• English
  • Login / Register

ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் அறிமுகமானது MG Majestor

published on ஜனவரி 18, 2025 11:06 pm by shreyash for எம்ஜி குளோஸ்டர் 2024

  • 1 View
  • ஒரு கருத்தை எழுதுக

2025 மெஜெஸ்டரின் வெளிப்புற மற்றும் உட்புற வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பழைய பதிப்பில் இருந்த அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வருகிறது.

MG Majestor revealed at Bharat Mobility Global Expo

  • வெளிப்புற சிறப்பம்சங்களில் ஒரு பெரிய கிரில், செங்குத்தாக கொடுக்கப்பட்டுள்ள மற்றும் புதிய இணைக்கப்பட்ட டெயில் லைட்ஸ் ஆகியவை அடங்கும்.

  • உட்புறம் மற்றும் வசதிகள் பற்றிய விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

  • 2-லிட்டர் டீசல் மற்றும் 2-லிட்டர் ட்வின்-டர்போ-டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை பெறலாம் எதிர்பார்க்கப்படுகிறது.

  • 2-வீல்-டிரைவ் மற்றும் 4-வீல்-டிரைவ் என இரண்டு பதிப்புகளிலும் கிடைக்கும்.

  • விலை ரூ.46 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 -ல் இந்தியாவில் எம்ஜியின் ஃபிளாக்ஷிப் எஸ்யூவி ஆன எம்ஜி மெஜெஸ்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. MG மெஜெஸ்டர் சில கூடுதல் வசதிகளுடன் உள்ளேயும் வெளியேயும் குறிப்பிடத்தக்க வடிவமைப்பில் அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் இது முன்பு இருந்த அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் தொடர்கிறது. மெஜெஸ்டர் அடிப்படையில் ஃபேஸ்லிஃப்ட் செய்யப்பட்ட குளோஸ்டர் போல தெரிந்தாலும் கூட ஆனால் MG அதன் விற்பனை நிறுத்தப்படாது என்பதை உறுதிப்படுத்தியுள்ளது. மெஜெஸ்டர் காரை பற்றி இங்கே பார்க்கலாம்.

2025 MG மெஜெஸ்டர் வடிவமைப்பு

MG Majestor

கிளாஸி பிளாக் எலமென்ட்கள், வெர்டிகலான LED ஹெட்லைட்கள் மற்றும் ஸ்லீக்கரான LED DRL -கள் மற்றும் பம்பரில் வைக்கப்பட்டுள்ள புதிய வடிவிலான ஹெட்லைட்கள் மற்றும் நேர்த்தியான LED DRLகளுடன் கூடிய பெரிய கிரில் ஆகியவற்றை கொண்டுள்ளது.

இது 19-இன்ச் டூயல்-டோன் அலாய் வீல்கள், பாடி முழுவதும் கொடுக்கப்பட்டுள்ள பிளாக் பாடி கிளாடிங்கை பெறுகிறது. டோர் ஹேண்டில்கள், வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMகள்), ரூப் மற்றும் A-,B- மற்றும் C-பில்லர் எஸ்யூவிக்கு வித்தியாசத்தை காட்டுவதற்காக பிளாக் கலரில் கொடுக்கப்பட்டுள்ளன. பின்புறத்தில் புதிய கனெக்டட் LED டெயில் லைட்ஸ் மற்றும் புதிய பம்பர் வடிவமைப்பைப் கொடுக்கப்பட்டுள்ளது.

இன்ட்டீரியர்

வரவிருக்கும் மெஜஸ்டர் எஸ்யூவி -யின் உட்புறத்தை எம்ஜி இன்னும் வெளியிடவில்லை. கார் தயாரிப்பாளரின் மற்ற கார்களை போலவே இது 6 முதல் 7 இருக்கைகளுக்கு இடையேயான ஆப்ஷன்களுடன் உட்புறத்தில் பிரீமியம் பொருட்களுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

வசதிகள் தொகுப்பும் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் கூட இது டூயல் ஸ்கிரீன்கள், வயர்லெஸ் ஃபோன் சார்ஜர், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் பிரீமியம் சவுண்ட் சிஸ்ட்ம் போன்ற பிரீமியம் வசதிகளுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்புக்காக பல ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), 360 டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை இருக்கலாம்.

பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்

MG தற்போதைய-ஸ்பெக் குளோஸ்டர் போன்ற அதே பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் MG மெஜெஸ்டர் காரை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரிவான விவரங்கள் பின்வருமாறு:

இன்ஜின்

2 லிட்டர் டீசல்

2-லிட்டர் ட்வின்-டர்போ-டீசல்

பவர்

161 PS

216 PS

டார்க்

373 Nm

478 Nm

டிரான்ஸ்மிஷன்

8-ஸ்பீடு ஏடி

8-ஸ்பீடு ஏடி

பேஸ் இன்ஜின் ரியர் வீல் டிரைவ் உடன் வழங்கப்படும், டூயல்-டர்போ டீசல் இன்ஜின் 4 வீல் டிரைவ் உடன் கிடைக்கும்.

எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்

MG Majestor rear

MG மெஜெஸ்டர் காரின் விலை சுமார் ரூ.46 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது டொயோட்டா ஃபார்ச்சூனர் மற்றும் ஸ்கோடா கோடியாக் ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on M ஜி குளோஸ்டர் 2024

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • க்யா syros
    க்யா syros
    Rs.9.70 - 16.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience