• English
  • Login / Register

மஹிந்திரா நிறுவனம் ஒரே மாதத்தில் தனது KUV 100 வாகனங்களுக்கு 21000 முன்பதிவுகளை பெற்றுள்ளது.

published on பிப்ரவரி 18, 2016 12:06 pm by sumit for மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி

  • 19 Views
  • ஒரு கருத்தை எழுதுக

Mahindra KUV100

நாம் எதிர்பார்த்தது  போலவே மஹிந்திரா KUV 100 SUV வாகனங்கள் அறிமுகமான 34 நாட்களில்  21000   கார்கள் புக்கிங் ஆகி உள்ளன.   இதுவரை 1.75 லட்சம் பேர் இந்த காரைப் பற்றிய தகவல்களை ஆர்வத்துடன் தேடித் பெற்றுள்ளனர். மேலும் 2.7 மில்லியன் பேர் வலைதளத்தை பார்த்துள்ளனர். 

இந்த வெற்றியை குறித்து கருத்து தெரிவித்துள்ள  மஹிந்திரா& மஹிந்திராவின்  தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி திரு. பிரவின் ஷா , “ எங்களது KUV 100 SUV வாகனத்திற்கு இத்தகைய அமோக ஆதரவு அளித்துள்ள அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ஏராளமானவர்கள் இந்த  வாகனத்தின் தகவல்களை ஆவலுடன் சேகரித்து சென்றுள்ளனர். இதுவரை 21000   வாகனங்கள் புக்கிங் செய்யப்பட்டுள்ளன. இந்த KUV யின் அறிமுகத்தின் மூலம் மஹிந்திரா நிறுவனம் பெருமையுடன் ஒரு புது வாகன பிரிவை (மைக்ரோ SUV) மக்களுக்கு அர்பணித்துள்ளது.  காம்பேக்ட் கார்களுக்கு இந்த மைக்ரோ SUV பிரிவு வாகனம் ஒரு சரியான மாற்றாக அமையும் . இதில் மேலும் மகிழ்ச்சியான விஷயம் என்னவென்றால் இதுவரை புக்கிங் ஆன  KUV வாகனங்களில் பாதிக்கு மேல் பெட்ரோல் வேரியன்ட் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.  நாங்கள் இந்த வாகனத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சொன்னது போல  எங்களது   உற்பத்தி திறனை மேலும் சிறப்பாக்கி  வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து உயர்வான சேவையை வழங்குவதில் முழுக் கவனம் செலுத்தி வருகிறோம்".

Mahindra KUV100

இந்த  KUV 100 முற்றிலும் புதிய எம்பால்கன் வகையைச் சேர்ந்த என்ஜின் பொருத்தப்பட்டு வெளியாகி உள்ளது.  1.2 லிட்டர் G80  பெட்ரோல் என்ஜின் 82 bhp அளவு சக்தி மற்றும் 115 Nm அளவு டார்க் ஆகியவற்றை வெளியிடுகிறது. மற்றொரு ஆப்ஷனான D75 டீசல் என்ஜின் 77 bhp அளவு சக்தியையும்  190 Nm அளவு டார்க்கையும் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. அனைத்து வேரியன்ட்களிலும் 5 - வேக மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் வசதி இணைக்கப்பட்டுள்ளது. 

இந்த காரில் மஹிந்திரா நிறுவனத்தினர்  மிக வித்தியாசமாக சிந்தித்து  சில வடிவமைப்புக்களை செய்துள்ளனர்.  சில காலமாக அதிகமாக நாம் பார்க்காத பேரலல் இருக்கைகளை இந்த வாகனத்தில் அமைத்துள்ளனர்.   இது ஒரு பெரிய சாதகமான விஷயமாக மஹிந்திரா நிறுவனத்திற்கு அமைந்து விட்டது.  இந்த வசதியினால் இப்போது கூடுதல் எண்ணிக்கையிலான நபர்கள் அமர்ந்து பயணிக்க முடிகிறது. 

மேலும்  வாசிக்க : கார் டீலர்களை டிஜிட்டல் முறைக்கு மாற்றுவதே எங்கள் நோக்கம்: அமித் ஜெய்ன், CarDekho

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra kuv 100 nxt

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • Kia Syros
    Kia Syros
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: மார, 2025
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: ஜனவ, 2025
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
  • லேக்சஸ் lbx
    லேக்சஸ் lbx
    Rs.45 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: டிச்பர், 2024
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    அறிமுக எதிர்பார்ப்பு: பிபரவரி, 2025
×
We need your சிட்டி to customize your experience