மாருதி பலேனோ பிரத்தியேக புகைப்படங்கள்: அசத்தலான புகைப்பட கேலரி
published on அக்டோபர் 16, 2015 12:34 pm by cardekho for மாருதி பாலினோ 2015-2022
- 11 Views
- 2 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர்: மாருதி நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ப்ரீமியம் ஹேட்ச்பேக் வகை காரான பலேனோ கார்களை அக்டோபர் 26 ஆம் தேதி அறிமுகம் செய்கிறது. இந்த முற்றிலும் புதிய ப்ரீமியம் ஹேட்ச்பேக் பிரிவு கார்கள் மாருதியின் நெக்ஸா டீலர்ஷிப் மூலமாக விற்பனை செய்யப்பட உள்ள இரண்டாவது வாகனமாகும். ஏற்கனவே மாருதி எஸ் - கிராஸ் நெக்ஸா டீலர்ஷிப் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருவது நாம் அறிந்த செய்தியே. இந்த முற்றிலும் புதிய ஹேட்ச்பேக் கார்கள் ப்லோவிங் பாடி ஷேப், எடுப்பான DRLகள் உடன் கூடிய ப்ரொஜெக்டர் முகப்பு விளக்குகள் மற்றும் LED டெயில் விளக்குகள் என்று வெளிப்புற தோற்றத்தைப் பொறுத்தவரை படு நேர்த்தியாக காட்சியளிக்கிறது. உட்புறம் முழுதும் கருப்பு நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு ஆங்காங்கே வெள்ளி செருகல்கள் மற்றும் குரோம் பூச்சுக்கள் கொடுக்கப்பட்டு மிகவும் அழகாக காட்சியளிக்கிறது. கீழே கொடுக்கப்பட்டுள்ள பலேனோ கார்களின் பிரத்தியேகமான புகைப்பட தொகுப்பை கண்டு மகிழுங்கள். இந்த படங்களில் உட்புறம் மற்றும் வெளிப்புற தோற்றம் மிகத தெளிவாக படம்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் பலேனோ பற்றிய சூடான தகவல்களுக்கு எங்கள் வலைதளத்தை தொடர்ந்து கவனியுங்கள்!
இதையும் பாருங்கள்: