நெக்ஸ்ட் ஜெனரேஷன் BMW 7 சீரிஸ் கார் ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் அறிமுகம்
modified on ஜனவரி 11, 2016 10:33 am by saad for பிஎன்டபில்யூ 7 சீரிஸ்2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
புதிய பிம்மர், குறைந்த எடையுடன், மிகுந்த ஆடம்பர அமைப்புகளுடன், எக்கச்சக்கமான தொழில்நுட்ப அம்சங்களுடன் மற்றும் அடுத்த ஜெனரேஷன் இஞ்ஜின்கள் பொருத்தப்பட்டு, ஆர்ப்பாட்டமாக களமிறங்க தயார் நிலையில் உள்ளது.
விதவிதமான புதிய கார்கள் சாரி சாரியாக வந்து, அடுத்த மாதத்தில் நடக்கவிருக்கிற ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில் கலந்து கொள்ள தயாராகிக் கொண்டிருக்கின்றன. எப்போதுமே, BMW வாகன தயாரிப்பு நிறுவனத்தின் கார்கள் நீண்ட காலத்திற்கு உறுதியாகவும் செயல்திறனோடும் செயல்படுவதால், மிகவும் பிரபலமாகத் திகழ்கின்றன. எந்த பிரிவில் இருந்தாலும் - ஆடம்பரமோ, செயல்திறனோ அல்லது ஆஃப் ரோடில் ஓடும் காரோ, ஏதுவாக இருந்தாலும், இந்நிறுவனத்தின் கார்கள் எப்போதுமே அபரிதமான வெற்றியைப் பெற்றுள்ளன என்பதை எவருமே மறுக்க முடியாது. இத்தகைய தொடர் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ள, இந்த கார் தயாரிப்பு நிறுவனம் கடந்த வருடம் புதிய 7 சீரிஸ் காரை தனது மேர்தட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது. அடுத்து வரும் இந்தியா ஆட்டோ எக்ஸ்போ 2016 கண்காட்சியில், தனது ஆடம்பர கார் வரிசையில், இந்த பிரிவின் அளவு கோலாக செயல்படும், மிகச் சிறந்த, அதிநவீன காரை காட்சிப்படுத்த உள்ளது.
BMW நிறுவனத்தின் ஆறாவது தலைமுறை 7 சீரிஸ் காரில், ஸ்டைலான நவீன வடிவமைப்பு மற்றும் தனித்துவமான தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளதால், இது மிகவும் கவர்ச்சிகரமாகாவும், அனைவரும் விரும்பும் விதத்திலும் உள்ளது. 2016 BMW 7 சீரிஸ் கார் ஒரு வித்தியாசமான புதுமையான தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதிகமான கார்பன் ஃபைபருடன் அலுமினியம், ஸ்டீல் மற்றும் பிளாஸ்டிக் போன்ற மூலப் பொருள்கள் சேர்க்கப்பட்டு, இதன் பாடி அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதால், இதன் எடையில் 130 கிலோ குறைந்துள்ளது என்பது ஆச்சர்யம் கலந்த உண்மை. எடையில் குறைந்ததாக இருந்தாலும், தொழில்நுட்பத்தில் பக்காவாக இருக்கிறது.
முதல் முறையாக BMW காரில் வெளியாக உள்ள அம்சங்கள்:
-
கை சைகை மூலம் கட்டுப்படுத்தக் கூடிய 'ஹேண்ட் ஜெஸ்ச்சர் கண்ட்ரோல் ஐட்ரைவ்' (iDrive) 5.0
-
ஓட்டுனர் தலையிடாமலேயே பார்க் செய்ய கூடிய 'அட்டானமஸ் பார்க்கிங்' அமைப்பு
-
முதல் முறையாக கார்பன் ஃபைபரை உபயோகப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள பாடி ஸ்ட்ரக்சர்
-
RWD CLAR (க்லஸ்டர் ஆர்க்கிடெக்சர்) அமைப்பு பொருத்தப்பட்ட முதல் BMW கார்
-
4 வீல் ஸ்டியரிங்
முக்கிய சிறப்பம்சங்கள்:
-
ஏர் பிளாப் கண்ட்ரோல்லுடன் வரும் கிட்னி வடிவத்தில் உள்ள கவர்ச்சிகரமான கிரில்
-
ஆப்ஷனல் லேசர் லைட்கள்
-
LED யூனிட்கள் பொருத்தப்பட்ட ஹெட்லாம்ப்கள் மற்றும் டெய்ல்லாம்ப்கள்
-
18 முதல் 21 அங்குலம் வரை அளவு கொண்ட அலாய் சக்கரங்கள்
-
டிரைவிங் மோடுகளுக்கு ஏற்றவாறு நிறத்தை மாற்றும் 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்லஸ்டர்
-
4 ஜோன் கிளைமேட் கண்ட்ரோல்; மிதமான சூட்டில் உள்ள முன்புற இருக்கைகள் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் போன்றவை மாற்றமில்லாத நிலையான அம்சங்கள்
-
ஆடம்பரமான பின்புற இருக்கை (லக்சுரி ரியர் ஸீடிங்க்) பேக்கேஜை நீங்கள் தேர்ந்தெடுத்தால், 7 அங்குல கமாண்ட் டேப்லெட்; முன்புறத்திலும், பின்புறத்திலும் மிதமான சூட்டில் வரும் ஆர்ம்ரெஸ்ட்கள்; காற்றோட்டமான சொகுசான பின்புற இருக்கைகள்; மசாஜ் வசதி மற்றும் பல வசதிகள் உங்களுக்கு கூடுதலாகக் கிடைக்கும்.
-
பின்புறத்தில் எக்ஸிக்யூடிவ் லௌஞ்ச் ஸீடிங்க் அமைப்பை நீங்கள் தேர்ந்தெடுத்தால், உங்களுக்கு அதிக சொகுசு வசதி மற்றும் இட வசதி கிடைக்கும். ஸ்கை லௌஞ்ச் பனோரமா கிளாஸ் ரூஃப், மசாஜ் வசதி, ஸ்மார்ட்ஃபோன் வைத்துக் கொள்ள வசதியான ஹோல்டர், ஹெட்-அப் டிஸ்ப்ளே, மாற்றி அமைக்கக் கூடிய பின்புற பொழுதுப்போக்கு திரை (ரியர் எண்டர்டெயின்மெண்ட் ஸ்கிரீன்), ஃபோல்ட்-அவுட் டேப்லட், 7 அங்குல டச் ஸ்கிரீன் டேப்லட் போன்ற அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ள ஆடம்பர வசதிகளுக்கு எடுத்துக் காட்டாக உள்ளன.
-
புதிய BMW 7 சீரிஸ் காரில், முக்கியமான பாதுகாப்பு அம்சங்களான ABS அமைப்பு மற்றும் காற்றுப் பைகள் தவிர, க்ராஸ் ட்ராஃபிக் வார்னிங், ஆக்டிவ் சைட் கொலிஷன் அமைப்பு, லேன் டிப்பார்சர் வார்னிங், ஆக்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், ரிமோட் கண்ட்ரோல் பார்க்கிங் மற்றும் பல அம்சங்களும் இடம்பிடித்துள்ளன.
இஞ்ஜின் திறன்:
டீசல்: BMW 730d வேரியண்ட்டை இயக்கும், 265 PS சக்தியை உற்பத்தி செய்யும் B57 6 சிலிண்டர் இஞ்ஜின்
பெட்ரோல்: BMW 740i வேரியண்ட்டை இயக்கும், 326 HP குதிரைத் திறனை உற்பத்தி செய்யும் 3.5 லிட்டர் 6 சிலிண்டர் இஞ்ஜின் மற்றும் BMW 750i வேரியண்ட்டை இயக்கும் 444 HP திறனை உற்பத்தி செய்யும் 4.4 லிட்டர் V8 டிவின் டர்போ இஞ்ஜின். அனைத்து இஞ்ஜின்களுமே 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன.
புதிய BMW 7 சீரிஸ் கார், சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் தயாரிப்பு ஆலையிலேயே அசெம்பில் செய்யப்படும். மேலும், இந்த காரின் உபகரணங்களை இந்திய சந்தைக்கு ஏற்றவாறு, இந்நிறுவனம் 50 சதவிகிதம் மாற்றியுள்ளது. எனவே, இதன் விலையில் அது நிச்சயமாக எதிரொலிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
0 out of 0 found this helpful