இந்தியாவில் அறிமுகமான பிறகு சுமார் 100 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ள Maruti e Vitara
dipan ஆல் ஏப்ரல் 02, 2025 04:25 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
- 7 Views
- ஒரு கருத்தை எழுதுக
மேலும் இந்த அறிவிப்புடன் முந்தைய நிதியாண்டை விட 2024-25 நிதியாண்டில் 17 - சதவிகிதத்துக்கும் அதிகமான கார்களை ஏற்றுமதி செய்துள்ளதாக மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.
பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்ட பிறகு மாருதி இ விட்டாரா கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் சுமார் 100 நாடுகளுக்கு இந்த கார் ஏற்றுமதி செய்யப்படும் என மாருதி தற்போது தெரிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் ஜப்பான் சந்தைகளை உள்ளடக்கியுள்ள இந்த ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் (FY) 2025-26 -ல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 நிதியாண்டில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக, ஏற்றுமதியில் 43 சதவீத பங்குடன் பயணிகள் வாகனங்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடத்தில் இருப்பதாக மாருதி அறிவித்துள்ளது. காலண்டர் ஆண்டு (2024) மற்றும் நிதியாண்டில் (2024-25) முதல் முறையாக ஏற்றுமதி 3 லட்சம் யூனிட்களை தாண்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் மாருதி ஃபிரான்க்ஸ், மாருதி ஜிம்னி, மாருதி பலேனோ, மாருதி ஸ்விஃப்ட் மற்றும் மாருதி டிசையர் ஆகிய மாடல்கள் அதிகம் ஏற்றுமதி செய்யப்பட்டன. பிற சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்யும் கார்களின் வரிசையில் இப்போது மாருதி இ விட்டாரா காரும் சேரும்.
மாருதி இ விட்டாரா பற்றிய சுருக்கமான பார்வை இதோ:
மாருதி இ விட்டாரா: ஒரு கண்ணோட்டம்
மாருதி இ விட்டாரா எல்இடி ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், ஒய்-வடிவ எல்இடி டிஆர்எல்கள், 18-இன்ச் ஏரோடைனமிக்கல் அலாய் வீல்கள் மற்றும் 3-பீஸ் எல்இடி ரேபரவுண்ட் டெயில் லைட்டுகள் ஆகியவற்றைக் கொண்ட ஒரு நவீன வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
உள்ளே டூயல் டிஸ்ப்ளேக்கள் மற்றும் டூ-ஸ்போக் ஸ்டீயரிங் வீலுடன் டூயல்-டோன் டேஷ்போர்டை கொண்டுள்ளது. இது கேபினின் அதே தீம் உடன் செமி-லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரியை கொண்டுள்ளது.
இ விட்டாரா 10.25 இன்ச் டச் ஸ்கிரீன், 10.1 இன்ச் ஆல் டிஜிட்டல் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே மற்றும் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளை கொண்டுள்ளது. இது 10-வே பவர்டு டிரைவர் சீட், மல்டி கலர் ஆம்பியன்ட் லைட்ஸ் மற்றும் ஃபிக்ஸ்டு பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
பாதுகாப்பைப் பொறுத்தவரையில் இது 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா அமைப்பு மற்றும் லெவல்-2 அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) அடாப்டிவ் க்ரூஸ் கண்ட்ரோல் மற்றும் லேன் கீப் அசிஸ்ட் உள்ளிட்ட வசதிகளும் கிடைக்கும்.
மேலும் படிக்க: 2025 ஏப்ரலில் இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படும் டாப் 5 கார்கள்
ஆட்டோ எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்ட போது இ விட்டாரா இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டிருக்கும் என்று மாருதி உறுதிப்படுத்தியது. அதன் விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
49 kWh |
61 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
1 |
பவர் |
144 PS |
174 PS |
டார்க் |
192.5 Nm |
192.5 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
TBA |
500 கி.மீ -க்கு மேல் |
டிரைவ்டிரெய்ன் |
FWD* |
FWD |
*FWD = ஃபிரன்ட் வீல் டிரைவ்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி இ விட்டாரா விலை ரூ. 17 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா) தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், டாடா கர்வ் EV, MG ZS EV மற்றும் மஹிந்திரா பிஇ 6 ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து லேட்டஸ்ட் அப்டேட்டுகளுக்கு கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.