• English
  • Login / Register

ஆட்டோ எக்ஸ்போவில் பங்கு பெறவில்லை என்றாலும் ஸ்கோடா தனது அடுத்த தலைமுறை சுபெர்ப் கார்களை பிரமாதமாக விளம்பரப்படுத்துகிறது

published on பிப்ரவரி 11, 2016 05:40 pm by manish for ஸ்கோடா சூப்பர்ப் 2016-2020

  • 13 Views
  • ஒரு கருத்தை எழுதுக

செக் நாட்டு கார் தயாரிப்பாளர்களான ஸ்கோடா நிறுவனத்தினர் தங்களது அடுத்த தலைமுறை சுபெர்ப் கார்களை தங்களது இந்தியாவுக்கென்று பிரத்தியேகமாக  இயக்கி வரும் வலைதலத்தில் காட்சிக்கு வைத்துள்ளனர். சமீபத்தில் நடந்து முடிந்த ஆட்டோ எக்ஸ்போவில் இந்த சொகுசு  செடான் ரக  கார்கள் காட்சிக்கு வைக்கப்படாத காரணத்தால் இந்த காரின் தகவல்களைப் பெறவும் நேரில் பார்க்கவும்  முடியாமல் பார்வையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அந்த ஏமாற்றத்தைப் போக்கும் விதத்தில், ஸ்கோடா சுபெர்ப் கார்களின்  ஒரு விரிவான படக் கட்சியை ஸ்கோடா நிறுவனம் தங்கள் வலைதளத்தில் இணைத்துள்ளது. 

1.8-  லிட்டர் TSI  பெட்ரோல் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன்களுடன் இந்த கார் வெளியிடப்பட உள்ளது.  இந்த சொகுசு  செடான்  கார்கள்  டொயோடா கேம்ரி, மெர்சிடீஸ் - பென்ஸ் CLA மற்றும் BMW நிறுவனத்தின் விரைவில் அறிமுகமாக உள்ள செடான் வகை கார்களுடன் போட்டியிடும்.  . மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டும் , ஆப்ஷனலாக  DSG ட்ரான்ஸ்மிஷன் வசதியுடனும் இந்த கார் வெளியாக உள்ளது. FWD ( முன் சக்கர ட்ரைவ்) வசதியுடன் தான் பெரும்பாலும் இந்த சொகுசு செடான் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும்  AWD  தொழில்நுட்பம் கொண்ட  மாடலையும் இந்நிறுவனம் வெளியிடலாம் என்று தெரிகிறது. சோதனை ஓட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போது இந்த கார்கள் நம் கண்களில்  பலமுறை எந்த மறைப்பும் இல்லாத நிலையில்  தென்பட்டுள்ளது. . இந்நிறுவனம் வெளியிட்டுள்ள டீசர் படங்களைத் தவிர நம் எடுத்துள்ள படங்களும் இந்த கார் எப்படி இருக்கும் என்பதை நன்கு புலப்படுத்துவதாக உள்ளது. ஸ்கோடா நிறுவனத்தின் புதிய விஷன் கான்செப்டை பிரதிபலிப்பதாக இந்த காரின் வடிவமைப்பு உள்ளது. 

உட்புற கேபின் வடிவமைப்பும் நன்கு மேம்படுத்தப்பட்டு சிறப்பம்சங்களும் இணைக்கப்பட்டுள்ளது. .  வோல்க்ஸ்வேகனின் மிரர் லிங்க் சிஸ்டம் , மூன்று சோன் கிளைமேட் கண்ட்ரோல் , ஆண்ட்ராய்ட் ஆட்டோ மற்றும் ஆப்பிள்  கார்ப்ளே  போன்ற அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளதைக்  காண முடிகிறது.  ஸ்லைடிங் பநோரமிக் சன்ரூப்,  மின்சார உதவியுடன் அட்ஜஸ்ட் செய்துக் கொள்ளக் கூடிய முன்புற இருக்கைகள், மழை மற்றும் வெளிச்சத்தை உணர கூடிய சென்ஸார்கள், பார்கிங் கேமெரா , 6.5"  டச்ஸ்க்ரீன் இன்போடைன்மென்ட் அமைப்பு , மற்றும் பார்க் அஸிஸ்ட் போன்ற அம்சங்களும் இந்த சுபெர்ப் கார்களில் இணைக்கப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் வாசிக்க 

was this article helpful ?

Write your Comment on Skoda சூப்பர்ப் 2016-2020

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending சேடன் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience