சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மாருதி சுசுகி செலேரியோவின் அனைத்து வேரியண்ட்களுக்கும் ஏர் பேக்குகள் மற்றும் ABS வசதிகள் கிடைக்கின்றது

bala subramaniam ஆல் டிசம்பர் 03, 2015 12:50 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
16 Views

மாருதி சுசுகி நிறுவனம், தனது செலேரியோ கார்களுக்கு டூயல் ஏர் பேக்குகள் மற்றும் ABS வசதிஆகியவை ஆப்ஷனாகக் கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. அடிப்படை வெர்ஷன் கார்களுக்கு கூட இந்த வசதி தரப்படுகிறது என்பது சிறப்பு செய்தியாகும். 2014 -ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட செலேரியோ கார், AMT டெக்னாலஜியை மிகவும் பிரபலப்படுத்தியது என்று கூறினால் அது மிகையாகாது. அறிமுகமான நாள் முதல் இதுவரை 1.3 லட்சம் செலேரியோ கார்கள் விற்பனையாகியுள்ளது. மாருதி சுசுகி ஏர் பேக்குகள் மற்றும் ABS அமைப்பு பொருத்தப்பட்ட செலேரியோ காரின் ஆரம்ப விலை, ரூ. 4.16 லட்சம் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி இந்தியா நிறுவனத்தின், மார்கெட்டிங் சேல்ஸ் பிரிவின் எக்ஸிக்யூடிவ் டைரக்டர் திரு. R S கல்சி, “செலேரியோ மூலம், நாங்கள் எப்போதும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்ததையே வழங்க முயற்சி செய்து வருகிறோம். டிரைவர் மற்றும் இணை டிரைவர்களுக்கான ஏர் பேக்குகள், ஆன்ட்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் (ABS) ஆகியவற்றை செலேரியோ காரின் அடிப்படை வகைகளிலேயே வழங்குவதன் மூலம், மேலும் புதிய வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும் என்று நம்புகிறோம். பாதுகாப்பு விதிகளை கடுமையாக்குவதற்கு முன்பே, செலேரியோ காரில் பாதுகாப்பு அம்சங்களை அறிமுகப்படுத்தியத்தை எண்ணி நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்,” என்றார்.

மாருதி சுசுகியின் பட்டறையில் இருந்து வெளிவந்த, காம்பாக்ட் 800 cc டீசல் இஞ்ஜின் பொருத்தப்பட்ட முதல் கார் செலேரியோ ஆகும். மேலும், இதன் பிரிவிலேயே முதல் முதலாக 3 வித ஃப்யூயல் ஆப்ஷங்களுடன் வருகிறது (பெட்ரோல், டீசல் மற்றும் CNG). பெட்ரோல் செலேரியோ காரில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் இஞ்ஜின் பொருத்தப்பட்டு 6000 rpm அளவில் 67 hp சக்தி மற்றும் 3500 rpm அளவில் அதிகபட்சமாக 90 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 800 cc டீசல் இஞ்ஜின் 3500 rpm அளவில் 47 hp சக்தியையும், 2000 rpm அளவில் 125 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது. 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மூன்று விதமான இஞ்ஜின் ஆப்ஷங்களிலும் இணைக்கப்பட்டு வருகிறது. ஆனால், 4 ஸ்பீட் AMT பெட்ரோல் வகையில் மட்டும் இணைக்கப்பட இருக்கிறது.

Share via

Write your Comment on Maruti Cele ரியோ 2017-2021

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புதிய வேரியன்ட்
Rs.6.23 - 10.19 லட்சம்*
புதிய வேரியன்ட்
Rs.4.70 - 6.45 லட்சம்*
எலக்ட்ரிக்புதிய வேரியன்ட்
Rs.7 - 9.84 லட்சம்*
எலக்ட்ரிக்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை