• English
  • Login / Register

MG Gloster Snowstorm மற்றும் Desertstorm எடிஷன்கள் வெளியிடப்பட்டுள்ளன, விலை ரூ. 41.05 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது

published on ஜூன் 04, 2024 07:21 pm by dipan for எம்ஜி குளோஸ்டர்

  • 63 Views
  • ஒரு கருத்தை எழுதுக

குளோஸ்டர் ஸ்டோர்ம் எஸ்யூவி -யின் டாப்-ஸ்பெக் சாவ்வி டிரிம் அடிப்படையிலானது. ரெட் ஹைலைட்ஸ் மற்றும் ஆல் பிளாக் இன்ட்டீரியர்ஸ் பிளாக்-அவுட் எக்ஸ்ட்டீரியர் எலமென்ட்கள் உடன் வருகிறது.

MG Gloster Storm Series

  • இந்த ஸ்பெஷல் எடிஷன்கள் எஸ்யூவி -யின் ரேஞ்ச்-டாப்பிங் சாவ்வி வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டவையாகும்.

  • குளோஸ்டர் ஸ்டோர்ம் சீரிஸ் ஆனது தற்போதுள்ள பிளாக்ஸ்டோர்ம் எடிஷன் புதிய டெஸர்ட்ஸ்டோர்ம் மற்றும் ஸ்நோஸ்டோர்ம் மாடல்களை கொண்டுள்ளது.

  • இது கூடுதலான பாடி கிளாடிங், பிளாக்-அவுட் எலமென்ட்கள் மற்றும் வெளிப்புறத்தில் ரெட் ஆக்ஸன்ட்களை பெறுகிறது

  • உட்புறங்கள் ஒரே மாதிரியாக இருக்கும் எலமென்ட்களில் வொயிட் ஸ்டிச் கொண்ட ஆல் பிளாக் தீம் உடன் வருகின்றன.

  • ஆல்-வீல்-டிரைவ் (AWD) மற்றும் ரியர்-வீல்-டிரைவ் (RWD) அமைப்புகளின் தேர்வில் அதே மாதிரியான பவர்டிரெய்ன்களை கொண்டுள்ளது

இந்தியாவில் எம்ஜி குளோஸ்டர் ஸ்டோர்ம் சீரிஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே உள்ள பிளாக்ஸ்டோர்ம் மற்றும் புதிய ஸ்நோஸ்டோர்ம் மற்றும் டெஸர்ட்ஸ்டோர்ம் ஆகியவை இடம்பெற்றுள்ளன. நிலையான குளோஸ்டருடன் ஒப்பிடும்போது ​​இந்தத் சீரிஸ் நுட்பமான வெளிப்புற வடிவமைப்பு அப்டேட்களை பெறுகிறது. அதே நேரத்தில் உட்புறங்களில் வொயிட் ஸ்டிச் கொண்ட புதிய பிளாக்-அவுட் தீம் உள்ளது. புதிய MG குளோஸ்டர் டெஸர்ட்ஸ்டோர்ம் மற்றும் பிளாக்ஸ்டோர்ம் ஆகியவை 6-சீட்டர் மற்றும் 7-சீட்டர் கட்டமைப்புகளை வழங்குகின்றன. அதே நேரத்தில் ஸ்நோஸ்டோர்ம் 7-சீட்டர் ஆப்ஷனுடன் மட்டுமே வருகிறது.

கூடுதலான முரட்டுத்தனமான வெளிப்புறம்

MG குளோஸ்டர் ஸ்டோர்ம் சீரிஸ் மூன்று வெவ்வேறு ஷேடுகளில் வருகிறது. ஸ்நோஸ்டோர்ம் டூயல்-டோன் பேர்ல் வொயிட் மற்றும் பிளாக் கலரில் கொடுக்கப்பட்டுள்ளது. டெஸர்ட்ஸ்டோர்ம் டீப் கோல்டன் கலரில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் பிளாக்ஸ்டோர்ம் பிளாக் மற்றும் கிரே கலர் ஷேடுகளில் வருகிறது. மேலும் மூன்று வேரியன்ட்களிலும் பிளாக்-அவுட் கிரில், அலாய் வீல்கள், கூடுதல் டோர் கிளாடிங் மற்றும் ஹெட்லைட்களில் ரெட் ஹைலைட்ஸ் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன. இருப்பினும் டெஸர்ட்ஸ்டோர்ம் மற்றும் பிளாக்ஸ்டோர்ம் ஆகியவை முன் மற்றும் பின்புற ஸ்கிட் பிளேட் மற்றும் வெளிப்புற ரியர்வியூ கண்ணாடிகள் (ORVMs) ஆகியவற்றில் ரெட் ஆக்ஸன்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன. டெசர்ட்ஸ்டோர்ம் மற்றும் ஸ்னோஸ்டோர்ம் பேட்ஜ்கள், சீட் மசாஜர்கள், தீம் கார்பெட் மேட்கள், டேஷ்போர்டு மேட்ஸ் மற்றும் 12-ஸ்பீக்கர் JBL ஸ்பீக்கர்கள் போன்ற டீலர்-ஃபிட்டட் ஆக்ஸசரீஸ்களையும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யலாம்.

MG Gloster Snowstorm

உட்புறத்தில் மாற்றம் எதுவும் இல்லை

குளோஸ்டர் ஸ்டோர்ம் சீரிஸ் இன் உட்புறங்கள் பிளாக் கலருக்கு மாற்றப்பட்டுள்ளன. மற்றும் ஸ்நோஸ்டோர்ம் இருக்கைகள் மற்றும் ஸ்டீயரிங் மீது வொயிட் ஸ்டிச் கொடுக்கப்பட்டுள்ளது., அதே நேரத்தில் டெஸர்ட்ஸ்டோர்ம் ஸ்டீயரிங் மீது வொயிட் ஸ்டிச் மட்டுமே உள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன்த் சீரிஸில் உள்ள மாடல்கள், கூடுதல் வசதிகள் எதுவும் இல்லை. இவை டாப்-ஸ்பெக் சாவ்வி வேரியண்ட்டை அடிப்படையாகக் கொண்டவை. எனவே பனோரமிக் சன்ரூஃப், வென்டிலேட்டட் ஓட்டுநர் இருக்கை, பவர்டு டெயில்கேட், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேயுடன் கூடிய 12.3 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே போன்ற வசதிகளை உள்ளடக்கியது. குளோஸ்டரின் இந்த ஸ்பெஷல்-எடிஷன் மாடல்கள் லேன்-கீப் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல், எமர்ஜென்சி பிரேக்கிங் மற்றும் 360 டிகிரி கேமரா உள்ளிட்ட அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) -கள் ஆகியவற்றின் தொகுப்பையும் கொண்டுள்ளன.

MG Gloster Snowstorm interior

அதே பவர்டிரெய்ன்

MG குளோஸ்டர் டெஸர்ட்ஸ்டோர்ம் மற்றும் ஸ்நோஸ்டோர்ம் எடிஷன்கள் வழக்கமான மாடலின் அதே பவர்டிரெய்னை பகிர்ந்து கொள்கின்றன. ஆல்-வீல்-டிரைவ் (AWD) மாடல்கள் 2-லிட்டர் ட்வின்-டர்போ டீசல் இன்ஜின் 215 PS மற்றும் 478 Nm அவுட்புட்டை கொடுக்கிறது. 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது. ரியர்-வீல் டிரைவ் (RWD) மாதிரிகள் ஸ்டாண்டர்டான எஸ்யூவி -யின் 2 -லிட்டர் டீசல் இன்ஜினை பயன்படுத்துகின்றன. இது 161 PS மற்றும் 373 Nm அவுட்புட்டை உற்பத்தி கொடுக்கிறது. 

விலை மற்றும் போட்டியாளர்கள்

MG குளோஸ்டர் ஸ்டோர்ம் சீரிஸின் விலை ரூ.41.05 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது. இந்த ஸ்பெஷல் எடிஷன்களுக்கு எந்த நேரடி போட்டியாளர்களும் இல்லை. என்றாலும் இவை ஸ்டாண்டர்டர்டான குளோஸ்டர் இன் போட்டியாளர்களான டொயோட்டா ஃபார்ச்சூனர், ஸ்கோடா கோடியாக், மற்றும் ஜீப் மெரிடியன் ஆகியவற்றுக்கு மாற்றாக இருக்கும்.

மேலும் படிக்க: எம்ஜி குளோஸ்டர் டீசல்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது எம்ஜி குளோஸ்டர்

Read Full News

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience