Tata Curvv EV காரை வீட்டிற்கு கொண்டு செல்லும் இந்திய ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர்
modified on செப் 11, 2024 07:06 pm by dipan for டாடா கர்வ் இவி
- 45 Views
- ஒரு கருத்தை எழுதுக
முன்னாள் ஹாக்கி கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷைத் தொடர்ந்து டாடா கர்வ் EV-யை பரிசாகப் பெறும் இரண்டாவது இந்திய ஒலிம்பிக் வீரர் மனு பாக்கர் ஆவார்
பாரீஸ் ஒலிம்பிக் 2024-ல் போட்டிகளில் இரட்டை வெண்கலப் பதக்கங்களை வென்ற இந்திய தொழில்முறை துப்பாக்கி சுடும் வீராங்கனையான மனு பாக்கர் இப்போது டாடா கர்வ் EV-இன் பெருமைக்குரிய உரிமையாளராகிவிட்டார். முன்னாள் இந்திய ஃபீல்ட் ஹாக்கி கோல்கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஷைத் தொடர்ந்து கர்வ் EV-யை வீட்டிற்கு கொண்டு செல்லும் இரண்டாவது ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீரராவார். மனு பாக்கர் பரிசாக பெற்ற டாடா கர்வ் EV பற்றி விரிவாக பார்ப்போம்.
மனு பாக்கரின் டாடா கர்வ் EV
மனு பாக்கரின் டாடா கர்வ் EV முழுவதும் கிரே கலரில் உள்ளது. இந்தக் காரில் பனோரமிக் சன்ரூஃப், விண்ட்ஷீல்டில் அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) கேமரா மற்றும் டூயல்-ஸ்கிரீன் டேஷ்போர்டு ஆகியவை இடம்பெற்றுள்ளன. இதில் 18-இன்ச் ஏரோடைனமிக் அலாய் வீல்கள் மற்றும் முன்பக்க பார்க்கிங் கேமரா உள்ளது, இது ஃபுல்லி லோடெட் எம்பவர்டு பிளஸ் A வேரியன்ட் என்பதைக் குறிக்கிறது.
EV ஆனது மனு பாகருக்காக பிரத்தியேகமாக கஸ்டமைஸ் செய்யப்பட்டது, முன்பக்க பயணிகளுக்கு அவரது பெயருடன் கூடிய கருப்பு நிற தலை குஷன்கள் மற்றும் சீட் பெல்ட்களில் அவரது பெயர் பொறிக்கப்பட்டுள்ளது.
கர்வ் EV-யின் எம்பவேர்டு பிளஸ் A வேரியன்ட் 55 கிலோவாட் பேட்டரி பேக்குடன் வருகிறது, இது 585 கி.மீ ரேஞ்ஜை வழங்குகிறது. இந்த எலெக்ட்ரிக் கூபேயின் லோயர்-ஸ்பெக் வேரியன்ட்கள் சிறிய 45 கிலோவாட் பேட்டரி பேக்குடன் வருகின்றன, இது 502 கி.மீ என்ற ரேஞ்ஜை வழங்குகிறது.
டாப்-ஸ்பெக் மாடலில் 9-ஸ்பீக்கர் ஜே.பி.எல் சவுண்ட் சிஸ்டம், பனோரமிக் சன்ரூஃப், 12.3-இன்ச் டச்ஸ்கிரீன் மற்றும் 10.25 இன்ச் டிரைவரின் டிஸ்ப்ளே ஆகியவை உள்ளன. ஆறு ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா மற்றும் மேம்படுத்தப்பட்ட டிரைவர் உதவிக்கான லெவல்-2 அட்வான்ஸ்ட் டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம் (ADAS) தொகுப்பு போன்ற மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களும் இதில் அடங்கும்.
மேலும் படிக்க: வரும் பண்டிகை காலத்தை முன்னிட்டு சில டாடா கார்களின் விலை குறைக்கப்பட்டுள்ளது
விலை மற்றும் போட்டியாளர்கள்
எம்பவர்டு பிளஸ் A வேரியன்ட்டின் விலை ரூ.21.99 லட்சமாக உள்ளது. டாடாவின் முதன்மை EV-யின் விலையானது ரூ.17.49 லட்சத்தில் தொடங்கி ரூ.21.99 லட்சம் வரை உள்ளது. டாடா கர்வ் EV ஆனது MG ZS EV உடன் போட்டியிடுகிறது மற்றும் MG விண்ட்சர் EV-க்கு மாற்றாக செயல்படுகிறது. கூடுதலாக, இது BYD அட்டோ 3 உடன் ஒப்பிடும்போது இது மிகவும் விலை குறைவான ஆப்ஷனாக இருக்கும்.
விலை அனைத்தும் எக்ஸ்-ஷோரூம்-க்கானவை, பான்-இந்தியா
ஆட்டோமோட்டிவ் உலகில் இருந்து உடனடி அப்டேட்டுகளை பெற கார்தேகோவின் வாட்ஸ்அப் சேனலை ஃபாலோ செய்யவும்.
மேலும் படிக்க: கர்வ் EV ஆட்டோமேட்டிக்
0 out of 0 found this helpful