மாருதி YRA என்ற பெலெனோ-வின் தயாரிப்பு இந்தியாவில் துவங்கியது
published on செப் 10, 2015 03:04 pm by nabeel for மாருதி வைஆர்ஏ
- 11 Views
- 4 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
இந்த பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட மாருதியின் YRA என்று அறியப்படும் பெலெனோவின் இந்திய தயாரிப்பு பணிகளை, அந்நிறுவனத்தின் மானேசர் தொழிற்சாலையில் துவக்கப்பட்டுள்ளது. அடுத்து நடக்க உள்ள பிராங்போர்ட் மோட்டார் ஷோவில், தயாரிப்பாளர் மூலம் இந்த ஹாட்ச்பேக் காட்சிக்கு வைக்கப்பட உள்ளது. ஐரோப்பிய சந்தைக்கு தேவையான ஆரம்பக் கட்ட தயாரிப்பு பணிகள் முடிந்துள்ளதாகவும், இந்தியாவிற்கான தயாரிப்பு பணிகளை மாருதி நிறுவனம் விரைவில் துவங்கப் போவதாகவும், சில தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காரில், ஒரு புதிய 1-லிட்டர் பூஸ்டர் ஜெட் (டர்போ-பெட்ரோல்) அல்லது பெட்ரோல் வகைகளுக்கான 1.2 K-சீரிஸ் என்ஜின் மற்றும் ஒரு புதிய 1.5-லிட்டர் டீசல் அல்லது 1.3-லிட்டர் DDiS என்ஜின் ஆகியவை பொருத்தப்பட்டு, அவை 90bhp ஆற்றலையும், 200Nm முடுக்குவிசையையும் அளித்து, தற்போது சியஸ் டீசல் கார்களில் ஆற்றலை அளிக்கும் SHVS உடன் இணைந்து செயலாற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச சந்தைக்கான கார்கள் 4 மீட்டருக்கும் அதிக நீளம் கொண்டவை. ஆனால் இதன் கார் பம்பர்களில் தயாரிப்பாளர் தரப்பில் சில மாற்றங்களை செய்து, அதை சப்-4 மீட்டர் ஹாட்ச்பேக்காக உருவாக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது S கிராஸ் கார்களை விற்பனை செய்யும் மாருதியின் பிரிமியம் வரிசையில் காணப்படும் நெக்ஸா ஷோரூம்களில், இந்த YRA-யும் விற்பனை செய்யப்படலாம். இந்த பிரிமியம் ஹாட்ச்பேக், இந்தியாவில் உள்ள எலைட் i20, வோல்ஸ்வேகன் போலோ மற்றும் ஹோண்டா ஜாஸ் ஆகிய கார்களுக்கு போட்டியாக அமையும்.
இந்த ஹாட்ச்பேக்கின் முதல் காரை வைத்து, தயாரிப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கொண்டாடுவதை இங்குள்ள படங்கள் காட்டுகின்றன. படத்தில் காணப்படும் போர்டில் ‘YRA 1st Veh’ என்று குறிப்பிடப்பட்டுள்ளதில் இருந்து, இந்தியாவில் இன்னும் இந்த காரை YRA என்றே அழைக்கின்றனர் என்று அறிந்து கொள்ளலாம். இதனால் இந்திய வாடிக்கையாளர்கள் இடையே பெலெனோ என்ற பெயர், ஒரு நல்ல புகழை பெற வாய்ப்பில்லை என்றே தோன்றுகிறது.
0 out of 0 found this helpful