2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், புதிய ஹூண்டாய் எலன்ட்ரா காட்சிக்கு வைக்கப்படலாம்
published on ஜனவரி 25, 2016 11:19 am by manish for ஹூண்டாய் எலென்ட்ரா 2015-2019
- 22 Views
- ஒரு கருத்தை எழுதுக
2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், அடுத்த தலைமுறையைச் சேர்ந்த ஹூண்டாய் எலன்ட்ரா சேடன் தடம் பதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. சமீபத்தில் ‘அவன்டே’ என்ற புனைப்பெயரில், கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார், சமீபத்தில் நடந்த 2015 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. இந்த குறிப்பிட்ட மறுசீரமைப்பு பெற்ற சேடனின் அழகியல் தன்மைகளை வைத்து பார்த்தால், தற்போதைய மாடலில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக தெரிகிறது. தற்போதைய எலன்ட்ராவில் காணப்படும் ஃப்ளூய்டிக் டிசைனுக்கு பதிலாக, அதிக கவர்ச்சிகரமான மற்றும் கூரிய தோற்றத்தை பெற்றுள்ளது. அடுத்து நடைபெறவுள்ள ஆட்டோ எக்ஸ்போவில் நியாயபடி பார்த்தால், ஹூண்டாயின் சார்பாக காட்சிக்கு வரும் தயாரிப்புகளே, இதுவரை மோட்டார் ஷோவில் கண்டவைகளில் மிக அதிகமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை கருத்தில் கொண்டால், மேற்கூறிய அழகிய தயாரிப்பும் இதில் சேர்க்கப்பட வேண்டும்.
இந்த காரில் உள்ள அழகியல் தன்மைகளை குறித்து பார்க்கும் போது, அங்குலர் DRL-கள், கிரோமிற்குள் பதிக்கப்பட்ட மறுசீரமைப்பு பெற்ற முன்பக்க கிரில், நேர்த்தியான டெயில் லெம்ப்கள் மற்றும் C-வடிவம் கொண்ட ஃபேக் லெம்ப் கிளெஸ்டர்கள் ஆகியவற்றை அணிந்துள்ளது. இந்த மறுசீரமைப்பு பெற்ற சேடனின் உள்புறத்தில், ஒரு 8.0-இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் / நேவிகேஷன் சிஸ்டத்துடன் இணைந்து செயலாற்றும், ஒரு சப்வூஃப்பர் மற்றும் ஒரு சென்ட்ரல் ஸ்பீக்கரை உட்கொண்ட ஒரு 8-ஸ்பீக்கர் இன்ஃபினிட்டி பிரிமியம் ஆடியோ சிஸ்டம் ஆகியவற்றை கொண்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது, வெர்னாவிடம் இருந்து பெற்ற டீசல் மில்லான 1.6-லிட்டரையே, எலன்ட்ரா தொடர்ந்து பயன்படுத்தலாம் என்றாலும், சில மாற்றங்கள் இருக்கலாம். பெட்ரோல் ஆற்றலகத்தை பொறுத்த வரை, ஹூண்டாய் மூலம் காட்சிக்கு வைக்கப்பட உள்ள வகையில், அதன் புதிய 1.4-லிட்டர் டர்போசார்ஜ்டு காப்பா GDI 4-சிலிண்டர் என்ஜினை, ஒரு இகோ வகையில் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த ஆற்றலகம் மூலம் 5,500 rpm-ல் 128bhp ஆற்றல் வெளியீடையும், 1,400 - 3,700 rpm-க்கும் இடைப்பட்ட நிலையில் ஒரு அதிகபட்ச முடுக்குவிசையாக 211.5 Nm-யும் வெளியிடுகிறது. இகோஸ்ஃப்ட் 7-ஸ்பீடு டயல்-கிளெச் டிரான்ஸ்மிஷன் உடன் இணைந்து செயலாற்றும் இந்த ஆற்றலகத்தின் மூலம் லிட்டருக்கு 14 கி.மீ என்ற அளவில் எரிபொருள் சிக்கனத்தை பெறலாம். இதன்மூலம் டொயோட்டா கொரோலா அல்டிஸ் மற்றும் ஒப்பீட்டளவில் தேதியிடப்பட்ட செவ்ரோலேட் க்ரூஸ் ஆகியவற்றுடன் போட்டியிட முடியும்.
மேலும் வாசிக்க