• English
  • Login / Register

MG Astor 2025 அப்டேட்: காரின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது

modified on பிப்ரவரி 06, 2025 08:02 pm by shreyash for எம்ஜி ஆஸ்டர்

  • 16 Views
  • ஒரு கருத்தை எழுதுக

மாடல் இயர் (MY25) அப்டேட்டின் ஒரு பகுதியாக பனோரமிக் சன்ரூஃப் இப்போது மேலும் எளிமையாக அணுகக்கூடியதாக மாறியுள்ளது.

MG Astor 2025 update

  • ஆஸ்டரின் மிட்-ஸ்பெக் ஷைன் வேரியன்ட்டின் விலை இப்போது ரூ.36,000 அதிரித்துள்ளது.

  • இது பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

  • ஆஸ்டர் செலக்ட்  விலை ரூ.38,000 உயர்த்தப்பட்டுள்ளது.

  • இப்போது 6 ஏர்பேக்குகள் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியுடன் வருகிறது.

  • ஆஸ்டர் 2025 -ன் விலை ரூ.10 லட்சம் முதல் ரூ.18.35 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை உள்ளது.

எம்ஜி ஆஸ்டர் 2021 ஆண்டில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வந்தது. மிட்-ஸ்பெக் ஷைன் மற்றும் செலக்ட் வேரியன்ட்களுக்கான புதிய வசதிகளை கொடுக்கும் நோக்கில் ஆண்டு புதுப்பிப்புகளுக்கு உட்பட்டுள்ளது. MY25 அப்டேட்களுடன், ஆஸ்டரின் விலையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆனாலும் கூட இதன் தொடக்க விலை இன்னும் ரூ. 10 லட்சம் ஆகவே உள்ளது (எக்ஸ்-ஷோரூம் பான்-இந்தியா). மேலும் விவரங்களை பார்க்கும் முன்னர் முதலில் ஆஸ்டரின் புதிய விலை விவரங்களை பார்ப்போம். 

வேரியன்ட்

பழைய விலை

புதிய விலை

வேறுபாடு

பெட்ரோல் மேனுவல்

ஸ்பிரிண்ட் 

ரூ.10 லட்சம்

ரூ.10 லட்சம்

வித்தியாசம் இல்லை

ஷைன்

ரூ.12.12 லட்சம்

ரூ.12.48 லட்சம்

+ ரூ. 36,000

செலக்ட்

ரூ.13.44 லட்சம்

ரூ.13.82 லட்சம்

+ ரூ. 38,000

ஷார்ப் ப்ரோ

ரூ.15.21 லட்சம்

ரூ.15.21 லட்சம்

வித்தியாசம் இல்லை

பெட்ரோல் ஆட்டோமெட்டிக் (CVT)

செலக்ட்

ரூ.14.47 லட்சம்

ரூ.14.85 லட்சம்

+ ரூ. 38,000

ஷார்ப் ப்ரோ

ரூ.16.49 லட்சம்

ரூ.16.49 லட்சம்

வித்தியாசம் இல்லை

சாவ்வி புரோ (ஐவரி உட்புறத்துடன்)

ரூ.17.46 லட்சம்

ரூ.17.46 லட்சம்

வித்தியாசம் இல்லை

சாவ்வி புரோ (சங்ரியா உட்புறத்துடன்)

ரூ.17.56 லட்சம்

ரூ.17.56 லட்சம்

வித்தியாசம் இல்லை

டர்போ-பெட்ரோல் ஆட்டோமெட்டிக்

சாவ்வி ப்ரோ

ரூ.18.35 லட்சம்

ரூ.18.35 லட்சம்

வித்தியாசம் இல்லை

விலை விவரங்கள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா -வுக்கானவை

ஆஸ்டரின் ஷைன் பெட்ரோல் மேனுவல் வேரியன்ட் விலை இப்போது ரூ.36,000 அதிகரித்துள்ளது, அதேசமயம், செலக்ட் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் டிரிம்கள் ரூ.38,000 விலை உயர்த்தப்பட்டுள்ளன. மற்ற வேரியன்ட்களின் விலையில் மாற்றங்கள் செய்யப்படவில்லை.

புதிய புதுப்பிப்புகள்

2025 MG Astor panoramic sunroof

MG ஆனது எஸ்யூவி -யின் ஷைன் மற்றும் செலக்ட் வேரியன்ட்களை புதிய வசதிகளுடன் அப்டேட் செய்துள்ளது. ஷைன் வேரியன்ட் இப்போது பனோரமிக் சன்ரூஃப் மற்றும் 6-ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டமைபெறுகிறது. மறுபுறம் ஆஸ்டரின் செலக்ட் வேரியன்ட் இப்போது 6 ஏர்பேக்குகள் மற்றும் லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி கொடுக்கப்பட்டுள்ளது. எல்லா வேரியன்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் கொடுக்கப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் அது தவறவிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: விரைவில் MG Comet EV பிளாக்ஸ்டார்ம் பதிப்பு வெளியாகவுள்ளது. என்ன எதிர்பார்க்கலாம் ?

வசதிகள் மற்றும் பாதுகாப்பு

2025 MG Astor digital driver's display
2025 MG Astor touchscreen

10.1-இன்ச் டச்ஸ்கிரீன், 7-இன்ச் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 6-வே பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட், ஆட்டோமேட்டிக் ஏசி மற்றும் க்ரூஸ் கண்ட்ரோல் ஆகிய வசதிகள் இதில் உள்ளன. 6 ஏர்பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ஹில் டிசென்ட் அண்ட் அசென்ட் கன்ட்ரோல், ஹீட்டட் ORVMகள், 360-டிகிரி கேமரா மற்றும் அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) ஆகியவை பாதுகாப்புக்காக கொடுக்கப்பட்டுள்ளன, இதில் அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், ஃபார்வர்ட் கொலிஷன் வார்னிங், ஆட்டோமெட்டிக் எமர்ஜென்ஸி பிரேக்கிங் மற்றும் லேன்-கீப்பிங்/அசிஸ்ட் ஆகியவை அடங்கும்.

இன்ஜின் ரீதியாக எந்த மாற்றங்களும் இல்லை

ஆஸ்டரின் பவர்டிரெய்ன் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்களை எம்ஜி மாற்றவில்லை. இது இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடன் வருகிறது: 1.5-லிட்டர் நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (110 PS / 144 Nm) 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் அல்லது ஒரு CVT உடன் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் 1.3-லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின் (140 PS / 220 Nm) 6-ஸ்பீடு உடன் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது. 

போட்டியாளர்கள்

2025 MG Astor

எம்ஜி ஆஸ்டர் விலை இப்போது ரூ.10 லட்சம் முதல் ரூ.18.35 லட்சம் வரை (எக்ஸ்-ஷோரூம் பான் இந்தியா) உள்ளது. இது கியா செல்டோஸ், ஹூண்டாய் கிரெட்டா, மாருதி கிராண்ட் விட்டாரா, டொயோட்டா ஹைரைடர், ஹோண்டா எலிவேட், ஃபோக்ஸ்வேகன் டைகுன், மற்றும் ஸ்கோடா குஷாக் ஆகியவற்றுடன் போட்டியிடுகிறது.

ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.

was this article helpful ?

Write your Comment on M g ஆஸ்டர்

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • டாடா சீர்ரா
    டாடா சீர்ரா
    Rs.10.50 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • பிஒய்டி sealion 7
    பிஒய்டி sealion 7
    Rs.45 - 49 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    மார, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் பாட்ரோல்
    நிசான் பாட்ரோல்
    Rs.2 சிஆர்கணக்கிடப்பட்ட விலை
    அக்ோபர், 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி majestor
    எம்ஜி majestor
    Rs.46 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • டாடா பன்ச் 2025
    டாடா பன்ச் 2025
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience