மாருதி சுசுகி பலினோ ஹேட்ச்பேக் கார்கள் எந்தவித மறைப்புமின்றி பார்க்கப்பட்டது.
published on அக்டோபர் 08, 2015 12:55 pm by sumit for மாருதி பாலினோ 2015-2022
- 12 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மாருதி சுசுகி நிறுவனத்தின் ஹேட்ச்பேக் வகை காரான பலினோ புனே நகர வீதிகளில் எந்த விதமான மறைப்புகளும் இன்றி வாகன ஆர்வலர்களின் ஆவலைத் தூண்டும் விதத்தில் கண்ணில் தென்பட்டது. பேட்ஜ் (பெயரைக் காட்டும் சின்னம் ) மறைக்கப்பட்டிருந்தாலும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் பகட்டாக காட்சியளித்தது..
காருக்கான (பதிவு) புக்கிங் தொடங்கி முழு வீச்சில் நடந்து வரும் இந்நேரத்தில் அநேகமாக இந்த கார் விற்பனை செய்யப்பட இருக்கும் நெக்ஸா ஷோரூம் ஒன்றிற்கு தான் சென்று கொண்டிருக்கும் போது தான் கண்ணில் பட்டது என்று யூகிக்கப்படுகிறது .இந்த பலினோ கார்கள் பெட்ரோல்- மற்றும் டீசல் ஆப்ஷன்களில் வெளிவந்துள்ளது.. பெட்ரோல் ஆப்ஷன் கார்களில் தானியங்கி (ஆடோமேடிக் ) அல்லது கைகளால் இயக்கக்கூடிய (மேனுவல் ) 5 - வேக கியர்பாக்ஸ் அமைப்பு பொருத்தப்பட்டு வாடிக்கையாளர் தன் தேவைகேற்ப தேர்ந்தெடுத்துக்கொள்ள கூடிய வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டீசல் என்ஜினைப் பொறுத்தவரை கைகளால் இயக்கக்கூடிய (மேனுவல்) 5 - வேக கியர்பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது என்பது இங்கே கவனிக்கபட வேண்டிய செய்தியாகும். உட்புறத்தில் முழுதும் கருப்பு வண்ணம் கொடுக்கப்பட்டு இன்ஸ்ட்ருமென்ட் க்ளஸ்டர் மற்றும் ஸ்டீரிங் வீல் போன்றவற்றில் வெள்ளி நிற மற்றும் குரோம் பூச்சு கொடுக்கப்பட்டு நேர்த்தியாக்கப்பட்டிருக்கிறது . சியஸ் மற்றும் எஸ் - கிராஸ் கார்களில் உள்ளது போன்ற 7 - அங்குல ஸ்மார்ட்ப்ளே இன்போடைன்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டுள்ளது. . வெளிப்புற தோற்றத்தில் , புதுமையான வடிவமைப்பு தத்துவத்தை பின்பற்றி பலினோ கார்களில் 'V' வடிவிலான முன்புற க்ரில் , கூரையின் ஒரு பகுதியில் மட்டும் உள்ள பார்ஷியல் ப்லோடிங் ரூப், ஸ்லோபிங் ரூப் லைன் , பின்புற ஸ்பாயிலர்கள் மற்றும் புதிய சுசுகி அல்லாய் சக்கரங்கள் போன்ற புதிய மாற்றங்களையும் இந்த பலினோ பெற்றுள்ளது.
செப்டம்பர் 15 பிராங்க்பர்ட் IAA மொடார்ஷோவில் முதலில் காட்சிக்கு வைக்கப்பட்ட இந்த பலினோ கார்கள், இந்த மாதம் 26 ஆம் ததி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார்களை விற்பனை செய்யப் போகும் நெக்ஸா டீலர்ஷிப் அதிகாரப்பூர்வ வலை தளத்தில் இந்த வாரத்தில் பலினோ பற்றிய தகவல்கள் வெளியிடப்பட்டது. . இந்த காரின் மேல் ஒரு நியாமான எதிர்பார்ப்பை மாருதி நிறுவனம் கொண்டுள்ளது என்று சொல்லலாம். மேலும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெட்ரோல் கார்களுக்கு கூடிவரும் ஆர்வத்தை பார்க்கும் போது இந்த புதிய பலினோ நிச்சயம் பெரிதாக சாதிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
0 out of 0 found this helpful