மாருதி சுசூக்கி ஸ்விஃப்ட் டிசையர் ‘உயர்தரமான மில்லியன் அமைப்பு” (எலைட் மில்லியன் கிளப்) என்ற பிரிவில் இணைகிறது
published on ஆகஸ்ட் 03, 2015 11:15 am by nabeel for மாருதி டிசையர் 2017-2020
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
கடந்த 3 வருட காலமாக மிகச்சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருந்த மாருதி சுசூக்கி ஸ்விஃப்ட் டிசையரின் செயல்திறனுக்கு மேலும் சிறப்பு சேர்க்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த கார் 1 மில்லியன் விற்பனையைத் தாண்டிச் சென்றுவிட்டதால், அல்டோ, ஸ்விஃப்ட் மற்றும் வேகன் R ஆகிய மாருதி கார்கள் உள்ள ‘உயர்தரமான மில்லியன் அமைப்பு” (எலைட் பில்லியன் கிளப்) என்ற பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது.
2008 ஆம் ஆண்டு இந்த கார் அறிமுகப்பட்டதிலிருந்து, இந்த நொடிப் பொழுது வரை இந்தியர்களின் மனதில் தனி இடத்தைத் தக்க வைத்துள்ளது. இதன் வசீகரிக்கும் அமைப்புகள் என்னவென்று பார்க்கும்போது, இதன் உறுதியான வடிவமைப்பும், குறைந்த பராமரிப்பு மற்றும் சிக்கனத்தன்மை போன்றவை முன் நிற்கிறது. இந்த சிக்கன வாகனமானது, 20.85 kmpl 1.2 லிட்டர் பெட்ரோல் கார்களுக்கும், 26.59kmpl 1.3 லிட்டர் டீசல் வகைகளுக்கும் தருகிறது.
கச்சிதமான செடான் ஸ்விஃப்ட் டிசையர் கார் தற்போது அல்டோ (2.83 மில்லியன் கார்கள், மாருதி 800 (2.67 மில்லியன் கார்கள்), ஆம்னி (1.68 மில்லியன் கார்கள்), மற்றும் வேகன் ஆர் (1.68 மில்லியன் கார்கள்) தர வரிசையில் அட்டகாசமாக சேர்ந்து கொண்டது.
வெற்றிக் களிப்பில் உள்ள மாருதி சுசூக்கி நிறுவனம், அதனைக் கொண்டாடும் வகையில் ஒரு அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது. “இனிப்பு எங்களிடம் உள்ளது” (த ஸ்வீட்ஸ் ஆர் ஆன் அஸ்) என்ற இந்த பிரச்சாரத்தின் மூலம், தற்பொழுதைய ஸ்விஃப்ட் டிசையர் உரிமையாளர்கள் அனைவருக்கும் தபால் மூலம் நாவில் நீர் சுரக்கும் அருமையான இனிப்புகளும், கூக்கீஸ்களும் அனுப்பிவைக்கப்படும். மேலும், நாடு முழுவதும் உள்ள பெரிய மால்களில் இனிப்புகள் மூலம் செய்யப்பட அழகிய கலைப் படைப்புகள் வைக்கப்படும்.
உணவுத் திருவிழா கொண்டாட்டத்தைத் தவிர ஸ்விப்ட்டின் இந்த மாடலில் டீசல் வகையை அறுமுகப்படுத்த உள்ளது. இந்த புது வகையில், ஆளியக்கி மற்றும் தானியங்கி பல்லிணைப்புப் பெட்டியும் (கியர் பாக்ஸ்) பொருத்தப்பட உள்ளது. ஸ்விஃப்ட் டிசையரின் இந்த ரக கார்கள் அடுத்து வரும் திருவிழா காலங்களில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்றுமொரு சுவையான செய்தி என்னவென்றால், ஆப்ரிக்கா, தென் அமெரிக்க, மத்திய அமெரிக்க, மத்திய கிழக்கு ASEAN மற்றும் SAARC நாடுகளில் ஸ்விஃப்ட் டிசையர் அறிமுகப்படுத்தபட உள்ளன.
வியத்தகு விற்பனையாக, ஜூன் 15 வரை பதிவுசெய்யப்பட்ட ஒட்டுமொத்த ஏற்றுமதி கார்கள், 50,000 என்ற இலக்கத்தை எட்டியுள்ளது. மாருதி சுசூக்கி இந்தியாவின் சந்தையிடுதல் மற்றும் விற்பனைப் பிரிவு நிர்வாக இயக்குனர், திரு. ஆர். எஸ். கல்சி ஸ்விஃப்ட் டிசையரைப் பற்றிப் பேசும்போது, “ஸ்விஃப்ட் டிசையர் ஒரு முழுமையான தொகுப்பு என்று கூறுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அதாவது, அதன் புத்துணர்வு தரும் தோற்றம், அருமையான உபகரணங்கள் பட்டியல், மேம்பட்ட எரிபொருள் திறன் இவற்றை வடிக்கையாள்ளார்கள் மிகவும் விரும்புகிறார்கள். இத்தகைய வரவேற்பு மாருதி சுசூக்கியின் விற்பனையைச் சூடுபிடிக்க வைத்துள்ளது. மேலும், வாகனச் சந்தையில் உள்ள கடுமையான போட்டியை எதிர்நோக்கும் தைரியத்தையும், ஊக்கத்தையும் கொடுத்து சந்தையில் எங்களது பங்கை உயர்த்தியுள்ளது. அனைத்து டிசையர் வாடிக்கையாளர்களுக்கும், அவர்களது அன்பார்ந்த ஆதரவிற்காக எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்”.
டிசையர், அடிப்படையில் ஸ்வீப்ட்டின் வெற்றிகரமான அமைப்புகளைக் கொண்டிருந்தாலும், அதன் கம்பீரமான தோற்றத்திலும், அதீதமான வசதிகளும், இருப்பத்திலேயே சிறந்த மைல்கல் அளவு (மைலேஜ்) 26.59 km/l (டீசல் வகைகளில்) போன்ற அம்சங்களுடன் தனிச்சிறப்பு வாய்ந்ததாக சந்தையில் உலா வந்து கொண்டிருக்கிறது.
தற்பொழுது, டிசையர் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் கிடைக்கிறது. மேலும், காரின் இயந்திரத்தை உயிர்பிக்கவும்/நிறுத்துவதற்கும் பொருத்தப்பட்ட எளிமையான அழுத்தும் பொத்தானும், பின்னோக்கி சென்று நிறுத்த உதவும் வசதியும், புதுமையான அலாய் சக்கரங்களும், ஒலி அமைவுடன் (ஆடியோ) கூடிய புளுடூத் வசதியும் சிறந்த அம்ஸங்களாக போற்றப்படுகிறது. இந்தியாவின் பயணிகள் வாகன சந்தையில் அதிக விற்பனையாகும் 5 கார்களின் வரிசையில், ஸ்விஃப்ட் டிசையர் மட்டுமே செடான் வகை காராக இருக்கிறது.
பிரிக்கப்பட்ட ஸ்வீப்ட் டிசையர் விற்பனை புள்ளிவிவரம்:
- 100,000 கார்கள்: செப்டெம்பர் 09 (19 மாதங்கள்)
- 200,000 கார்கள்: செப்டெம்பர் 10 (12 மாதங்கள்)
- 300,000 கார்கள்: செப்டெம்பர் 11 (12 மாதங்கள்)
- 500,000 கார்கள்: செப்டெம்பர் 13 (16 மாதங்கள்)
- 700,000 கார்கள்: ஜனவரி 14
- 900,000 கார்கள்: ஜனவரி 15
ஸ்விஃப்ட் டிசையர் விருதுகள்
- அறிமுகப்படுத்தப்பட்ட ஆண்டு முதல் ஆரம்ப நிலை நடுத்தர கார் பிரிவில் ஜே. டி. பவர் APEAL விருதைத் தொடர்ச்சியாக ஐந்து வருடங்களாக வாங்கிக் கொண்டிருக்கிறது.
- 2008, 2010, 2011, மற்றும் 2012 ஆண்டுகளில் ஆரம்ப நிலை நடுத்தர கார் பிரிவில் JD பவர் IQS விருதை வாங்கியுள்ளது.
- 2011- இல், தொடக்கநிலை நடுத்தர கார் பிரிவிற்கான JD பவர் சார்ந்திருக்கும் விருதை வாங்கியுள்ளது.
- 2010 இல், தொடக்க நிலை நடுத்தர பிரிவில் TNS மொத்த வாடிக்கையாள்ளார்களின் திருப்தி ஆய்வில் முதலாவது இடத்தைப் பிடித்துள்ளது.
0 out of 0 found this helpful