சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மாருதி இன்விக்டோ ரூ. 24.79 லட்சம் விலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

modified on ஜூலை 07, 2023 12:19 pm by tarun for மாருதி இன்விக்டோ

மாருதியின் மிகவும் பிரீமியமான கார் ஸ்ட்ராங் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் மட்டுமே கிடைக்கும்.

உலகளாவிய பார்ட்னர்ஷிப்பிலிருந்து சமீபத்திய மாடல், மாருதி இன்விக்டோ, அதிகாரப்பூர்வமாக சந்தையில் நுழைந்துள்ளது. இது டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் , மாருதியின் புதிய பிரீமியம் MPV, அதன் திருத்தப்பட்ட கிரில் மற்றும் டெயில்லேம்ப்கள் மற்றும் புதிய கேபின் தீம் ஆகியவற்றால் மட்டுமே வேறுபடுகிறது. இதன் விலை ரூ.24.79 லட்சத்தில் இருந்து ரூ.28.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கிறது மற்றும் ஜெட்டா+ மற்றும் ஆல்பா+ வேரியன்ட்களில் தேர்வு செய்யப்படலாம். வேரியன்ட் வாரியான விலைகள் பின்வருமாறு:

வேரியன்ட்கள்

விலை

ஜெட்டா+ 7-சீட்டர்

ரூ. 24.79 லட்சம்

ஜெட்டா+ 8-சீட்டர்

ரூ. 24.84 லட்சம்

ஆல்பா+ 7-சீட்டர்

ரூ. 28.42 லட்சம்

மேலே கூறப்பட்ட அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்

ஆல்பா+ மற்றும் ஜெட்டா+ வேரியன்ட்களுக்கு ரூ.3.63 லட்சம் விலை வித்தியாசம் உள்ளது.

கிடைக்கும் வசதிகள் ?

இன்னோவா ஹைகிராஸ் காரை அடிப்படையாக கொண்டிருக்கிறது என்பதால், மாருதி இன்விக்டோ அதே பிரீமியம் அம்சங்களைப் பெறுகிறது, அவற்றில் பல இந்திய பிராண்டிற்கான முதல் அம்சமாகும். இதில் டூயல் ஜோன் கிளைமேட் கன்ட்ரோல், பவர்-அட்ஜஸ்டபிள் டிரைவர் சீட்களுக்கான மெமரி சிஸ்டம் மற்றும் 10.1 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்ற வசதிகள் அடங்கும். இன்விக்டோ பனோரமிக் சன்ரூஃப், 7-இன்ச் டிஎஃப்டி எம்ஐடியுடன் கூடிய செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், வென்டிலேட்டட் முன் இருக்கைகள் மற்றும் லெதர் அப்ஹோல்ஸ்டரி ஆகியவற்றுடன் வருகிறது. ஹைகிராஸ் உடன் ஒப்பிடும்போது, JBL சவுண்ட சிஸ்டம் மற்றும் பவர்டு இரண்டாம் வரிசை ஒட்டோமான் சீட்கள் இதில் இல்லை.

டொயோட்டா MPV உடன் ஒப்பிடும்போது உட்புறத்தின் அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை, ஆனால் தீம் செஸ்நட் பிரெளவுன் நிறத்தில் இருந்து பிளாக் நிறமாக மாற்றப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு

இன்விக்டோ 6 ஏர்பேக்குகள், ISOFIX ஆங்கரேஜ்கள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள், 360 டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் வெஹிகிள் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல் ஆகியவற்றை வழங்குகிறது. ஆச்சரியப்படும் விதமாக, ADAS அம்சம் இதில் தவிர்க்கப்பட்டுள்ளது, இது அதன் உடன்பிறப்பான இன்னோவா ஹைகிராஸ் காரில் வழங்கப்படுகிறது.

புதிய ஹைப்ரிட் பவர்டிரெய்ன்

மாருதியின் முதல் ஸ்ட்ராங் ஹைப்ரிட் காரானது 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் மின்சார மோட்டார் கொண்ட கிராண்ட் விட்டாரா ஆகும். இன்விக்டோ ஒரு பெரிய 2-லிட்டர் யூனிட்டுடன் வருகிறது, இது இன்ஜின் மற்றும் மோட்டாரிலிருந்து 186PS மற்றும் 206Nm என்ற ஒருங்கிணைந்த வெளியீட்டைக் கொண்டுள்ளது. இது e-CVT ஆட்டோமேட்டிக் உடன் மட்டுமே இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஹைப்ரிட் அமைப்பு 23.24 கிமீ/லி என்ற சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்குகிறது.

இன்னோவா ஹைகிராஸ் -ன் மின்மயமாக்கப்படாத 2-லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் இன்விக்டோவிற்கு கொடுக்கப்படாமல் தவிர்க்கப்பட்டதாகத் தெரிகிறது.

போட்டியாளர்கள்

மாருதி இன்விக்டோ காரானது டொயோட்டா இன்னோவா வந்த அதே நிலையில் உள்ளது, இங்கே எந்த நேரடி போட்டியாளர்களும் இல்லை. இது கியா கேரன்ஸுக்கு பிரீமியம் மாற்றாகும், அதே நேரத்தில் டாடா சஃபாரி, எம்ஜி ஹெக்டர் பிளஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி700 மற்றும் ஹூண்டாய் அல்காஸர் போன்ற மூன்று வரிசை எஸ்யூவிகளுக்கு மாற்றாக உள்ளது. மாருதி எம்பிவியின் ஒரே போட்டியாளர் அதன் உடன்பிறப்பான இன்னோவா ஹைகிராஸ் மட்டுமே.

t
வெளியிட்டவர்

tarun

  • 76 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது மாருதி இன்விக்டோ

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.10.44 - 13.73 லட்சம்*
Rs.19.77 - 30.98 லட்சம்*
Rs.10.52 - 19.67 லட்சம்*
Rs.2 - 2.50 சிஆர்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை