MG Astor 2025 அப்டேட்: காரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது
மாடல் இயர் (MY25) அப்டேட்டின் ஒரு பகுதியாக பனோரமிக் சன்ரூஃப் இப்போது மேலும் எளிமையாக அணுகக்கூடியதாக மாறியுள்ளது.
-
ஆஸ்டரின் மிட்-ஸ்பெக் ஷைன் வேரியன்ட்டின் விலை இப்போது ரூ.36,000 அதிரித்துள்ளது.
-
இது பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
-
ஆஸ்டர் செலக்ட் விலை ரூ.38,000 உயர்த்தப்பட்டுள்ளது.
-
இப்போது 6 ஏர்பேக்குகள் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகிறது.
-
ஆஸ்டர் 2025 -ன் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.18.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.
எம்ஜி ஆஸ்டர் 2021 ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. மிட்-ஸ்பெக் ஷைன் மற்றும் செலக்ட் வேரியன்ட்களுக்கான புதிய வசதிகளை கொடுக்கும் நோக்கில் ஆண்டு புதுப்பிப்புகளுக்கு உட்பட்டுள்ளது. MY25 அப்டேட்களுடன், ஆஸ்டரின் விலையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் கூட இதன் தொடக்க விலை இன்னும் ரூ. 10 லட்சம் ஆகவே உள்ளது (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). மேலும் விவரங்களை பார்க்கும் முன்னர் முதலில் ஆஸ்டரின் புதிய விலை விவரங்களை பார்ப்போம்.
வேரியன்ட் |
பழைய விலை |
புதிய விலை |
வேறுபாடு |
பெட்ரோல் மேனுவல் |
|||
ஸ்பிரிண்ட் |
ரூ.10 லட்சம் |
ரூ.10 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
ஷைன் |
ரூ.12.12 லட்சம் |
ரூ.12.48 லட்சம் |
+ ரூ. 36,000 |
செலக்ட் |
ரூ.13.44 லட்சம் |
ரூ.13.82 லட்சம் |
+ ரூ. 38,000 |
ஷார்ப் ப்ரோ |
ரூ.15.21 லட்சம் |
ரூ.15.21 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
பெட்ரோல் ஆட்டோமெட்டிக் (CVT) |
|||
செலக்ட் |
ரூ.14.47 லட்சம் |
ரூ.14.85 லட்சம் |
+ ரூ. 38,000 |
ஷார்ப் ப்ரோ |
ரூ.16.49 லட்சம் |
ரூ.16.49 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
சாவ்வி புரோ (ஐவரி உட்புறத்துடன்) |
ரூ.17.46 லட்சம் |
ரூ.17.46 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
சாவ்வி புரோ (சங்ரியா உட்புறத்துடன்) |
ரூ.17.56 லட்சம் |
ரூ.17.56 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
டர்போ-பெட்ரோல் ஆட்டோமெட்டிக் |
|||
சாவ்வி ப்ரோ |
ரூ.18.35 லட்சம் |
ரூ.18.35 லட்சம் |
வித்தியாசம் இல்லை |
விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை
ஆஸ்டரின் ஷைன் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் விலை இப்போது ரூ.36,000 அதிகரித்துள்ளது, அதேசமயம், செலக்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரிம்கள் ரூ.38,000 விலை உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற வேரியன்ட்களின் விலையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.
புதிய புதுப்பிப்புகள்
MG ஆனது எஸ்யூவி -யின் ஷைன் மற்றும் செலக்ட் வேரியன்ட்களை புதிய வசதிகளுடன் அப்டேட் செய்துள்ளது. ஷைன் வேரியன்ட் இப்போது பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டமைபெறுகிறது. மறுபுறம் ஆஸ்டரின் செலக்ட் வேரியன்ட் இப்போது 6 ஏர்பேக்குகள் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது தவறவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: விரைவில் MG Comet EV பிளாக்ஸ்டார்ம் பதிப்பு வெளியாகவுள்ளது. என்ன எதிர்பார்க்கலாம் ?
வசதிகள் மற்றும் பாதுகாப்பு
10.1-இன்ச் டச்ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 6-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் இதில் உள்ளன. 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் டிசென்ட் அண்ட் அசென்ட் கன்ட்ரோல், ஹீட்டட் ORVMகள், 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன, இதில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் லேன்-கீப்பிங்/அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.
இன்ஜின் ரீதியாக எந்த மாற்றங்களும் இல்லை
ஆஸ்டரின் பவர்டிரெய்ன் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை எம்ஜி மாற்றவில்லை. இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (110 PS / 144 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஒரு CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (140 PS / 220 Nm) 6-ஸ்பீடு உடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.
போட்டியாளர்கள்
எம்ஜி ஆஸ்டர் விலை இப்போது ரூ.10 லட்சம் முதல் ரூ.18.35 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது. இது கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.