரெண்டிங் எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்Estimated
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்Estimated
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்Estimated
    ஏப், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா harrier ev
    டாடா harrier ev
    Rs.30 லட்சம்Estimated
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • vinfast vf3
    vinfast vf3
    Rs.10 லட்சம்Estimated
    பிபரவரி, 2026: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience