• English
    • Login / Register

    மாருதி சுசுகி பலேனோ ரூ.4.99 லட்சங்களுக்கு அறிமுகமானது.

    மாருதி பாலினோ 2015-2022 க்காக அக்டோபர் 26, 2015 04:21 pm அன்று akshit ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 17 Views
    • 23 கருத்துகள்
    • ஒரு கருத்தை எழுதுக

    டெல்லி:

    மாருதியின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவு காரான மாருதி சுசுகி பலேனோ ரூ. 4.99 லட்சங்களுக்கு அறிமுகமானது. இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பாளர்களான மாருதி சுசுகி நிறுவனம் தங்களது நெக்ஸா டீலர்ஷிப் மூலம் விற்பனை செய்யும் இரண்டாவது வாகனம் இந்த பலேனோ என்பது குறிப்பிடத்தக்கது, ஏற்கனவே எஸ் - கிராஸ் நெக்ஸா மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சுமார் பாத்து வருடத்திற்கு முன்னர் அறிமுகமான செடான் வகை காரான பலேனோவின் பெயரையே பயன்படுத்திக் கொண்டுள்ள இந்த கார்கள் ஹயுண்டாய் எளிட் i20, ஹோண்டா ஜாஸ் மற்றும் வோல்க்ஸ்வேகன் போலோ கார்களுக்கு போட்டியாக களமிறங்கி உள்ளன. இந்த பலேனோ கார்களில் டாப் - எண்டு மாடல், அனைத்து வித சிறப்பம்சங்களையும் உள்ளடக்கி , இந்த வகை காரை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர் எந்த வித எதிர்பார்ப்பை கொண்டிருப்பாரோ அவை அனைத்தையும் பூர்த்தி செய்யும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ப்ரோஜெக்டர்கள், பகலில் ஒளிரும் விளக்குகள், கிளைமேட் கண்ட்ரோல் அமைப்பு, வண்ண TFT தகவல் தொடர்பு ஸ்க்ரீன், பார்கிங் கேமெரா வசதியுடன் கூடிய 7 - அங்குல டச் ஸ்க்ரீன் மற்றும் செயற்கைகோள் உதவியுடன் கூடிய நேவிகேஷன் சிஸ்டம் மற்றும் இந்த பிரிவு கார்களிலேயே முதல் முறையாக இணைக்கப்பட்டுள்ள ஆப்பிள் கார்ப்ளே அம்சம் ஆகியவற்றை குறிப்பிட்டு சொல்லலாம்.

    இதையும் படியுங்கள் : மாருதி சுசுகி பலேனோ: கார்தேகோ வழங்கும் ஒரு முழுமையான தொகுப்பு

    3995மி.மீ நீளம் , 1745மி.மீ அகலம், 1470மி.மீ உயரம் கொண்டுள்ள இந்த பலேனோ , ஸ்விப்ட் கார்களின் அளவான 3,850மி.மீ நீளம் மற்றும் 1,695மி.மீ அகலத்தை விட கூடுதலான அளவுகளைப் பெற்றுள்ளதை காண முடிகிறது. ஆனால் இஞ்சின் ஆப்ஷன்கள் ஸ்விப்ட் கார்களை போலவே இருக்கிறது. பெட்ரோல் வேரியன்ட்கள் 83bhp   சக்தி கொண்ட 1.2 லிட்டர் K12  என்ஜின் மூலம் சக்தியூட்டப்படுகிறது. டீசல் ஆப்ஷனைப் பொறுத்தவரை ஏற்கனவே முயன்று சோதிக்கப்பட்ட பியட் இடம் இருந்து பெறப்பட்ட 74bhp  சக்தி கொண்ட 1.3  DDiS மோட்டார் மூலம் சக்தியூட்டப்படுகிறது. இரண்டு வகை என்ஜின் ஆப்ஷன்களுமே 5 - வேக கியர் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் வேரியன்ட்களில் மட்டும் கூடுதல் ஆப்ஷனாக ஆட்டோமேடிக் CVT ட்ரேன்ஸ்மிஷன் வசதி கொண்ட மாடலும் உள்ளது.

    மற்ற மாருதி சுசுகி நிறுவனத்தின் கார்களைப் போலவே பலேனோ கார்களும் அற்புதமான மைலேஜ் தரும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மாடல் லிட்டருக்கு 21.40 கி.மீட்டர் மைலேஜ் தரும் என்றும் டீசல் மாடல் இந்த பிரிவு கார்களிலேயே மிக அதிகபட்சமாக லிட்டருக்கு 27.39 கி.மீ மைலேஜ் தரும் என்று மாருதி நிறுவனத்தினரால் பெருமையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

     

    பெட்ரோல்

    விலை (எக்ஸ் - ஷோரூம் )

    சிக்மா

    ரூ. 4,99,000

    டெல்டா

    ரூ. 5,71,000

    செட்டா 

    ரூ. 6,31,000

    ஆல்பா

    ரூ. 7,01,000

    சிவிடி

    ரூ. 6,76,000

     

    டீசல்

    விலை (எக்ஸ் - ஷோரூம்)

    சிக்மா 

    ரூ. 6,16,000

    டெல்டா

    ரூ. 6,81,000

    செட்டா

    ரூ. 7,41,000

    ஆல்பா 

    ரூ. 8,11,000

    இதையும் படியுங்கள்:

    was this article helpful ?

    Write your Comment on Maruti பாலினோ 2015-2022

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience