பெலினோ RS கார்களை கண்காட்சியில் காட்சிக்கு வைத்த மாருதியினால் அதன் அறிமுகத்தை தள்ளி வைக்க முடியாது!

மாருதி பாலினோ 2015-2022 க்கு published on பிப்ரவரி 15, 2016 04:44 pm by manish

  • 16 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

Maruti Baleno RS

சமீபகால பிரபல கண்காட்சியான 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், மாருதியின் பெலினோ பிரிமியம் ஹேட்ச்பேக்கின் புதுப்பிக்கப்பட்ட பதிப்பு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய வாகனத் தயாரிப்பாளரான இந்நிறுவனம், தனது மெல்லிய-நிலையிலான முகப்பை (மைல்டு-மேனர்டு ஃபேகார்டு) கொண்ட வாகனத்தை முன்நிறுத்தி, வானவேடிக்கை காட்ட தயாராக உள்ளது. பெலினோ RS என்ற புனைப்பெயரை கொண்ட இந்த ஹாட்-ஹேட்ச், ஏற்கனவே போலோ GT TSi மற்றும் பிரிவின் தற்போதைய முன்னணி வாகனமான அபார்த் புண்டோ ஆகியவற்றை பின்னுக்குத் தள்ள தயாராக இருப்பதாக தெரிகிறது. இந்த காரின் அறிமுகம், 2016-ன் பண்டிகை காலத்தை ஒட்டி அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த பண்டிகை கால வாகனத்தை குறித்து பார்த்தால், அதன் உண்மையான வான வேடிக்கையை, அதிகம் கவனிக்கப்படாத நுட்பமான விஷயங்களையும் சற்று ஆழ்ந்து பார்க்கும் போது தான் தெரிகிறது. பெலினோ RS-வில் அளிக்கப்பட்டுள்ள யூனிட், இதுவரை இல்லாமல் முதல் முறையாக அளிக்கப்படும் டர்போசார்ஜ்டு அமைப்பு ஆகும். அதே நேரத்தில் இந்தியாவிற்காக, சுசுகியின் மூலம் சிறிய-மாற்றத்துடன் கூடிய பெட்ரோல் என்ஜின் அளிக்கப்பட உள்ளது. இந்த 3 சிலிண்டர், 1.0-லிட்டர் பெட்ரோல் மில் மூலம் ஒரு அபாரமான 110Ps அளவு ஆற்றலையும், 170Nm அதிகபட்ச முடுக்குவிசையையும் பெறலாம். இந்த ஆற்றலகங்கள் ஒரு 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் பொருத்தப்பட்டும் நிலையில், பெலினோவின் எடைக் குறைவாக கட்டமைப்பை வைத்து பார்க்கும் போது, இந்த ஹேட்ச்பேக்கில் ஒரு சில நிலைகளை கடந்து ஆக்சிலேட்டரை மிதித்தால் மணிக்கு 0 – 100 கி.மீ வேகத்தை எட்டுவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்ளாது என்று நம்புகிறோம். இவை தவிர, இந்த காரில் காணப்படும் பிரிமியம் அம்சங்களையும் வைத்து பார்த்தால், பெலினோ RS-வை ஒரு தனித்தன்மையுள்ள ஹேட்ச்சாக கருதி ஏற்று கொள்ளலாம்.

Maruti Baleno RS

பெலினோ RS-ன் அழகியலில் வெளிபுறம் மட்டுமின்றி உட்புறத்திலும் கொண்டுள்ள மேம்பாடுகளின் மூலம் இதை தரமான ஹேட்ச் என்று அடையாளம் காண முடிகிறது. இந்த மேம்பாடுகளில், நீட்டிக்கப்பட்ட பம்பர், க்ரே பெயிண்ட் செய்யப்பட்ட அலாய் வீல்கள், பின்புறம் மற்றும் ஒரு ஃபிக்ஸ் டிஃப்யூஸர் ஆகியவற்றில் இரட்டை-டேன் பம்பர் உள்ளிட்டவை அடங்குகின்றன. மேலும் பெலினோ RS-ன் கேபின், மிக அதிகளவில் செயல்திறன்-தொடர்புடைய அப்ஹோல்டரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் வாசிக்க : விட்டாரா ப்ரீஸ்ஸாவின் முன்பதிவு துவக்கம், இதையடுத்து விரைவில் அறிமுகம் நடைபெறும்

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment மீது மாருதி பாலினோ 2015-2022

Read Full News

trendingஹாட்ச்பேக்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பாப்புலர்
×
We need your சிட்டி to customize your experience