Maruti e Vitara கார் ADAS வசதியோடு வரும் என்பது உறுதியாகியுள்ளது
published on டிசம்பர் 27, 2024 10:08 pm by shreyash for மாருதி இ vitara
- 32 Views
- ஒரு கருத்தை எழுதுக
இது போன்ற பிரீமியம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பத்துடன் வரும் மாருதியின் முதல் காராக இ விட்டாரா இருக்கும்.
-
வரும் ஜனவரி மாதம் நடக்கவுள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் மாருதி தனது முதல் ஆல்-எலக்ட்ரிக் காராக e விட்டாராவை அறிமுகம் செய்யும்.
-
சமீபத்திய ஸ்பை ஷாட்கள் இந்தியா-ஸ்பெக் இ விட்டாராவில் ADAS மற்றும் டூயல் ஸ்கிரீன்கள் போன்ற வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்துகின்றன.
-
பிரத்யேகமாக EV -களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள மாருதியின் புதிய ஹார்டெக்ட்-இ பிளாட்ஃபார்மில் இ விட்டாரா கட்டமைக்கப்பட்டுள்ளது.
-
சர்வதேச அளவில் விற்பனை செய்யப்படும் சுஸூகி இ விட்டாரா ஆனது 49 kWh மற்றும் 61 kWh பேட்டரி பேக் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகிறது.
-
இந்தியாவில் ஃப்ரன்ட் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆகிய இரண்டு எடிஷன்களும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
காட்சிக்கு வைக்கப்பட்ட பிறகு உடனடியாக விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 22 லட்சத்திலிருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கலாம்.
மாருதியின் முதல் ஆல் எலக்ட்ரிக் காரான மாருதி இ விட்டாரா ஆனது 2025 ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இ விட்டாராவின் உற்பத்திக்கு தயாராக இருக்கும் பதிப்பு ஜனவரி 17 முதல் 22 வரை நடைபெறவுள்ள பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்படும் என்பதை மாருதி உறுதிப்படுத்தியுள்ளது. அதற்கு முன்னதாக இ விட்டாராவின் மற்றொரு சோதனைக் கார் சுற்றிலும் சில புதிய விவரங்களைத் தருவதைக் கண்டோம். சமீபத்திய ஸ்பை ஷாட்கள் எலக்ட்ரிக் எஸ்யூவியின் கேபினை பற்றிய சிறிய பார்வையை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பிரீமியம் மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு தொழில்நுட்பம் இருக்கும் என்பதையும் உறுதிப்படுத்துகிறது.
ஸ்பை ஷாட் மூலம் பார்க்க முடிந்தவை என்ன ?
சமீபத்திய ஸ்பை ஷாட்கள் மூலமாக e விட்டாராவின் சோதனைக் காரில் ADAS (அட்வான்ஸ்டு டிரைவர்-அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) ரேடார் யூனிட் இருப்பதை உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் இந்த பாதுகாப்பு வசதியை பெறும் மாருதியின் முதல் காராக இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாருதியின் எலெக்ட்ரிக் எஸ்யூவி -யின் கேபினின் ஒரு பகுதி பார்வையும் எங்களுக்கு கிடைத்தது. எஸ்யூவியின் குளோபல்-ஸ்பெக் பதிப்பில் காணப்படுவது போல் ஸ்பை படம் இன்டெகிரேட்டட் ஸ்கிரீன் செட்டப்பையும், 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் இருப்பதையும் தெளிவாக காட்டுகிறது.
மேலும் பார்க்க: 2025 ஆண்டில் 4 மாருதி கார்கள் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
எதிர்பார்க்கப்படும் பிற வசதிகள்
ஆட்டோமெட்டிக் ஏசி, வென்டிலேட்டட் முன் சீட்கள் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் போன்ற வசதிகளுடன் இ விட்டாராவை மாருதி விற்பனைக்கு கொண்டு வரலாம் . பாதுகாப்புக்காக 6 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் ஆகியவை உள்ளன.
பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார்
குளோபல்-ஸ்பெக் சுஸூகி இ விட்டாரா ஆனது இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை கொண்டுள்ளது: 49 kWh மற்றும் 61 kWh. அதன் விவரங்கள் இங்கே:
வேரியன்ட் |
FWD (ஃபிரன்ட் வீல் டிரைவ்) |
FWD (ஃபிரன்ட் வீல் டிரைவ்) |
AWD (ஆல்-வீல் டிரைவ்) |
பேட்டரி பேக் |
49 kWh |
61 kWh |
61 kWh |
பவர் |
144 PS |
174 PS |
184 PS |
டார்க் |
189 Nm |
189 Nm |
300 Nm |
உலகளவில் விற்பனை செய்யப்படும் பதிப்பு FWD மற்றும் AWD ஆகிய இரண்டு ஆப்ஷன்களுடன் வருகிறது. மாருதியின் வரிசையில் உள்ள கிராண்ட் விட்டாரா ஏற்கனவே AWD ஆப்ஷனை கொண்டிருப்பதால் இந்தியாவில் FWD மற்றும் AWD என இரண்டு ஆப்ஷன்களும் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. E விட்டாரா -வுக்கான சரியான டிரைவிங் ரேஞ்சை சுஸூகி வெளியிடவில்லை என்றாலும் கூட இது சுமார் 550 கி.மீ வரை கிளைம்டு ரேஞ்சை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
பொறுப்பு துறப்பு: ரேஞ்ச் மற்றும் விவரங்கள் குளோபல்-ஸ்பெக் பதிப்பிற்கானவை. ஆகவே இந்திய பதிப்பில் அவற்றி மாற்றங்கள் இருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி இ விட்டாராவின் விலை ரூ.22 லட்சத்தில் இருந்து (எக்ஸ்-ஷோரூம்) தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது MG ZS EV, டாடா கர்வ்வ் EV, மஹிந்திரா பிஇ 6, மஹிந்திரா XEV 9e, மற்றும் வரவிருக்கும் ஹூண்டாய் கிரெட்டா EV ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.