இந்தியாவின் கரடுமுரடான பாதை பயணிகள்: மஹிந்திரா தார் – மாருதி ஜீப்ஸி – போர்ஸ் குர்கா இடையே போட்டி
மஹிந்திரா தார் 2015-2019 க்கு published on jul 29, 2015 12:42 pm by அபிஜித்
- 10 பார்வைகள்
- 1 கருத்துகள்
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்: இந்தியாவில் உள்ள கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்ற எஸ்யூவிகளாக உள்ள மஹிந்திரா தார், மாருதி ஜீப்ஸி மற்றும் போர்ஸ் குர்கா ஆகிய வாகனங்கள் உண்மையில் கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்றவையாக உள்ளன. மேற்கண்ட மூன்று வாகனங்களையும் ஒப்பீடு செய்தால், ஒன்றுக்கொன்று எப்படி சிறந்து விளங்குகின்றன என்று பார்ப்போம்.
கரடுமுரடு பாதைகளில் திறன்
மேற்கண்ட மூன்று வாகனங்களும் இந்தியாவில் உள்ள பல கரடுமுரடான பாதைகளின் சாவல்களை சந்தித்து, அப்பாதைகளில் தங்களின் திறனை, ஒவ்வொன்றும் நிரூபித்துள்ளன. வாகன சந்தையில் பல மாற்றங்கள் ஏற்பட்ட நிலையிலும், எதிர்பார்க்கப்படும் சில சிறப்புத் தன்மைகளை இம்மூன்றை தவிர வேறு எதிலும் காண முடிவதில்லை என்பதும், இம்மூன்றுக்கும் இடையே போட்டி நிலவ மற்றொரு காரணமாகும். எனவே கடினமாக வடிவமைக்கப்பட்ட கார்களின் திறன்களுக்கு இறங்கி வருபவை, இம்மூன்றின் தரத்திற்கு ஒத்து சேர்ந்து கொள்கிறது. குறைந்த மற்றும் உயர்ந்த விகித பரிமாற்ற பெட்டியை (டிரான்ஸ்பர் பாக்ஸ்) பொறுத்த வரையில், இம்மூன்றும் மற்ற வாகனங்களின் சிறப்புத் தன்மையுடன் நிறைந்துள்ளன. மேலும் போர்ஸ் குர்காவில் கரடுமுரடான பாதைகளுக்கு ஏற்ற கூடுதல் சிறப்பு தன்மைகளான ரியர் ஆக்ஸில் மற்றும் முன்புற லாக்கிங் டிபரன்ட்டியல்ஸ் ஆகியவை இடம் பெற்றுள்ளன. தார் வாகனத்தின் சமீப கால மறுசீரமைப்பு வெளியீட்டில், ரியர் ஆக்ஸிலில் மெக்கானிக்கல் லாக்கிங் டிபரன்ட்டியல் இணைக்கப்பட்டு, முன் வெளியீட்டை விட கரடுமுரடு பாதைகளுக்கு ஏற்ப திறன் உயர்த்தப்பட்டது. மறுபுறம் ஜீப்ஸியில், முன்புற அல்லது ரியரில் லாக்கிங் டிப் சேர்க்கப்பட்டுள்ளது.
பரிணாமத்தில்
கரடுமுரடான பாதைகளுக்கு சிறந்த வாகனத்தை தீர்மானிப்பதில், இது ஒரு முக்கிய அம்சமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. வாகனத்தின் பரிணாமம் சிறப்பாக அமைந்திருந்தால், சிக்கலான அல்லது சவால் மிகுந்த பாதைகளில் பெரும் உதவியாக இருக்கும். தார் மற்றும் குர்கா ஆகிய இரண்டும் சப்-4 மீட்டர் வாகனங்களாக உள்ளன. ஜீப்சி 4 மீட்டருக்கும் அதிகமாக இருந்தாலும், அதன் குறுகலான அகலம் மிகவும் கடினமான இடங்களுக்கும் செல்ல உதவுகிறது. அதே நேரத்தில் நிர்ணயிக்கப்பட்ட சிக்கலான பாதையில், வாகனத்தின் குறுகலான அகலம் உதவுவது போல தெரிந்தாலும், அது சிறந்த இழுவை திறனை பெறுவதை பாதிக்கிறது. இங்கே தான் தார் மற்றும் குர்கா ஆகியவை தங்களின் சிறப்பை வெளிப்படுத்துகின்றன. இவற்றின் அகலமான டிராக்குகள் மூலம் வழுக்கும் நிலப்பகுதியிலும் நிலையாக நிற்க முடிகிறது.
என்ஜின்:
மேற்கூறிய மூன்றில், தார் வாகன மோட்டார், இடையிடையே பல மாற்றங்களை பெற்று தற்போது சிறந்த மற்றும் நவீன மோட்டாரை கொண்டுள்ளது. இதனால் விரைவான மற்றும் குறைந்த முனை டார்க் இழுவை என்று இரு வேகங்களுக்கும் சிறந்ததாக உள்ளது. இதில் 2.5 லிட்டர் சிஆர்டிஇ மோட்டார் உற்பத்தி செய்யும் 105 பிஹெச்பி விசை மற்றும் 247 என்எம் டார்க் கிடைக்கிறது. போர்ஸ் குர்காவில் 2.6 லிட்டர் மிரிக்-டிரைவ்டு மோட்டார் மூலம் 82 பிஹெச்பி விசை மற்றும் 230 என்எம் டார்க் கிடைக்கிறது. இது அவ்வளவாக மாற்றங்களை அடையவில்லை என்றாலும், கரடுமுரடான பாதைகளில், லோ-இன்டு டார்க் போல சிறப்பாக செயல்பட்டு, கடினமான பாதைகளை கடந்து விடுகிறது. பெட்ரோல் மூலம் செயல்படுவதால், ஜீப்ஸி உடன் ஒப்பிடும் போது, இதன் மோட்டார் மிகவும் மென்மையாக உள்ளது. இந்த பட்டியலில் 1.3 லிட்டர் எம்பிஎப்ஐ சேர்கிறது. இதன் குறைந்த கட்டுபாடான எடை மூலம் கடினமான பாதைகளில் எளிதாக பயணித்து, அபாயத்தை விரைவில் ஊடுருவி கடந்து வெளியே வர உதவுகிறது.
தீர்ப்பு
கரடுமுரடான பாதைகளுக்கு சிறந்தது என்ற பட்டத்தை அளிக்க வேண்டுமானால், அது போர்ஸ் குர்காவிற்கு கிடைக்கும். ஏனெனில் கரடுமுரடான பாதைகளில் அதன் சிறப்புத் தன்மைகள், மற்ற இரண்டையும் பின்னுக்கு தள்ளி விடுகிறது. மோசமான கரடுமுரடான பாதைகளில் தினமும் நீங்கள் பயணிக்காத நிலையில், இதன் உட்புற கட்டமைப்பு ஒரு காரில் இருப்பது போன்ற அனுபவத்தை அளிப்பது மற்றொரு சிறப்பாகும். அடுத்த இடத்தை பெற்றுள்ள ஜீப்ஸியில், அதன் உட்புற கட்டமைப்பே முதல் பிரச்னையாக தெரிகிறது. இதில் ஏ/சி வசதி இல்லை என்பதால் வசதியில் இன்னும் பின்னுக்கு தள்ளப்படுகிறது. அதேபோல ஜீப்ஸியில் உள்ள பெட்ரோல் என்ஜின் மூலம் உங்களுக்கு லோ என்டு புல்லிங் டார்க் கிடைப்பதில்லை.
எனவே நமது தீர்ப்பு தார் உடன் இணைகிறது. இதில் ரசாயனமற்ற மற்றும் சமகால உட்புற கட்டமைப்பு உள்ளதால், தினமும் ஒரு சாதாரண காரில் பயணிக்கும் அனுபவத்தை நீங்கள் பெற முடிகிறது. இரண்டாவதாக, 2.5 லிட்டர் மோட்டார் மூலம் லோ என்டு டார்க் சிறப்பாக கிடைக்கிறது. அதே நேரத்தில் தொந்தரவு மிகுந்த டீசலை கொண்டு மணிக்கு 120 கிமீட்டருக்கு மேலே எளிதாக அழைத்து செல்கிறது.
- Renew Mahindra Thar 2015-2019 Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
- Loan Against Car - Get upto ₹25 Lakhs in cash
0 out of 0 found this helpful