• English
    • Login / Register

    ரூ.4.42 லட்சத்தில் மஹிந்திரா KUV1OO அறிமுகம்

    மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டீ க்காக ஜனவரி 18, 2016 11:23 am அன்று arun ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது

    • 15 Views
    • 12 கருத்துகள்
    • ஒரு கருத்தை எழுதுக

    KUV100

    மஹிந்திரா நிறுவனம் தனது மைக்ரோ SUV-யான KUV100-யை, ரூ.4.42 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், புனே) விலை நிர்ணயித்து அறிமுகம் செய்துள்ளது. ஒருசில வாரங்களுக்கு முன்பே இந்த KUV100-க்கான முன்பதிவு துவக்கப்பட்ட நிலையில், இந்த கவர்ச்சிகரமான விலை நிர்ணயம் மூலம் முன்பதிவின் வேகம் நிச்சயம் அதிகரிக்கும். இதில் KUV என்பதற்கு கூல் யூட்டிலிட்டி வெஹிக்கிள் என்று பொருள்படும் நிலையில், இந்திய வாகன சந்தையில் இவ்வாகனத்திற்கான நேரடி போட்டியாளராக எதுவும் இல்லை. அதே நேரத்தில், B-பிரிவை சேர்ந்த ஹேட்ச்களில் முக்கியமாக ஹூண்டாய் கிராண்ட் i10, மாருதி சுசுகி ஸ்விஃப்ட் மற்றும் ஃபோர்டு ஃபிகோ ஆகியவற்றுடன் இது போட்டியிட வாய்ப்புள்ளது. இதை கூறும் போதே, இதே பிரிவிற்குள் உட்படும் தனது இக்னிஸ் காரை மாருதி நிறுவனம், இந்தாண்டிற்குள் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    KUV100 Price

    இயந்திரவியலை குறித்து பார்க்கும் போது, மஹிந்திரா KUV100-யை பிராண்டின் புதிய 3-சிலிண்டர் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் இயக்க உள்ளன. இதன் பெட்ரோல் வகையில், mஃபால்கன் G80 1.2-லிட்டர் யூனிட்டை கொண்டிருக்கும். இதன்மூலம் 5,500 rpm-ல் 82 bhp ஆற்றலையும், 3500-3600 rpm-க்கும் இடைப்பட்ட நிலையில் 114 Nm முடுக்குவிசையையும் வெளியிடும். டீசல் வகையில் mஃபால்கன் D75 1.2-லிட்டர் டர்போ டீசலை கொண்டிருக்கும். இதன்மூலம் 3750 rpm-ல் 77 bhp ஆற்றலையும், 1750-2250 rpm-க்கு இடைப்பட்ட நிலையில் 190 Nm முடுக்குவிசையையும் வெளியிடும்.

    KUV100 Variants

    KUV100-ல் முதல் வரிசையின் மத்தியில் ஒரு பெரியவர் அமரும் வகையிலான 3வது சீட் அமையப் பெற்று, மொத்த 6 சீட் கொண்ட வாகனமாக மாறியுள்ளது. உயர் வகைகளில் 5 சீட்களை மட்டும் கொண்டதாகவும் இது கிடைக்கிறது. பாதுகாப்பை பொறுத்த வரை, KUV100-ன் எல்லா வகைகளிலும் தரமான ABS-யை கொண்டும், எல்லா வகைகளிலும் இரட்டை-முன்பக்க ஏர்பேக்குகள் தேர்விற்குரியதாகவும் அளிக்கப்படும் என்று மஹிந்திரா நிறுவனம் அறிவித்துள்ளது.

    KUV100 Interiors

    KUV100-ன் பாடி மொத்தம் 7 நிறங்களில் கிடைக்கிறது. அவையாவன: டிசைனர் க்ரே, பியர்ல் வைட், ஃபேலம்பாயண்ட் ரெட், அக்வாமரைன், டாஸ்ஸலிங் சில்வர், மிட்நைட் பிளேக் மற்றும் ஃபைரி ஆரஞ்சு. இந்த காரில் 2வது வரிசை மற்றும் டிரைவர் உடனான சீட்டிற்கு கீழே பொருள் வைப்பு இடவசதி, கூல்டு குளோ பாக்ஸ் மற்றும் சன்கிளாஸ் ஹோல்டர் உள்ளிட்ட எண்ணற்ற பொருள் வைக்கும் இடவசதியை காண முடிகிறது. மேலும் KUV100-ல் ஒரு கியர் இன்டிகேட்டர், புடில் லெம்ப் மற்றும் ஒரு பளபளக்கும் கீ ரிங் ஆகிய அம்சங்களும் உள்ளன. இதிலுள்ள இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தில் 6-ஸ்பீக்கர்களை பெற்று, அதனுடன் ப்ளூடூத், ஹேன்ஸ்-ப்ரீ, USB, DIS மற்றும் AUX கனெக்ட்டிவிட்டி ஆகியவை உள்ளன.

    மேலும் வாசிக்க 

    மஹிந்த்ரா KUV 100 Vs ரினால்ட் கிவிட்: சிறிய-பெரிய கார்களின் வளர்ச்சி!

    was this article helpful ?

    Write your Comment on Mahindra கேயூவி 100 என்எக்ஸ்டீ

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் ஹேட்ச்பேக் கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience