மாருதி YRA பெலினோ என்று பெயரிடப்பட்டு, முதல் படம் வெளியீடு
published on செப் 30, 2015 02:35 pm by அபிஜித் for மாருதி வைஆர்ஏ
- 15 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: பெங்களூரில் உள்ள ஒரு நிக்ஸா டீலர்ஷிப், மாருதியின் அடுத்துவரும் பிரிமியம் ஹேட்ச்பேக்கான பெலினோவின் நிழல்படத்தை, முதல் படமாக (டீஸர்) வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் மூலம், வேறு ஏதாவது பெயர்கள் வைக்கப்படலாம் என்று முன்னர் வெளியான அனுமானங்களை போல இல்லாமல், இந்த காருக்கு பெலினோ என்று அந்நிறுவனம் பெயரிடப் போவது தெளிவாகி உள்ளது. ஏற்கனவே தெரிந்தது போல, இந்த காரை வரும் அக்டோபர் மாதம் அறிமுகம் செய்ய போவதாக, அந்நிறுவனத்தின் இணையதளம் காட்டுகிறது.
ஹூண்டாய் எலைட் i20 மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுடன், பெலினோ போட்டியிட உள்ளது. இந்த காரின் நீளம் 3995 mm, அகலம் 1745 mm, உயரம் 1470 mm என்ற அளவுகளின் மூலம் நமக்குள் ஒரு உருவம் கிடைக்கிறது. ஏனெனில் i20-யின் நீளம் 3985 mm, அகலம் 1734 mm மற்றும் உயரம் 1505 mm என்ற அளவுகளை கொண்டுள்ளது.
அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆராய்ந்து பார்த்தால், இந்தியாவில் நன்கு பழக்கப்பட்ட 2 என்ஜின்களை இந்த கார் பெற்றுள்ளது. ஏற்கனவே சியஸ் காரில் பயன்படுத்தப்பட்டு வரும் 1.2-லிட்டர் VTVT பெட்ரோல் மற்றும் புதியதாக அறிமுகம் செய்யப்பட்ட 1.3-லிட்டர் SHVS டீசல் ஆகிய என்ஜின்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் போட்டியை இன்னும் வலுப்படுத்தும் வகையில், டீசல் என்ஜின் மூலம் லிட்டருக்கு 28 கி.மீ என்ற சிறப்பான மைலேஜை அளிக்கலாம் என்று தோன்றுகிறது. ஐரோப்பிய சந்தைக்காக, புதிதாக வடிவமைக்கப்பட்ட 1.0-லிட்டர் பூஸ்ட்டர் ஜெட் என்ஜின் (டர்போ பெட்ரோலின் ஒரு வகை) பொருத்தப்பட்ட புதிய பெலினோவை, சுசுகி நிறுவனம் அளிக்க உள்ளது.
இந்த காரின் உட்புறத்தில், பிரிவிலேயே அதிகபட்சமான 354 லிட்டர் பூட்ஸ்பேஸைக் கொண்டு, பரிணாமத்தில் ஜாஸ் காரை விட 1 லிட்டர் கூடுதலாக கொண்டுள்ளது. காரின் உள்ளே தாராளமான இடவசதி இருப்பதால், இருக்கைகள் அதிக வசதியாக காணப்படுகிறது. மேலும் ஸ்மார்ட்ப்ளே டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மெண்ட் அமைப்பு உடன் நேவிகேஷன் வசதியும் இருப்பதால், தகவல்களை உடனுடன் பெறவும், எளிமையாகவும் உள்ளது.
0 out of 0 found this helpful