மாருதி தனது YRA வுக்கு பலேனோ என்று பெயரிட்டுள்ளது: பிரான்க்பர்ட் மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்படும்
published on ஆகஸ்ட் 10, 2015 09:40 am by அபிஜித் for மாருதி வைஆர்ஏ
- 13 Views
- 9 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி நிறுவனம் தற்போது மும்முரமாக உருவாக்கி கொண்டிருக்கும் YRA ( ஹாட்ச்பேக்) ரக கார்களை வருகிற 66 - வது IAA பிரான்க்பர்ட் மோட்டார் ஷோவில் உலகத்தின் பார்வைக்கு சமர்பிக்கிறது. இந்த கார்கள் இந்தியாவின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் (சிறிய ரக கார்கள்) வகை கார்களில் மாருதியின் பங்களிப்பாக அமையும். இதே பிரிவில் உள்ள ஹயுண்டாய் எளிட் ஐ 20 மற்றும் ஹோண்டா ஜாஸ் கார்களுடன் போட்டியிடும் என்று சுசுகி நிறுவனம் கூறுகிறது.
மாருதியின் இந்த தயாரிப்புகள் இந்த வருட துவக்கத்தில் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்ட அதே iK – 2 கான்செப்டையே பின்பற்றும். 'பலேனோ' என்று அழைக்கப்பட இருக்கும் இந்த கார் மிக நேர்த்தியான காபின், நல்ல இடவசதியுடன் கூடிய உட்புறம் மற்றும் புதிய தொழில்நுட்ப சிறப்பம்சங்கள் கொண்டதாக இருக்கும். மேலும் சுசுகி நிறுவனத்தின் புதிய தயாரிப்பான 1.0 - லிட்டர் பூஸ்டர் - ஜெட் டர்போ சார்ஜ் செய்யப்பட்ட நேரடி இன்ஜெக்ஷன் பெட்ரோல் எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கும். மேலும் இந்த புதிய எஞ்சின்கள் கூடுதல் மைலேஜ் தருவது மட்டுமின்றி சக்தியுடைய எஞ்சினாகவும் இருக்கும்.
கூடவே இந்த வகை கார்களுக்கு இருக்க வேண்டிய கச்சிதமான எடை மற்றும் அளவை கொடுப்பது சம்மந்தமாக ஏராளமான மாற்றங்கள் செய்யப்பட்டு காரின் எடையும் குறைக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் 2016 கோடை சமயத்தில் அறிமுகபடுத்தப்பட உள்ள இந்த கார்கள் ஏறக்குறைய அதே சமயத்தில் இந்தியாவிலும் அறிமுகமாகும் என்று எதிர் பார்க்கப் படுகிறது.
தற்போது நிறுவனத்திடம் இருந்து இந்த கார் சம்மந்தமான வேறு தகவல்கள் இல்லை என்றாலும் சுசுகி நிறுவனம் வெளியிட்டுள்ள படக்காட்சியில்(வீடியோ) டிஆர்எல் கள், ப்ரோஜெக்டர் முகப்பு விளக்குகள், புது வகை மேற்கூரை பகுதி மற்றும் பின்புற LED விளக்கு கள் என்று பல புதிய அம்சங்களை பார்க்க முடிகிறது. இன்னும் இந்த கார்கள் சம்மந்தமான பல தொழில்நுட்ப அம்சங்கள் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நடக்க இருக்கும் பிரான்க்பார்ட் ஆட்டோ ஷோவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.