சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

மஹிந்திரா எக்ஸ்யுவி400 எஃபெக்ட்: நெக்சான் ஈவி பிரைம் மற்றும் மேக்ஸ் விலைகளை டாடா அதிரயடியாகக் குறைத்துள்ளது

rohit ஆல் ஜனவரி 19, 2023 06:19 pm அன்று பப்ளிஷ் செய்யப்பட்டது
95 Views

நெக்சான் ஈவி மேக்ஸ் இப்போது கிட்டத்தட்ட ரூ. 2 இலட்சம் மலிவு விலையில் கிடைக்கிறது மற்றும் அதன் பயணதூரவரம்பு 437 கிமீ முதல் 453 கிமீ வரை உள்ளது.

  • வரம்பு புதுப்பித்தல் பற்றிய விவரங்கள் ஜனவரி மாதம் 25 ஆம் தேதி முதல் வெளியிடப்படும்.

  • டாடா இப்போது மேக்ஸ் கார்களின் வரிசையில் ஒரு புதிய அடிப்படை-சிறப்பு கொண்ட எக்ஸ்எம் டிரிம் ஐ வழங்குகிறது.

  • அதன் முன்பதிவுகள் தற்போது நடைபெற்று வருகின்றன, ஏப்ரல் முதல் டெலிவரி தொடங்கும்.

  • நெக்சான் ஈவி பிரைம் ரூ. 50,000 வரை மலிவு விலையில் கிடைக்கிறது.

  • நெக்சான் ஈவி மேக்ஸ் இன் விலை சீராக ரூ.85,000 குறைக்கப்பட்டுள்ளது.

  • தற்போதைய நெக்சான் ஈவி மேக்ஸ் உரிமையாளர்கள் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் மென்பொருள் புதுப்பிப்பு மூலம் அதிகரித்த பயணதூர வரம்பைப் பெறுவார்கள்.

  • நெக்சான் ஈவி பிரைம் ஆனது 30.2kWh பேட்டரி தொகுைப்பைப் பெறுகிறது, மேக்ஸ் 40.5kWh பிரிவைக் கொண்டுள்ளது.

டாடா நெக்சான் ஈவி பிரைம் மற்றும் மேக்ஸ். விலைகளை மறுமதிப்பீடு செய்துள்ளது. கார் தயாரிப்பாளரின் ஒரே மாற்றம் இதுதான் என்று நீங்கள் நினைத்தால், உங்கள் நினைவுக்குதிரைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள், ஏனெனில் அது மேக்ஸின் கார்வரிசையில் ஒரு புதிய பேஸ்-ஸ்பெக் எக்ஸ்எம் டிரிம் ஐ அறிமுகப்படுத்தியுள்ளது, மேலும் அதன் எதிர்பார்க்கப்படும் பயணதூர வரம்பு 437 கிமீ முதல் 453 கிமீ வரை உயர்ந்துள்ளது..

கீழே உள்ள பிரைம் மற்றும் மேக்ஸ் இரண்டின் திருத்தப்பட்ட புதிய வகைகளின் விலைகளைப் பாருங்கள்:

நெக்சான் ஈவி பிரைம்

வகைகள்

பழைய விலை

புதிய விலை

வேறுபாடுகள்

எக்ஸ்எம்

ரூ. 14.99 இலட்சம்

ரூ. 14.49 இலட்சம்

-ரூ 50,000

எக்ஸ்இசட்+

ரூ. 16.30 இலட்சம்

ரூ. 15.99 இலட்சம்

-ரூ 31,000

எக்ஸ்இசட்+ லக்ஸ்

ரூ. 17.30 இலட்சம்

ரூ. 16.99 இலட்சம்

-ரூ 31,000

மேலும் படிக்க: விரைவில் விற்பனைக்கு டாடா அல்ட்ரோஸ் ரேசர்

நெக்சான் ஈவி மேக்ஸ்

வகைகள்

பழைய விலை

புதிய விலை

வேறுபாடுகள்

3.3kW சார்ஜர்

எக்ஸ்எம் (புதியது)

ரூ. 16.49 இலட்சம்

எக்ஸ்இசட்+

ரூ. 18.34 இலட்சம்

ரூ. 17.49 இலட்சம்

-ரூ. 85,000

எக்ஸ்இசட்+ லக்ஸ்

ரூ. 19.34 இலட்சம்

ரூ. 18.49 இலட்சம்

-ரூ. 85,000

7.2kW சார்ஜர்

எக்ஸ்எம் (புதியது)

ரூ. 16.99 இலட்சம்

எக்ஸ்இசட்+

ரூ. 18.84 இலட்சம்

ரூ.17.99 லட்சம்

-ரூ. 85,000

எக்ஸ்இசட்+ லக்ஸ்

ரூ. 19.84 இலட்சம்

ரூ. 18.99 இலட்சம்

-ரூ. 85,000

நெக்சான் ஈவி பிரைம் விலை அரை லட்சம் ரூபாய் வரை குறைக்கப்பட்டுள்ள நிலையில், நெக்சான் ஈவி மேக்ஸ்-இன் கார்களின் விலை இப்போது ரூ.85,000 வரை குறைந்துள்ளது. பிந்தையது இரண்டு சார்ஜர் விருப்பங்களுடனும் ஒரு புதிய நுழைவு நிலை எக்ஸ்எம் டிரிம் ஐப் பெறுகிறது, இது நெக்சான் ஈவி மேக்ஸ் ஐ முன்பை விட ரூ.1.85 இலட்சம் மலிவு விலையில் வழங்குகிறது.

ஆட்டோ ஏசி, எல்இடி டிஆர்எல்களுடன் கூடிய புரொஜெக்டர் ஹெட்லைட்கள், எல்இடி டெயில்லைட்கள், அமுத்து பொத்தான் ஸ்டார்ட்/ஸ்டாப், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் மற்றும் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் போன்ற அம்சங்களுடன் நெக்ஸான் ஈவி மேக்ஸின் புதிய எக்ஸ்எம் டிரிம்களை டாடா வழங்குகிறது. பாதுகாப்பைப் பொறுத்தவரை, இது எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ஈஎஸ்பி) மற்றும் பின்புற டிஸ்க் பிரேக்குகளைப் பெறுகிறது.

விலைத் திருத்தங்களைத் தவிர, நெக்சான் ஈவி மேக்ஸ் ஆனது அதன் பயணதூர வரம்பில் குறிப்பிடத்தக்க ஊக்கத்தைப் பெறுகிறது. எலெக்ட்ரிக் எஸ்யுவி ஆனது அராய்-மதிப்பீடு செய்யப்பட்ட 437கிமீ பயணதூரவரம்பைக் கொண்டிருந்தது, ஆனால் அது இப்போது 453கிமீ (எம்ஐடிசி-மதிப்பீடு) வரை பயணிக்க முடியும். இந்த புதுப்பிப்பு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும், அதே நேரத்தில் தற்போதுள்ள நெக்சான் ஈவி மேக்ஸ் உரிமையாளர்களும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் டாடா டீலர்ஷிப்களில் மென்பொருள் புதுப்பிப்பு மூலம் அதே நன்மையைப் பெறுவார்கள்.

மேலும் விவரம் அறிந்து கொள்ளுங்கள் : 12 படங்களில் டாடா ஹாரியர் மற்றும் ஹாரியர் ஈவி கான்செப்ட் இடையே உள்ள வடிவமைப்பு வேறுபாடுகளை ஆராயுங்கள்

நெக்சான் ஈவி பிரைம் மற்றும் மேக்ஸ் இன் தொழில்நுட்ப விவரக்குறிப்புகளை இங்கே பார்க்கலாம்:

விவரக்குறிப்புகள்

நெக்சான் ஈவி பிரைம்

நெக்சான் ஈவி மேக்ஸ்

பேட்டரி தொகுப்பு

30.2kWh

40.5kWh

மின்சார மோட்டார் திறன்

129பிஎஸ்

143பிஎஸ்

மின்சார மோட்டார் திருப்புத்திறன்

245என்எம்

250என்எம்

சார்ஜிங் நேரம்

8.5 மணிநேரங்கள் (3.3kW)

8.5 மணிநேரங்கள் (3.3kW)/ 6 மணிநேரங்கள் (7.2kW)

50kW டிசி விரைவு சார்ஜிங்

60 நிமிடங்களில் 0-80 சதவீதம்

56 நிமிடங்களில் 0-80 சதவீதம்

டாடா இப்போது புதிய நெக்சான் ஈவி மேக்ஸ் டிரிம்களுக்கான முன்பதிவுகளை இன்று முதல் ஏற்றுக்கொள்கிறது மற்றும் அதன் டெலிவரிகள் ஏப்ரல் முதல் தொடங்கும். நெக்சான் ஈவி பிரைம் மற்றும் மேக்ஸ் ஆகியவை புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட மஹிந்திரா எக்ஸ்யுவி400க்கு போட்டியாக உள்ளன. இவை ஹீண்டாய் கோனா எலக்ட்ரிக் மற்றும் எம்ஜி இசட்எஸ் ஈவி ஐக் காட்டிலும் கூடுதல் மலிவு விலைகளைக் கொண்டுள்ளது .

மேலும் படிக்கவும்: நெக்சான் ஈவி பிரைம் ஆட்டோமெட்டிக்

Share via

Write your Comment on Tata நெக்ஸன் இவி Prime 2020-2023

explore similar கார்கள்

ஓலா எலக்ட்ரிக் கார்

4.311 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
Rs.40 லட்சம்* Estimated Price
டிசம்பர் 16, 2036 Expected Launch
ட்ரான்ஸ்மிஷன்ஆட்டோமெட்டிக்
அறிமுகம் செய்யப்பட்டால் எனக்கு குறிப்புணர்த்துக

டாடா நிக்சன் இவி prime 2020-2023

4.3167 மதிப்பீடுகள்இந்த காரை ரேட்டிங் செய்ய
டாடா நிக்சன் இவி prime 2020-2023 ஐஎஸ் discontinued மற்றும் no longer produced.

Enable notifications to stay updated with exclusive offers, car news, and more from CarDekho!

டிரெண்டிங் எலக்ட்ரிக் கார்கள்

  • பிரபலமானவை
  • உபகமிங்
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை