அறிமுகத்துக்கு முன்பே டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளது Maruti e Vitara
மாருதி இ விட்டாரா மார்ச் 2025 -க்குள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஆஃப்லைன் முன்பதிவுகள் ஏற்கனவே தொடங்கியுள்ளன.
-
மாருதி இ விட்டாரா மாருதியின் முதல் EV ஆகும்.
-
இது மார்ச் 2025 ஆண்டில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அதற்கு முன்னதாகவே மாருதி இ விட்டாரா டீலர் ஷிப்களை அடைய தொடங்கியுள்ளது.
-
இது ஆல் LED லைட்ஸ் மற்றும் 18-இன்ச் அலாய் வீல்கள் உடன் வருகிறது.
-
உள்ளே இது 10.25-இன்ச் டிரைவர்ஸ் டிஸ்ப்ளே, 10.1-இன்ச் டச் ஸ்கிரீன் மற்றும் 2-ஸ்போக் ஸ்டீயரிங் ஆகியவற்றைப் கொண்டுள்ளது.
-
பனோரமிக் கிளாஸ் ரூஃப், 10-வே அட்ஜெஸ்ட்டபிள் டிரைவர் சீட் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் ஆகியவை கிடைக்கலாம்.
-
பாதுகாப்புக்காக 7 ஏர்பேக்குகள் (ஸ்டாண்டர்டாக), 360 டிகிரி கேமரா மற்றும் ADAS ஆகியவை அடங்கும்.
-
இதன் விலை ரூ.17 லட்சம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (அறிமுக எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா).
சமீபத்தில் முடிவடைந்த பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 நிகழ்வில் மாருதி இ விட்டாரா காட்சிப்படுத்தப்பட்டது. இப்போது EV சில டீலர்ஷிப்களை சென்றடைந்துள்ளது. மாருதியின் முதல் EV விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்று சுட்டிக்காட்டுகிறது. மேலும் சில டீலர்ஷிப்கள் இ விட்டாராவின் ஆஃப்லைன் முன்பதிவுகளையும் ஏற்றுக்கொள்கின்றன. இப்போது ஒரு டீலர்ஷிப் -ல் இருந்து சில படங்கள் எங்களுக்கு கிடைத்துள்ளன. இ விட்டாராவை பற்றிய கூடுதல் விவரங்கள் அனைத்தும் இங்கே உள்ளன.
என்ன பார்க்க முடிந்தது ?
காட்சிப்படுத்தப்பட்ட மாருதி இ விட்டாராவில் நெக்ஸா ப்ளூ கலரில் உள்ளது. இது ஆட்டோ எக்ஸ்போ 2025 -ல் காட்சிப்படுத்தப்பட்ட மாடலை போன்றது. மேலும் 5 மோனோடோன் மற்றும் 4 டூயல்-டோன் கலர் ஆப்ஷன்களுடன் இ விட்டாராவும் கிடைக்கும்.
LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட்கள், Y-வடிவ LED DRL -கள் மற்றும் ஃபாக் லைட்ஸ் ஆகியவற்றை இ விட்டாராவில் பார்க்க முடிந்தது.
இது 18-இன்ச் ஏரோடைனமிக் வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் மற்றும் டோர்களில் பிளாக் கிளாடிங் உடன் வருகிறது. ஒரு பிளாக் பின்புற பம்பர் மற்றும் ஒரு கிளாஸி பிளாக் பீஸ் வழியாக கனெக்டட் 3-பீஸ் LED டெயில் லைட் செட்டப்பையும் பார்க்க முடிந்தது.
உள்ளே செவ்வக வடிவ ஏசி வென்ட்களுடன் 2-ஸ்போக் ஸ்டீயரிங் வீல் மற்றும் டேஷ்போர்டில் டூயல் ஸ்கிரீன் அமைப்பையும் காணலாம். ரியர்வியூ மிரர் (IRVM) உள்ளே ஆட்டோ டிம்மிங் வசதியையும் பார்க்க முடிந்தது.
உன்னிப்பாகப் கவனித்து பார்த்தால் செமி லெதரெட் சீட் அப்ஹோல்ஸ்டரி, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் மற்றும் வயர்லெஸ் ஃபோன் சார்ஜர் ஆகியவற்றை கிடைக்கும்.
இப்போது இ விட்டாராவின் வேரியன்ட் வாரியான வசதிகள் இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், இணையத்தில் வெளியான ஆதாரத்தின் அடிப்படையில் பார்க்கையில் காட்டப்படும் மாடல் டாப்-ஆஃப்-லைன் ஆல்பா வேரியன்ட் என்று தெரிய வருகிறது. இருப்பினும் சரியான வேரியன்ட்டை பற்றி பார்க்க சில காலம் காத்திருக்க வேண்டும்.
மேலும் படிக்க: Maruti e Vitara பேஸ் வேரியன்ட்டில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படும் விஷயங்கள்
எலக்ட்ரிக் பவர்டிரெய்ன் ஆப்ஷன்கள்
வேரியன்ட் வாரியான அம்ச விநியோகம் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும் இ விட்டாரா இரண்டு பேட்டரி பேக் ஆப்ஷன்களை பெறும் என்பதை மாருதி உறுதிப்படுத்தியுள்ளது. விரிவான விவரங்கள் இங்கே:
பேட்டரி பேக் |
49 kWh |
61 kWh |
எலக்ட்ரிக் மோட்டார் எண்ணிக்கை |
1 |
1 |
பவர் |
144 PS |
174 PS |
டார்க் |
192.5 Nm |
192.5 Nm |
கிளைம்டு ரேஞ்ச் |
TBA |
500 கி.மீ -க்கு மேல் |
டிரைவ்டிரெய்ன் |
FWD* |
FWD |
*FWD = முன் சக்கர டிரைவ்
எதிர்பார்க்கப்படும் விலை மற்றும் போட்டியாளர்கள்
மாருதி இ விட்டாராவின் விலை ரூ. 17 லட்சத்தில் இருந்து தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது (எக்ஸ்-ஷோரூம், பான்-இந்தியா). இது டாடா கர்வ்வ் EV, ஹூண்டாய் கிரெட்டா எலக்ட்ரிக், மஹிந்திரா பிஇ 6 மற்றும் MG ZS EV ஆகியவற்றுக்கு போட்டியாக இருக்கும்
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகள் வேண்டுமா ? கார்தேக்கோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.