• English
  • Login / Register

மாருதி பலீனோவின் வேரியண்ட்கள் – குழப்பமின்றி சிறந்ததைத் தேர்ந்தெடுங்கள்

published on டிசம்பர் 08, 2015 06:01 pm by nabeel for மாருதி பாலினோ 2015-2022

  • 17 Views
  • 2 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

Maruti Baleno Variants

தற்போது, இந்திய வாகன சந்தையில் மாருதி பலீனோ புயல் மையம் கொண்டுள்ளது என்று சொல்லும் அளவிற்கு இந்த காரின் தாக்கம் இந்தியாவில் அதிகமாக உள்ளது. ஏற்கனவே, 40,000 முன்பதிவுகளை தாண்டியுள்ள இந்த கார், தற்போது மேலும் உறுதியாக வளர்ந்து கொண்டிருப்பதை நாம் உணர முடிகிறது. விரைவில், மாருதி நிறுவனம் அதிக சக்தி வாய்ந்த டீசல் இஞ்ஜினை இதில் பொறுத்த உள்ளது. பல வாடிக்கையாளர்கள் இதன் சக்தி குறைபாடு பற்றி புகார் செய்ததினால், இந்நிறுவனம் அவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்ய, அதிக சக்தி வாய்ந்த டீசல் இஞ்ஜினை விரைவில் இணைக்கும். இந்தியாவில், 2015 –ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மிக அதிகமாக விற்பனை ஆகி உள்ள முதல் 10 கார்களுள், ஆறாவது காராக பலீனோ உள்ளது என்பது சிறப்பு செய்தியாகும். தனது பரம எதிரியான ஹுண்டாய் எலைட் i20 காரின் விற்பனை அளவில் 22 சதவிகிதம் சரிவு ஏற்படுத்தி, பலீனோ முன்னேறிச் சென்றுள்ளது. அத்தோடு நிறுத்திக் கொள்ளாமல், ஸ்விஃப்ட் ஹாட்ச் பேக் காரின் விற்பனை அளவையும் 34 சதவிகிதம் சரியச் செய்திருக்கிறது. மாருதி பலீனோ தனது போட்டியாளர்களை வீழ்த்திவிடும் என்று நமக்கு முன்பே தெரிந்திருந்தாலும், இந்த புள்ளி விவரம் ஆச்சர்யம் கலந்த உண்மையை எடுத்துரைக்கிறது. பலீனோவை வாங்க வேண்டும் என்று முடிவெடுத்த நமது வாசகர்கள் பலர், எந்த வேரியண்ட்டை வாங்குவது என்ற குழப்பத்தில் உள்ளனர். எனவே, நாங்கள் பலீனோ காரின் வேரியண்ட்களைப் பற்றிய ஒரு விரிவான விளக்கத்தை இங்கே கொடுத்துள்ளோம். தெளிவான சரியான முடிவெடுக்க இந்த விவரங்கள் உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம். 

Maruti Baleno Interiors

மாருதி பலீனோ தற்போது 4 வேரியண்ட்களில் வருகிறது. அதாவது, சிக்மா, டெல்டா, ஜீட்டா மற்றும் ஆல்ஃபா ஆகிய பெயர்களில் பெட்ரோல் மற்றும் டீசல் வகைகளில் வருகின்றன. டெல்டா பெட்ரோல் வேரியண்ட்டில் மட்டுமே ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு வழங்கப்படுகிறது. என்ட்ரி லெவல் காரை விடுத்து, முதல் முறையாக பிரிமியம் ஹாட்ச் பேக் காரை வாங்க முற்படுவோருக்கு சிக்மா மாடல் சிறந்த தீர்வாக இருக்கும். இரண்டாவது கார் வாங்குபவர்களுக்கும் அல்லது அதிகமாகிக் கொண்டிருக்கும் போக்குவரத்து நெரிசலை எளிதாக சமாளிக்க ஹாட்ச் பேக் காரை வாங்க முடிவு செய்தவர்களுக்கும் உருவாக்கப்பட்டதுதான் ஆல்ஃபா மாடல். கடுமையான போட்டிக்குத் தயாரான விலையில் உள்ள இந்த பலீனோ வேரியண்ட்களைப் பற்றி மேலும் பார்ப்போம். 

சிக்மா

அடிப்படை: பெட்ரோல் – ரூ. 4.99 லட்சம்; டீசல் – ரூ. 6.16 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை)

பலீனோவின் அடிப்படை வேரியண்ட் சிக்மா மாடலாகும். பற்பல பாதுகாப்பு அம்சங்கள் இதில் அடங்கி இருந்தாலும், மற்ற வேரியண்ட்களில் உள்ளது போல ஆடம்பரமான அம்சங்கள் இதில் இல்லை என்ற குறை இருக்கிறது. எனினும், சற்றே குறைந்த பட்ஜெட்டில் கார் வாங்க நினைப்பவர்களுக்கும், முதல் முறையாக பிரிமியம் ஹாட்ச் வேரியண்ட்டை வாங்க நினைப்பவர்களுக்கும் இது சரியான தீர்வாக இருக்கும். இந்த வேரியண்ட்டின் முக்கியமான சிறப்பம்ஸங்கள்:

  • பாடி நிறத்திலேயே கதவு கைப்பிடிகள்
  • ஸ்டீல் வீல்கள்
  • டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள்
  • EBD –யுடன் வரும் ABS
  • பவர் விண்டோஸ் (முன்புறம் மட்டும்)
  • சென்ட்ரல் லாக்கிங்
  • டில்ட் ஃபங்சனுடன் வரும் பவர் ஸ்டியரிங்
  • ஹீட்டருடன் வரும் மேனுவல் AC
  • ஆண்டி-தெஃப்ட் செக்யூரிட்டி அமைப்பு

டெல்டா

பெட்ரோல்: ரூ. 5.71 லட்சம் (CVT – ரூ. 6.76 லட்சம்); டீசல்: ரூ. 6.81 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை)

ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன் அமைப்பு இந்த வேரியண்ட்டில் பொருத்தப்பட்டுள்ளது. இது தவிர, இந்த வேரியண்ட்டின் தோற்றப் பொலிவை மேம்படுத்த கூடுதலாக சில அம்சங்களை மாருதி நிறவனம் இணைத்துள்ளது. அவற்றில் முன்புற கிரில்லில் க்ரோம் வேலைப்பாடு மற்றும் ஃபுல் வீல் கேப் போன்றவை இதன் அழகை மேம்படுத்துகின்றன. மேலும், இதன் செயல்திறனை மேம்படுத்த ஏராளமான அம்சங்களும் இந்த வேரியண்ட்டில் இணைக்கப்பட்டுள்ளன. பிரிமியம் ஹாட்ச் பேக் பிரிவு காரை புதிதாக வாங்க வேண்டும், ஆனால் வசதியான பயணத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இடம் பெற்றிருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கும். CVT ட்ரான்ஸ்மிஷன் இந்த வேரியண்ட்டில் வருவதால், தங்களது இடது காலைப் பயன்படுத்த விருப்பம் இல்லாத வாடிக்கையாளர்களை இந்த ஆப்ஷன் கவர்ந்திழுக்கிறது. இந்த வேரியண்ட்டில் உள்ள முக்கிய அம்சங்கள்:

  • ORVM -களில் டர்ன் இன்டிகேட்டர்கள்
  • உட்புற கதவு கைப்பிடிகள் மற்றும் பார்க்கிங் ப்ரேக் ஆகியவற்றில் மெட்டல் ஃபினிஷ்
  • பின்ச் கார்ட் பவர் விண்டோ (ஓட்டுனர்)
  • ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள்
  • ரியர் வைப்பர், வாஷர் மற்றும் டி-ஃபாகர்
  • FM/MP3/CD, புளு டூத், Aux மற்றும் USB இணைந்த ஆடியோ அமைப்பு
  • ஸ்டியரிங் மேல் உள்ள ஆடியோ கண்ட்ரோல்
  • ரிமோட் கீலெஸ் என்ட்ரி
  • ஆல் பவர் விண்டோஸ்
  • மின்சாரத்தால் மடக்கக் கூடிய ORVM -கள்
  • ஆட்டோ AC
  • 60:40 ஸ்ப்லிட் சீட் (பின்புறம்)
  • ஆட்டோ-அப் பவர் விண்டோ (ஓட்டுனர்)

ஜீட்டா

பெட்ரோல்: ரூ. 6.31 லட்சம், டீசல்: ரூ. 7.41 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை)

எந்த வித அம்சங்களையும் விட்டுக் கொடுக்காமல், ஆடம்பரமான பயணம் மேற்கொள்ள நினைப்பவர்களுக்கு, ஜீட்டா வேரியண்ட் சரியான தீர்வாகும். அற்புதமான வசதிகளுடன் எந்த வித பயண களைப்பும் தெரியாமல் பயணம் செய்வதற்குத் தேவையான அனைத்து அம்சங்களும், தோற்றமும் கொண்ட இந்த வேரியண்ட்டில் பயனற்ற எந்த அம்சங்களும் இல்லை என்று தைரியமாகக் கூறலாம். இந்த வேரியண்ட்டில் உள்ள முக்கியமான அம்சங்கள்:

  • க்ரோமிய வேலைப்பாடுகளைக் கொண்ட கதவு கைப்பிடிகள்
  • அலாய் சக்கரங்கள்
  • UV கட் கிளாஸ்
  • க்லோவ் பாக்ஸ், லக்கேஜ் ரூம் மற்றும் முன்புறத்தில் கால் வைக்கும் பகுதியில் வெளிச்சம்
  • பலவித விவரங்களைக் காட்டும் ஸ்பீடோமீட்டர் TFT மற்றும் கலர் டிஸ்ப்ளே
  • லெதரால் மூடப்பட்ட ஸ்டியரிங் வீல்
  • ஆட்டோ ஹெட்லாம்ப்கள் மற்றும் முன்புறத்தில் பனி லாம்ப்கள்
  • தானாக மங்கும் IRVM
  • டெலெஸ்கோபிக் ஸ்டியரிங் அட்ஜஸ்ட்மெண்ட்
  • காரை லாக் செய்த சிறிது நேரம் வரை எரியும் ஃபாலோ மீ ஹோம்/லீட் லைட்
  • முன்புறத்தின் நடுவில் ஸ்டோரேஜ் இடம் கொண்ட ஆர்ம் ரெஸ்ட்
  • உயரத்தை மாற்றி அமைக்கக் கூடிய ஓட்டுனர் சீட்
  • ஸ்மார்ட் கீயுடன் வரும் புஷ் ஸ்டார்ட்/ஸ்டாப் பட்டன்

ஆல்ஃபா

பெட்ரோல்: ரூ. 7.01 லட்சம், டீசல்: ரூ. 8.11 லட்சம் (டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை)

மாருதி பலீனோவின் உயர்தர வேரியண்ட் ஆல்ஃபா மாடல். பிரிமியம் ஹாட்ச் பேக் பிரிவில் உள்ள கார்களில் என்னென்ன அம்சங்கள் உள்ளனவோ, அவை அனைத்தும் இந்த வேரியண்ட்டில் உள்ளன. ஹாட்ச் பேக் காரில் ஆடம்பரமான பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்களின் தீர்வு ஆல்ஃபா வேரியண்ட்டாக இருக்கும். ஜீட்டா டிரிம்மில் உள்ள பல அம்சங்களை இதில் பொருத்தியிருந்தாலும், கூடுதலாக DRL -கள் மற்றும் புரொஜெக்டர் ஹெட்லாம்ப்கள் இதில் இணைக்கப்பட்டுள்ளதால், மேலும் பல வாடிக்கையாளர்களைத் தன் வசம் கவர்ந்திழுக்கும். தோற்றப் பொலிவிற்கான ஏராளமான அம்சங்கள் ஆல்ஃபா மாடலில் இணைக்கப்பட்டிருப்பதால், மிகச் சிறந்த தோற்றத்துடன் வலம் வருகிறது. இந்த உயர்தர வேரியண்ட்டின் முக்கியமான அம்சங்கள்:

  • LED பொருத்தப்பட்டு பகல் நேரமும் இயங்கும் விளக்குகள் 
  • புரொஜெக்டர் ஹெட் லாம்ப்கள்
  • ஸ்மார்ட் பிளே இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம்
  • ரிவர்ஸ் பார்க்கிங் காமிரா
  • நேவிகேஷன் சிஸ்டம்
  • வாய்ஸ் கமாண்ட்
  • ஸ்மார்ட் ஃபோன் கனெக்ட் / ஆப்பிள் CarPlay

மாருதி பலீனோவின் ஃபர்ஸ்ட் ட்ரைவ் வீடியோவை கண்டுகளியுங்கள்

இதையும் படியுங்கள் 

வெளியிட்டவர்
was this article helpful ?

Write your Comment on Maruti பாலினோ 2015-2022

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
×
We need your சிட்டி to customize your experience