தனது பேட்ஜ் கொண்ட வோல்க்ஸ்வேகன் அமியோ-வை, ஸ்கோடா வெளியிடுமா?
published on ஜனவரி 25, 2016 11:12 am by raunak
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
வென்டோ மற்றும் ரேபிட் ஆகியவை போல, தனது புதுமுக கச்சிதமான சேடனை அதன் பேட்ஜ் கொண்ட அமியோ-வாக, ஸ்கோடா நிறுவனம் வெளியிட வாய்ப்புள்ளது!
உலகம் முழுவதும் தனது மாசுப்படுத்தும் மோசடி குறித்த சர்ச்சை தொடர்ந்து புகைந்து கொண்டு இருக்கும் நிலையில், முதல் முறையாக இந்தியாவிற்கான முதல் தயாரிப்பான வோல்க்ஸ்வேகன் அமியோ-வை, கொண்டு வரும் பணியில் வோல்க்ஸ்வேகன் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. ஆமாம், இது ஒரு இந்திய படைப்பாக உருவாக்கப்படுகிறது! இதை, வரும் பிப்ரவரி மாதத்தின் முதல் வாரத்தில் நடைபெற உள்ள 13வது இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், ஜெர்மன் வாகன தயாரிப்பாளர் வெளியிட உள்ளார். இந்நிலையில் வென்டோ மற்றும் ரேபிட் ஆகியவற்றில், வோல்க்ஸ்வேகன் குரூப் இந்தியா செய்தது போல, ஸ்கோடாவும் இதில் ஒரு நுட்பமான மாற்றத்துடன் கூடிய வேறுபட்ட தயாரிப்பை வெளியிடுமா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது. ஸ்கோடாவின் பேட்ஜ் உடன் கூடிய ஒரு கச்சிதமான சேடனுக்கான வாய்ப்புள்ளதா? என்றால், வாய்ப்புகள் மிக அதிகமாகவே உள்ளன.
போலோ / வென்டோவிடம் இருந்து அமியோ, அதன் பிளாட்பாமை பகிர்ந்துள்ள நிலையில், இது ரேபிட்டிற்கும் அடித்தளமாக அமைகிறது. மேலே குறிப்பிட்ட 3 கார்களும் தயாரிக்கப்பட்ட அதே வோல்க்ஸ்வேகனின் சாகன் தொழிற்சாலையில் தான், இதுவும் தயாரிக்கப்பட உள்ளது. எனவே ரேபிட்டிற்கு அவர்கள் செய்தது போல, ஸ்கோடா நிறுவனம் மூலம் இதன் முகப்பு பகுதியில் திருத்தமும், பின்பகுதியில் நுட்பமான மாற்றமும் செய்து, கேபினில் எந்த மாற்றமுமின்றி, அமியோவை விட சற்று விலை குறைவாக அறிமுகம் செய்யப்படலாம். இங்கு கவனிக்க வேண்டிய ஒரு சுவாரசியமான காரியம் என்னவென்றால், பதிவெண் பிளேட்டை சுற்றிலும் அமைந்துள்ள குறுக்கே-உயர்ந்த கோடுகள் (க்ராஸ்-கவுன்டூர் லைன்ஸ்), வோல்க்ஸ்வேகனை விட ஸ்கோடாவையே அதிகளவில் ஒத்து போகிறது. (கீழே உள்ள படத்தை பாருங்கள்)
ஸ்கோடாவின் மூலம் ஒரு கச்சிதமான சேடன் உருவாக்கப்படும் பட்சத்தில், வென்டோ-ரேபிட் கதையை போல மீண்டும் நடைபெறும். ஏனெனில் இவ்விரண்டும் ஒத்த இயந்திரவியல் தன்மைகள் மற்றும் அம்சங்களை பகிர்ந்து கொண்டுள்ளன. இந்த கச்சிதமான சேடனுக்கான என்ஜின் தேர்வுகளை குறித்து பார்த்தோமானால், இவை சப்-4m வரி சலுகைகளை பெற தகுந்தவை என்பதால், போலோவிடம் இருந்து ஆற்றலகங்களை பெற்றுக் கொள்ளும். ஆனால் இந்த சூழ்நிலையில் அமியோ காருக்காக உறுதி செய்யப்பட்ட சிலவற்றை உட்கொண்டு வருவது குறித்தோ அல்லது இந்த கற்பனையான ஸ்கோடாவின் கச்சிதமான சேடன் குறித்தோ விவாதிப்பதை விட, ஏராளமான என்ஜின்களையும், டிரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் கொண்ட வோல்க்ஸ்வேகன் நிறுவனம், நம்மை ஆச்சரியப்படுத்தும் தருணத்திற்காக காத்திருக்கிறோம்!
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful