மாருதி பலேனோ கார்களின் டாப் - எண்டு வேரியன்ட் வெற்றி பெற்றுள்ளது
published on பிப்ரவரி 02, 2016 02:13 pm by sumit for மாருதி பாலினோ 2015-2022
- 21 Views
- ஒரு கருத்தை எழுதுக
மாருதி நிறுவனத்தின் ப்ரீமியம் ஹேட்ச்பேக் வகை கார்களான பலேனோ அறிமுகப்படுத்தபட்ட சில மாதங்களிலேயே இந்திய வாகன சந்தையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இன்று வரை விற்பனையாகி உள்ள பலேனோ கார்களில் 50% சதவிகிதத்திற்கு மேல் பலேனோ கார்களின் டாப் - எண்டு வேரியன்ட்கல் தான் விற்பநியாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனத்தின் மற்றுமொரு ஹேட்ச்பேக் பிரிவு காரான ஸ்விப்ட் கார்களின் நடுத்தர வேரியன்ட் (மிட் வேரியன்ட் அதிகமாக விற்பனையாகி வருகிறது.
மலேனோ கார்கள் தற்போது இரண்டு வகையான என்ஜின் ஆப்ஷன்களுடன் வெளியாகிறது. அவை 1.3 லிட்டர் டீசல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின்களாகும். 83 bhp அளவு சக்தியுடன் 115 Nm அளவு டார்க்கையும் பெட்ரோல் என்ஜின் உற்பத்தி சியும். டீசல் எஞ்சின்கள் 74 bhp சக்தியையும் 190 Nm அளவு டார்க்கையும் உற்பத்தி செய்யும் என்று தெரிகிறது. சிறிய டர்போ சார்ஜ் செய்யப்பட்ட 1.0 லிட்டர் பெட்ரோல் வெர்ஷன் ஒன்றையும் மாருதி நிறுவனம் தயாரித்து விரைவில் அறிமுகபடுத்த உள்ளது என்பது இங்கே கூடுதல் செய்தியாகும்.
பலேனோ கார்களின் டாப் - எண்டு வேரியன்ட் அதிகம் விற்பனை ஆவதற்கான காரணம் மாருதி நிறுவனம் இக்காரின் விலையை மிக மிக நியாயமாக நிர்ணயம் செய்திருப்பது தான் என்று சொன்னால் அது மிகையாகாது. பலேனோ கார்களின் பேஸ் (அடிப்படை) வேரியன்ட்ரூ. 5.3 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் ,மும்பை ) அதன் டாப் வேரியன்டின் விலை ரூ. 8.5 லட்சம் (எக்ஸ் - ஷோரூம் ,மும்பை ) ஆகும் . பலேனோ கார்களின் போட்டியாளர்களைப் பார்க்கையில் , ஹயுண்டாய் நிறுவனத்தின் i20 கார்களின் டாப் -எண்டு மாடலின் விலை ரூ. 8.9 லட்சம் (எக்ஸ் - ஷோரூம் ,மும்பை ) ஆகும். இன்னொருபுறம் , ஹோண்டா ஜாஸ் கார்களின் டாப் - எண்டு வேரியன்டின் விலை ரூ. 9 .2 லட்சம் ( எக்ஸ் -ஷோரூம் , மும்பை) ஆகும்.
இந்த ஹேட்ச்பேக் பிரிவு கார்களை வாங்கும் ஒரு நடுத்தர வர்கத்து வாடிக்கையாளருக்கு ரூ. 60 ஆயிரம் என்பது நிச்சயம் ஒரு பெரிய தொகையாகவே இருக்கும். இந்த விலை வித்தியாசத்தை மாருதி நிறுவனம் நன்கு பயன்படுத்திக் கொண்டு மார்கெட்டை பிடித்து விட்டது என்றே சொல்ல வேண்டும். அது மட்டுமின்றி மாருதி தயாரிப்புக்களின் நம்பகதன்மையும் ,குறைந்த மெயின்டெனன்ஸ் செலவும் கூட பலேனோ கார்களின் பெரிய வெற்றிக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.
மேலும் வாசிக்க
0 out of 0 found this helpful