2016 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்படவுள்ள மாருதி சுசுகி கார்களின் பட்டியல் அறிவிப்பு
modified on ஜனவரி 19, 2016 04:43 pm by raunak
- 19 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி சுசுகியின் காட்சி அரங்கில், 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்ட விட்டாரா பிரேஸ்ஸா காம்பாக்ட் SUV மற்றும் சுசுகி இக்னிஸ் மைக்ரோ SUV என்ற இரண்டு கார்களும் பிரதானமாகக் காட்சிப்படுத்தப்படும்.
இந்திய வாகன சந்தையில் முன்னணியில் உள்ள ‘மாருதி சுசுகி நிறுவனம் மாறிக் கொண்டிருக்கிறது’ என்று இந்நிறுவனம் கூறுகிறது. 2016 ஆட்டோ எக்ஸ்போவில் சுசுகியின் காட்சி அரங்கு, ‘மாற்றம்’ (டிரான்ஸ்பர்மெஷன்) என்னும் கருப்பொருளில் (தீம்) அமைக்கப்படும் என்று இந்நிறுவனம் அறிவித்துள்ளது. மாற்றம் என்பது சீராக திட்டமிடுவது மட்டுமில்லை, மாற்றத்தை செயலில் கொண்டுவருவதே உண்மையான மாற்றம் என்று இந்நிறுவனம் கருத்து தெரிவிக்கிறது. மாருதி தன்னை ‘மாருதி சுசுகி 2.0’ என்று குறிப்பிடுகிறது. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தயாரிப்புகளை பல்வேறு பிரிவுகளில் அறிமுகப்படுத்தி ஆர்பாரிக்க தயாராக இருப்பதாலும், ஏற்கனவே உள்ள தயாரிப்புகள் மற்றும் நெக்ஸா அனுபவத்தை மேம்படுத்தப் போவதாலும், 2.0 என்ற அடைமொழியைத் தன் பெயரோடு இந்நிறுவனம் இணைத்துக் கொண்டுள்ளது. 2016 ஆட்டோ எக்ஸ்போவில், விட்டாரா பிரேஸ்ஸா மற்றும் இக்னிஸ் என்ற இரண்டு புதிய கார்களை SUV/க்ராஸ்ஓவர் பிரிவில் இந்நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது. இவற்றோடு இணைந்து, 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜின் பொருத்தப்பட்ட பலீனோ RS மாடலையும் காட்சிப்படுத்த மாருதி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மாருதி சுசுகி விட்டாரா பிரேஸ்ஸா
விட்டாரா பிரேஸ்ஸா மாடல், மாருதி சுசுகி நிறுவனத்தின் முதல் காம்பாக்ட் SUV காராகும். உலக அரங்கில் முதல் முறையாக, இந்த கார் 2016 –ஆம் வருட பிப்ரவரி மாதம் 3 –ஆம் தேதி ஆரம்பிக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகமாகிறது. இது ஒரு சப்-4m காராகும். எனவே, ஃபோர்ட் எக்கோ ஸ்போர்ட் மற்றும் மஹிந்த்ரா TUV 300 போன்ற கார்களுடன் நேருக்கு நேர் போட்டியிடும். 16 அங்குல அலாய் சக்கரங்கள் மற்றும் காலையிலும் பளீரென்று எரியும் LED பை-ஜெனான் புரொஜெக்டர் விளக்குகள் போன்றவை இந்த காரில் பொருத்தப்படும் என்ற விவரத்தைத் தவிர, மாருதி நிறுவனம் வேறு எந்த விவரங்களையும், இப்போது வரை வெளியிடவில்லை. எனினும், சமீபத்தில் அறிமுகமான பலீனோ காரில் உள்ள சில அம்சங்கள் இதிலும் இடம்பெறும் என்று தெரிகிறது. மேலும், தற்போதைய இஞ்ஜின் மாடல்களான 1.2 லிட்டர் VTVT பெட்ரோல் இஞ்ஜின் மற்றும் 1.3 லிட்டர் DDiS 200 டீசல் இஞ்ஜின் போன்றவை இந்த காரில் பொருத்தப்படும். ஃபோர்ட் நிறுவனம், எக்கோ ஸ்போர்ட் மாடலில் 1.0 லிட்டர் எக்கோ பூஸ்ட் இஞ்ஜின் பொருத்தி உள்ளதால், அதற்குப் போட்டியாக மாருதி நிறுவனமும் பிரேஸ்ஸாவில் 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் இஞ்ஜினைப் பொருத்தும் வாய்ப்பு உள்ளது.
கான்செப்ட் இக்னிஸ்
மைக்ரோ SUV பிரிவில், மஹிந்த்ரா KUV 100 மாடலுக்கு அடுத்ததாக, மாருதி சுசுகி இக்னிஸ் அறிமுகப்படுத்தப்படும். உலக அரங்கில் முதல் முறையாக, இந்த கார் 2015 டோக்கியோ மோட்டார் ஷோவில் வெளியிடப்பட்டது. 2015 ஜெனீவா மோட்டார் ஷோ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட im4 கான்செப்ட் காரின் உண்மையான தயாரிப்பு வடிவம், புதிய கான்செப்ட் இக்னிஸ் கார் ஆகும். 2016 -ஆம் வருட இறுதியில், இந்த கார் வாகன சந்தையில் அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக, மஹிந்த்ரா KUV 100 விலையை ஒட்டியே, இக்னிஸ் காரின் விலையும் இருக்கும் என்று தெரிகிறது. இந்தியாவில் அறிமுகமாகும் போது, இதில் ஸ்விஃப்ட் அல்லது பலீனோ காரின் இஞ்ஜின் பொருத்தப்படும் வாய்ப்பு உள்ளது.
பலீனோ RS
மாருதி நிறுவனம், பலீனோ காரின் ஸ்போர்டி வெர்ஷனாக புதிய பலீனோ RS காரை இந்த கண்காட்சியில் காட்சிப்படுத்தவுள்ளது. சுசுகியின் பிரெத்தியேகமான புதிய 1.0 லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ சார்ஜ்ட் பெட்ரோல் இஞ்ஜின் பொருத்தப்பட்டு, இந்த கார் இயக்கப்படும். இதன் அறிமுகத் தேதி சரியாகத் தெரியாவிட்டாலும், வெகு விரைவில் இது சந்தையில் அறிமுகமாகி, VW போலோ GT TSi மற்றும் அபார்த் புண்டோ போன்ற கார்களுடன் போட்டியிடும்.
மேலும் வாசிக்க தனது இணையதளத்தில் விட்டாரா ப்ரீஸ்ஸாவை, மாருதி வெளியிட்டது
0 out of 0 found this helpful