• English
  • Login / Register

மாருதி எஸ் - கிராஸ் ரூ. 8.34லட்சத்திற்கு அறிமுகமானது. (படக்காட்சியை பாருங்கள்)

published on ஆகஸ்ட் 05, 2015 03:46 pm by konark for மாருதி எஸ்-கிராஸ் 2017-2020

  • 13 Views
  • 3 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

மாருதி சுசுகி நிறுவனம் தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எஸ் -  கிராஸ் கார்களை 8.34 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலைக்கு டெல்ஹியில் அறிமுகப்படுத்தியது. அற்புதமான செயல்திறன்,  வசதிகள் மற்றும் சொகுசுதன்மையின் சரியான கலவையை  இந்த எஸ் -  கிராஸ் கொண்டுள்ளது. முற்றிலும் புதிய தளத்தில் (பிளாட்பார்ம்)  உருவாக்கப்பட்டுள்ள இந்த கார் 1.3 மற்றும் 1..6  லிட்டர் DdiS என்ற  இரண்டு விதமான டீசல் எஞ்சின்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.  முதல் முறையாக பெட்ரோல் என்ஜின் இல்லாமல் வெறும் டீசல் ஆப்ஷனுடன் வெளியிடப்படும் மாருதி சுசுகி நிறுவனத்தின் ஒரே கார் என்ற சிறப்பை இந்த எஸ் - கிராஸ் பெறுகிறது. 1.3 லிட்டர் என்ஜின் 90 பிஎஹ்பி சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றலும் 1.6 லிட்டர் என்ஜின் 120 பிஎஹ்பி திறனை அதிரவைக்கும் 320 என்எம்  என்ற அளவிலான இழுவை சக்தியை (டார்க்) வெளிபடுத்த வல்லது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமெனில்,    0 - 100 கி.மீ வேகத்தை வெறும் 11.3 வினாடிகளில் தொடக்கூடிய அசுர திறன் வாய்ந்தது என்றும் சொல்லலாம்.  மேலும் இதே பிரிவைச் சேர்ந்த மற்ற கார்களை விட இது எஸ் - கிராசை தனித்து நிற்கச் செய்கிறது.

அசத்தலான வெளிப்புற தோற்றதைத் தவிர உட்புறமும் விலை உயர்ந்த (பிரிமியம்) கார்களைப்போல் மிக நேர்த்தியாக உள்ளது.  டச்ஸ்க்ரீன் மல்டிமீடியா,  ஏவிகஷன் அமைப்பு, பின்புற பார்கிங் கேமரா, ஆட்டோமாடிக் கிளைமேட் கண்ட்ரோல், தோல் இருக்கைகள், என்ஜின் ஸ்டார்ட் / ஸ்டாப் பொத்தான், ஸ்டியரிங்குடன் இணைக்கப்பட்ட பலவித கண்ட்ரோல் அமைப்பு, மற்றும் குருஸ் கண்ட்ரோல் என எண்ணற்ற தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் அடுக்கப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள்:  மாருதி எஸ் - கிராசை மற்ற போட்டியாளர்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டுவது எது ?

எஸ் - கிராசை மக்களுக்கு அர்ப்பணித்து வைத்து பேசுகையில் நிர்வாக இயக்குனர் மற்றும்  சிஇஒ திரு. கெனிச்சி ஆயுகவா பின்வருமாறு கூறினார்.”  இந்தியாவில் வாடிக்கையாளரில் ஒரு பிரிவினர் தங்களது வாகனத்தில் சக்தி,செயல்திறன் இவை இராடும் இருப்பதைத் தவிர ஒரு செடான் ரக காரில் உள்ளது போன்ற வசதிகளையும் எதிர்பார்கின்றனர்.  இவர்களை மனதில் கொண்டே இந்த எஸ் -கிராஸ் கார்களை அறிமுகப்படுத்துகிறோம். இந்த காரின் தனித்துவமான தோற்றத்துக்கு அவைகள் உருவாக்கப்பட்ட புத்தம் புதிய களம்,  வடிவமைப்பு, மாற்றப்பட்டுள்ள பண்புகள், மற்றும் ஏராளமான தொழில்நுட்ப சிறப்பம்சங்கள்  என்று சொல்லிக் கொண்டே போகலாம். உட்புறமும் மிருதுவாக, நல்ல இடவசதியோடு உயர்ரக தொழில் நுட்ப சிறப்பம்சங்கள் பொருத்தப்பட்டு மேருகேற்றப்பட்டுள்ளன. DdiS 200 மற்றும் DdiS 320 மூலம்  சக்தியூடப்படும் இந்த எஸ் - கிராஸ் தன்னுடைய அசாத்தியமான முறுக்குவிசை, சக்தி மற்றும் எளிதாக கையாளக்கூடிய தன்மைகளால் வாடிக்கையாளர்களை குதூகலப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை."  

மாருதி சுசுகி யின் பிரிமியம் நெக்ஸா ஷோரூம்கள்

இந்திய வாகன சந்தையில் மிக சமீபத்தில் அறிமுகமாகியுள்ள கிராஸ்ஓவர் வகை காரான எஸ் - கிராஸ் இதற்கு முன் அறிமுகமான ஹயுண்டாய் க்ரேடா, ரெனால் டஸ்டர், போர்ட் ஈகோஸ்போர்ட், நிஸான் டெரானோ, டாட்டா சபாரி ஸ்டார்ம், மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களுடன் போட்டியிடும். எஸ் - கிராஸ் கார்கள் மாருதி சுசுகி நிறுவனத்தின் பிரிமியம் நெக்ஸா ஷோரூம்களின் வாயிலாக மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட உள்ளன என்பதும் ஒரு  குறிப்பிடத்தக்க செய்தியாகும்.

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Maruti எஸ்-கிராஸ் 2017-2020

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending எஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience