பெலினோ என்று அறியப்படும் YRA- வெறும் தோற்றத்தில் மட்டும் தான் கவர்கிறதா?
published on அக்டோபர் 01, 2015 02:08 pm by nabeel for மாருதி வைஆர்ஏ
- 13 Views
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
தோற்றத்தில் உங்களை மிரள வைக்கும், அம்சங்களை காட்டி கவரும், உங்களுடன் இருந்தால் கவுரவத்தை அளிக்கும். ஆனால் பெலினோ இப்படி தோற்றத்தில் மட்டும் தான் சிறப்பானதா? என்பதை கண்டறிவோம்.
இந்திய சந்தைக்கு அளிக்கும் புத்தம் புதிய தயாரிப்பிற்காக, மாருதி நிறுவனம் கடினமாக உழைத்துள்ளதாக தெரிகிறது. தோற்றத்தில் சிறப்பாக அமைந்து ஒரு பிரிமியமாக நினைக்க செய்து, மாருதியின் புதிய பிளாட்பாமில் கடினமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரிமியம் கிராஸ்ஓவரான S கிராஸிற்கு பிறகு, பிரிமியம் கார்களின் வரிசையில் நுழைவதற்கு, இது அந்நிறுவனம் மேற்கொள்ளும் இரண்டாவது முயற்சி ஆகும். இந்த கிராஸ்ஓவரால் மாருதிக்காக, அந்த திறனை வெளிப்படுத்த முடியாமல் போனாலும், பெலினோவின் மூலம் அந்த வெற்றியை பெற முடியும் என்று மிகப்பெரிய வாகன தயாரிப்பாளரான அந்நிறுவனம் நம்புகிறது.
வடிவமைப்பு
மாருதி பெலினோ மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பில் முக்கிய அம்சமாக, ‘V’ வடிவிலான முன்புற கிரிலில் கிரோம் வரிகளைக் கொண்டு, இந்த வாகன தயாரிப்பாளரின் முத்திரையை பெற்றுள்ளது. மேலும் தடித்த முன்புற பம்பர் மற்றும் உள்நோக்கி அமர்ந்த நிலையில் காணப்படும் ஹெட்லெம்ப்கள் ஆகியவை சேர்ந்து, இந்த காரின் முன்புற அமைப்பிற்கு ஒரு புதுமையான தோற்றத்தை அளிக்கிறது. வடிவமைப்பு மூலம் சுசுகியை ஒத்திருந்தாலும், பெலினோவை பார்த்துவிட்டு இது மாருதியின் தயாரிப்பு அல்ல என்று யாரும் கூறமாட்டார்கள். ஆனால் இவர்களின் சொந்த முதலீடுகளில், இந்த ஹேட்ச்பேக் ஒரு புதிய வடிவமைப்பின் துவக்கம் ஆகும். பக்கவாட்டு பகுதிக்கு சென்றால், நம் கண்களுக்கு தெரியும் முதல் காரியமே, பாதி மிதக்கும் கூரை (பார்டியல் ஃப்ளோட்டிக் ரூஃப்) தான். இந்த காருக்கு இது ஒரு கூடுதல் தன்மையை அளிப்பது மட்டுமின்றி, அதற்கு கொஞ்சம் ஸ்போர்ட்டியான தோற்றத்தையும் அளிக்கிறது.
இந்த ஹேட்ச்பேக்கில் உள்ள சரிந்த ரூஃப் லைன் உடன் திடமான வீல் ஆர்ச்சுகள், பின்புற ஸ்பாய்லர் மற்றும் புதிய சுசுகி அலாய்கள் ஆகியவை காணப்படுகிறது. காரின் பின்புற கிளாஸின் கீழ்பகுதியை ஒட்டிய நிலையில் தடித்த கிரோம்கள் செல்கின்றன. பின்புறத்தில் உள்ள பெரிய பம்பரில் ஒரு மாற்றத்திற்காக பூட் கேட் அமைக்கப்பட்டிருப்பது நன்றாக காட்சி அளிக்கிறது. பின்புற லைட்கள் கச்சிதமாக மற்றும் சிறப்பாக காட்சி அளிக்கின்றன. இதன் மேல்புறத்தில் 6 LED-களை கொண்டும், நடுவே டேன் இன்டிகேட்டர் உடன் சிகப்பு நிற கிளாஸ் மற்றும் ஒரு தெளிவான லென்ஸ் ஆகியவற்றின் கலவையை காண முடிகிறது. இந்த காரின் ஒட்டுமொத்த வடிவமைப்பும், புதுமையாக மற்றும் கவர்ச்சிகரமாக இருப்பதால், மாருதியின் விரும்பிகளையும், மாருதியின் விமர்சகர்களையும் ஒருங்கே கவர்ந்திழுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த காரின் தோற்றம் அட்டகாசமாக இருப்பது நமக்கு ஏற்கனவே தெரியும் என்பதால், இதோடு முடித்து கொள்வோம். அடுத்தபடியாக, சற்று ஆழமாக சென்று, இந்த காரின் உள்ளார்ந்த தன்மைகள், வெளித்தோற்றத்தோடு ஒத்துப் போகிறதா என்று காண்போம்.
என்ஜின்
பெலினோ பார்வைக்கு வலிமை மிகுந்ததாக தெரிந்தாலும், அதற்கு வாடிக்கையாளர்களின் இதயத்திற்குள் ஊடுருவி செல்லும் ஆற்றல் இருக்கிறதா என்பதை காண்போம். இந்த கார் 1.2-லிட்டர் VVT பெட்ரோல் என்ஜின் மூலம் இயங்கி, 83bhp ஆற்றலையும் 115Nm முடுக்குவிசையையும் அளிக்கிறது. இதை உங்களுக்கு புரியும் வகையில் கூற வேண்டுமானால், இந்தியாவில் இந்த காரின் முக்கிய போட்டியாளரான எலைட் i20-யின் தன்மைகள் கூட ஏறக்குறைய இதைபோலவே உள்ளது. டீசல் வகையில் 1.3-லிட்டர் DDiS200 என்ஜின் மூலம் இயங்கி, 90bhp ஆற்றலையும் 200Nm முடுக்குவிசையையும் அளிக்கிறது. இந்த காருக்கு சுசுகியின் புதிய SHVS தொழில்நுட்பம் கொண்ட என்ஜினும் வழங்கப்பட்டு, ஸ்டார்ட்-ஸ்டாப் செயல்பாடுகள் மற்றும் சிறப்பான மைலேஜை அளிக்கிறது. SHVS சியஸ் கார் 1595 கிலோ எடையை கொண்டு, லிட்டருக்கு 28.09 கி.மீ. மைலேஜ் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக, பெலினோ கார் ஏறக்குறைய 1200 கிலோ எடையை கொண்டு, குறுகிய வீல்பேஸ்களை பெற்றிருப்பதால், எரிபொருள் சிக்கனத்தில் லிட்டருக்கு 30 கி.மீ. வரை மைலேஜ் அளிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உள்புற அமைப்பு மற்றும் அம்சங்கள்
பெலினோ பார்வைக்கு மட்டுமல்ல, உள்புறத்திலும் ஒரு பிரிமியம் என்பதை உணர முடிகிறது. கேபின் சிறப்பாக அமைக்கப்பட்டு, அதை கருப்பு தீம் மூலம் சூழப்பட்டு, அதன்மீது சில்வர் வரிகள் காணப்படுகிறது. ஸ்டீயரிங் வீல் மற்றும் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளெஸ்டர் மீது கிரோம் மேற்கோள்களை காணலாம். இந்த அம்சங்களின் பட்டியலில், கேபினின் டேஸ்போர்டின் நடுவே உள்ள 7-இன்ச் ஸ்மார்ட்ப்ளே இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும் சேர்ந்துள்ளது. இது சியஸ் மற்றும் S-கிராஸ் ஆகிய கார்களில் இருந்து பெறப்பட்டது. நெக்ஸா வரிசையில் அமைந்த ஷோரூம்களில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த கார், வாடிக்கையாளர்களுக்கு ஒரு பிரிமியம் காரின் உணர்வை அதிகளவில் அளிக்கும்.
இந்தியாவில் இந்த கார் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இதன் ஓட்டும் திறன் மற்றும் கையாளுதல் ஆகியவை குறித்த தகவல்கள் வெளியிடப்படும். அதை தவிர, இந்த கார் ஒரு ஆல்ரவுண்டராக இருப்பதால், போட்டியிடுவதற்கு ஏற்ற ஆற்றலை நிச்சயம் கொண்டுள்ளது.
0 out of 0 found this helpful