2024 மே மாதத்தில் Tata, Mahindra மற்றும் பிற கார்களை விட Maruti மற்றும் Hyundai இரண்டும் அதிக அளவில் கார்களை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளன!
published on ஜூன் 11, 2024 05:23 pm by ansh
- 22 Views
- ஒரு கருத்தை எழுதுக
டாடா, மஹிந்திரா மற்றும் ஹூண்டாய் ஆகிய நிறுவனங்களின் கார் விற்பனையை விட மாருதி முன்னணியில் உள்ளது.
எதிர்பார்த்தபடி மே 2024-க்கான பிராண்ட் வாரியான விற்பனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாருதி, ஹூண்டாய் மற்றும் டாடா ஆகியவை முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இதில் மாருதி நிறுவனம் முன்னணியில் உள்ளது. முதல் 10 கார் தயாரிப்பாளர்களில் பெரும்பாலானவர்கள் மாதாந்திர (MoM) மற்றும் வருடாந்திர (YoY) புள்ளிவிவரங்களின் படி இரண்டிலுமே வளர்ச்சியைக் கண்டுள்ளது, இருப்பினும் சில கார் தயாரிப்பு நிறுவனங்கள் இழப்புகளை எதிர்கொண்டுள்ளனர். மே 2024 ஆண்டில் இந்த பிராண்டுகளின் விற்பனை செயல்திறனைப் பற்றி மேலும் விரிவாகப் பார்க்கலாம்.
கார் நிறுவனம் |
மே 2024 |
ஏப்ரல் 2024 |
மாதாந்திர வளர்ச்சி% |
மே 2023 |
வருடாந்திர வளர்ச்சி% |
மாருதி |
1,44,002 |
1,37,952 |
4.4 % |
1,43,708 |
0.2 % |
ஹூண்டாய் |
49,151 |
50,201 |
- 2.1 % |
48,601 |
1.1 % |
டாடா |
46,700 |
47,885 |
- 2.5 % |
45,880 |
1.8 % |
மஹிந்திரா |
43,218 |
41,008 |
5.4 % |
32,883 |
31.4 % |
டொயோட்டா |
23,959 |
18,700 |
28.1 % |
19,379 |
23.6 % |
கியா |
19,500 |
19,968 |
- 2.3 % |
18,766 |
3.9 % |
ஹோண்டா |
4,822 |
4,351 |
10.8 % |
4,660 |
3.5 % |
MG |
4,769 |
4,485 |
6.3 % |
5,006 |
- 4.7 % |
ரெனால்ட் |
3,709 |
3,707 |
0.1 % |
4,625 |
- 19.8 % |
ஃபோக்ஸ்வேகன் |
3,273 |
3,049 |
7.3 % |
3,286 |
- 0.4 % |
முக்கிய விவரங்கள்
-
டாடா, ஹூண்டாய் மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் விற்பனையை விட மாருதி தொடர்ந்து விற்பனையில் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. மாதாந்திர மற்றும் வருடாந்திர விற்பனை விவரங்களின்படி மாருதி இரண்டிலுமே வளர்ச்சியைக் கண்டுள்ளது.
-
ஹூண்டாய் நிறுவனத்தின் வருடாந்திர விற்பனை சிறிய அளவில் அதிகரித்துள்ளது, ஆனால் அதன் மாதாந்திர விற்பனையில் 2 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது.
-
டாடாவின் விற்பனை புள்ளிவிவரங்கள் ஹூண்டாயின் விற்பனைக்கு இணையாக உள்ளது, ஆண்டு விற்பனை கிட்டத்தட்ட 2 சதவீதம் அதிகரித்தது, ஆனால் மாதாந்திர விற்பனை 2.5 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
மேலும் படிக்க: Tata Altroz Racer மற்றும் Tata Altroz: இரண்டுக்கும் இடயே உள்ள 5 முக்கிய வித்தியாசங்கள்
-
மஹிந்திராவின் செயல்திறன் வளர்ச்சி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது, மாதாந்திர வளர்ச்சி 5 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது, அதே நேரத்தில் அதன் வருடாந்திர வளர்ச்சி 31.4 சதவிகிதம் வியக்க வைக்கிறது, இது மே 2024-இல் அனைத்து கார் தயாரிப்பாளர்களை விடவும் மிக அதிகமாக இருந்தது.
-
டொயோட்டா மே 2024-இல் வலுவான விற்பனை வளர்ச்சியை காட்டியுள்ளது. அதன் மாதாந்திர விற்பனை 28 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்ததுள்ளது. மற்றும் வருடாந்திர விற்பனை கிட்டத்தட்ட 24 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
-
கியா அதன் மாதாந்திர விற்பனையில் சரிவை சந்தித்தது; இருப்பினும் மே 2023 உடன் ஒப்பிடுகையில் அதன் வருடாந்திர விற்பனை கிட்டத்தட்ட 4 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த பட்டியலில் விற்பனையான 10,000 யூனிட்களை தாண்டிய கடைசி பிராண்ட் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மாதாந்திர மற்றும் வருடாந்திர விற்பனையில் வளர்ச்சியை அனுபவிக்கும் கடைசி கார் தயாரிப்பாளராக ஹோண்டா தனித்து நிற்கிறது. மாதாந்திர புள்ளிவிவரங்களில் கிட்டத்தட்ட 11 சதவீதம் அதிகரிப்பு மற்றும் ஆண்டுக்கு ஆண்டு எண்ணிக்கையில் 3.5 சதவீதம் அதிகரிப்புடன் ஹோண்டா ஒரு நேர்மறையாக பட்டியலை முடிக்கிறது.
-
MG ஏப்ரல் மாதத்தை விட மே 2024-இல் அதிக கார்களை விற்பனை செய்திருந்தாலும் கூட, அதன் வருடாந்திர விற்பனை கிட்டத்தட்ட 5 சதவீதம் சரிவை சந்தித்தது, மேலும் ஒட்டுமொத்த விற்பனை புள்ளிவிவரங்கள் விற்கப்பட்ட 5,000 யூனிட்டுகளுக்கு கீழே சரிந்துள்ளது.
மேலும் பார்க்க: MG Gloster Desertstorm எடிஷனின் 7 அசத்தலான புகைப்படங்களின் மூலம் அதைப் பற்றி விரிவாக தெரிந்து கொள்ளுங்கள்
-
முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது மே 2024-இல் ரெனால்ட் வெறும் இரண்டு யூனிட்களை மட்டுமே விற்க முடிந்துள்ளது, அதன் வருடாந்திர விற்பனை கிட்டத்தட்ட 20 சதவீதம் குறிப்பிடத்தக்க சரிவைக் கண்டுள்ளது.
-
கடைசியாக, வருடாந்திர விற்பனையில் ஓரளவு இழப்பை சந்தித்த போதிலும், மாதாந்திர விற்பனையில் 7 சதவீதத்திற்கும் அதிகமான குறிப்பிடத்தக்க அதிகரிப்புடன் ஃபோக்ஸ்வேகன் இந்த மாதம் 10-வது இடத்தைப் பிடித்துள்ளது.