அடுத்த தலைமுறை கியா சோரெண்டோ அறிமுகப்படுத்தப்பட்டது; சி‌ஆர்-வி, டைகான் ஆல்ஸ்பேஸ் & கோடியாக் ஆகியவை இதன் போட்டியாளர்கள்

published on பிப்ரவரி 19, 2020 11:16 am by dinesh

  • 30 Views
  • ஒரு கருத்தை எழுதுக

2020 ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் மார்ச் 3 ஆம் தேதி உலகம் முழுவதும் அறிமுகமாக இருக்கிறது 

  • கியா சோரெண்டோ இந்தியாவுக்கு வருவது பற்றி இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, ஆனால் 2021 ஆம் ஆண்டுக்குள் வரலாம்.

  • கியா நிறுவனம் இந்தியாவில் ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு புதிய காரை அறிமுகப்படுத்துவதாக உறுதியளித்திருக்கிறது.

  • கியாவுக்கு ஒரு சோரெண்டோ இருப்பது போல, ஹூண்டாய்க்கு ஓ‌ஆர்‌யு சாண்டா எஃப்‌இ இருக்கிறது.

  • இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டால், அது ஹோண்டா சிஆர்-வி, டைகான்  ஆல் ஸ்பேஸ், ஸ்கோடா கோடியாக், மஹிந்திரா அல்துராஸ் ஜி4, ஃபோர்டு எண்டெவர் மற்றும் டொயோட்டா பார்ச்சூனர் ஆகியவற்றிக்கு போட்டியாக இருக்கும் 

Next-gen Kia Sorento Unveiled; Rivals CR-V, Tiguan Allspace & Kodiaq

கியா நிறுவனம் அடுத்த தலைமுறை சோரெண்டோ எஸ்யூவியை 2020 ஆம் ஆண்டு மார்ச் முதல் வாரத்தில் ஜெனீவா மோட்டார் கண்காட்சியில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து புதிய வடிவமைப்பையும் கொண்ட எஸ்யூவி இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 புதிய சோரெண்டோ முந்தைய தலைமுறை மாதிரியுடன் ஒப்பிடும்போது ஒரு குந்துகை நிலைப்பாட்டில் இருக்கிறது. இது புலி மூக்கு வடிவத்தில் பாதுகாப்புச் சட்டகம் இருக்கிறது, இதில் புதிய மெல்லிய எல்இடி முகப்பு விளக்குகளால் மூடப்பட்டுள்ளது. மோதுகைத் தாங்கிகள் இரட்டை தொனி  கருப்பு நிற மத்திய காற்று தடுப்பான்களைக் கொண்டுள்ளது மேலும் ஃபாக்ஸ் சறுக்கல் தகடுகள் இருக்கிறது.

Next-gen Kia Sorento Unveiled; Rivals CR-V, Tiguan Allspace & Kodiaq

பக்கவாட்டு அம்சங்களில் பெரிய கண்ணாடி பகுதிக்குக் கீழே அமர்ந்திருக்கும் சக்கர வளைவுகள் மற்றும் கூர்மையான தோள்பட்டை கோடுகள் இருக்கிறது. பின்புறத்தில், புதிய சோரெண்டோவானது பெரிய டெல்லுரைடு எஸ்யூவிக்கு மிகவும் ஒத்ததாக இருக்கிறது, ஆனால் இது பெரிய எஸ்யூவியில் ஒற்றை-துண்டு அலகுக்குப் பதிலாக இரண்டு துண்டுகள் கொண்ட பின்புற விளக்குகளைக் கொண்டுள்ளது.

 சோரெண்டோவின் முகப்பு பேட்டியில் இரட்டை-தொனி கருப்பு-பழுப்பு அமைப்பைக் கொண்டு மிகவும் விலை உயர்ந்ததாகத் தெரிகிறது, ஆனால் மத்தியப் பகுதி மெர்சிடிஸ் காரைப் போன்ற அழகான இணைக்கப்பட்ட திரை அமைப்பாக இருக்க வேண்டும். இது டிஜிட்டல் கருவி தொகுப்புக்கு 12.3 அங்குல அலகையும், ஒளிபரப்பு அமைப்புக்கு 10.25 அங்குல அலகையும்  கொண்டுள்ளது. தூரிகை செய்யப்பட்ட அலுமினியத்தில் நிறைவு செய்யப்பட்ட தனித்துவமான இரண்டு-துண்டு ஏசி காற்று துளைகள் போன்ற அம்சங்களைக் கொண்டிருக்கிறது.

Next-gen Kia Sorento Unveiled; Rivals CR-V, Tiguan Allspace & Kodiaq

அதிகாரப்பூர்வ அறிமுகத்திற்கு இன்னும் ஒரு சில வாரங்கள் இருப்பதால், புதிய சோரெண்டோவின் அம்சங்கள் மற்றும் இயந்திர விவரங்களை கியா இதுவரை வெளியிடவில்லை. இருப்பினும், இது உலகளவில் விற்பனைக்கு வந்துள்ள ஹூண்டாய் சாண்டா எஃப்‌இ உடன் தனது ஆற்றல் இயக்கிகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். இயந்திர விருப்பங்களைப் பார்ப்போம்.

இயந்திரம் 

2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் 

2.4- லிட்டர்  பெட்ரோல்

2.0-லிட்டர் டீசல் 

2.2- லிட்டர் டீசல்

ஆற்றல் 

235 பிஎஸ் 

185 பிஎஸ்

150பி/185 பிஎஸ்

200 பிஎஸ்

முறுக்கு திறன் 

352என்எம் 

241 என்எம்

400 என்எம்

440 என்எம்

செலுத்துதல் 

8-வேக ஏடி 

8-வேக ஏடி

6-வேக எம்டி/8- வேக ஏடி

6-வேக எம்டி/8- வேக ஏடி

ஒருவேளை இந்தியாவில் சோரெண்டோ கார் அறிமுகப்படுத்தப்பட்டால், அது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் விருப்பங்களுடன் கிடைக்க வேண்டும்..

கியா நிறுவனம் இந்தியச் சந்தையில் சோரெண்டோ எஸ்யூவியை அறிமுகப்படுத்துவது குறித்து இதுவரை எதுவும் கூறவில்லை, ஆனால் ஆறு மாதங்களுக்கு ஒரு புதிய கார் என்று வாக்குறுதியளித்திருப்பதால், இது எதிர்காலத்தில், அடுத்த ஆண்டு இங்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம். அதன் அடுத்த தயாரிப்பான சோனெட் சப்-4 எம் எஸ்யூவியானது 2020 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. அறிமுகப்படுத்தப்பட்டதும், சோரெண்டோ ஸ்கோடா கோடியாக், வோக்ஸ்வாகன் டைகான் ஆல் ஸ்பேஸ் மற்றும் ஹோண்டா சிஆர்-வி மற்றும் ஃபோர்டு எண்டெவர் மற்றும் டொயோட்டா பார்ச்சூனர் போன்ற எஸ்யூவிகள் போன்றவற்றின்  வடிவமைப்புடன் போட்டியிடும். 

மேலும் படிக்க: ஆட்டோ எக்ஸ்போ 2020 இல் கியா சோனட் அறிமுகப்படுத்தப்பட்டது; இது மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யு ஆகியவற்றிற்குப் போட்டியாக இருக்கும் 

கூடுதல் விவரங்களுக்கு: சி‌ஆர்-வி தானியங்கி 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your கருத்தை

1 கருத்தை
1
M
mahesh kannan
Feb 17, 2020, 6:59:40 PM

When we can see India?

Read More...
    பதில்
    Write a Reply
    Read Full News

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    trendingகார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience