• English
  • Login / Register

மஹிந்த்ரா KUV 100 ஜனவரி 15 -ஆம் தேதி அறிமுகம்: முழுமையான வீடியோ வெளியானது

published on ஜனவரி 13, 2016 04:03 pm by nabeel for மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி

  • 11 Views
  • 1 கருத்துகள்
  • ஒரு கருத்தை எழுதுக

அறிமுகத்திற்கு இரண்டு நாட்களே இருக்கும் இறுதி கட்டத்தில், மஹிந்த்ரா KUV 100 கார் மீண்டும் உளவாளிகளின் கண்களில் தென்பட்டுள்ளது. சென்ற முறை புகைப்படம் மட்டுமே வெளியிடப்பட்டது, ஆனால் இந்த முறை கார் ஆர்வலர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் விதத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. உளவாளிகள் எடுத்துள்ள இந்த வீடியோவில் வரும் கார், KUV 100 மாடலின் உயர்தர வேரியண்ட்டாக இருக்கும் என்று தெரிகிறது, ஏனெனில், இதில் அலாய் சக்கரங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும், KUV 100 மாடலில், முன்புறத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளுக்கு லாப் பெல்ட்டுடன், 6 இருக்கைகள் கொண்ட ஒரு வேரியண்ட் ஆப்ஷனில் வரும் என்று தெரிகிறது. இதற்கு முன் வெளிவந்த புகைப்படங்களில், பல விதமான கோணங்களில் இந்த காரின் புகைப்படம் வெளிவந்திருந்தாலும், இந்த முறை வெளியாகியுள்ள வீடியோவில், உட்புறம், வெளிப்புறம், பக்கவாட்டு தோற்றம் மற்றும் பின்புற தோற்றம் என்று இந்த காரைப் பற்றிய விவரங்களை முழுவதுமாக வெளிப்படுத்தும் விதத்தில் உள்ளதால், கார் ஆர்வலர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 


KUV 100 காரின் கேபின் புதுப் பொலிவடைந்துள்ளது. டாஷ்போர்டில், எப்போதும் உள்ள நாப்கள் மட்டுமின்றி, கியர் லீவரும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், 3 ஸ்போக் ஸ்டியரிங் சக்கரத்தில் கண்ட்ரோல் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன என்பது, இந்த வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. எனினும், வீடியோவில் வெளியாகியுள்ள வேரியண்ட்டை தவிர மற்ற வேரியண்ட்களிலும் இந்த அமைப்பு இடம்பெறுமா என்பது தெரியவில்லை. கியர் ஷிப்டருக்கு சற்று மேலே KUV 100 காரின் பாட்ஜ் இணைக்கப்பட்டுள்ளது, நீங்கள் எந்த காரில் பயணம் செய்கிறோம் என்று குழப்படையும் போது, இந்த பாட்ஜ் உங்களுக்கு அதை ஞாபகப்படுத்தும். 


mFalcon இஞ்ஜின் வரிசை இந்த புதிய KUV 100 காரில் பொருத்தப்படும் என்று இந்நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது. பெட்ரோல் வகை KUV 100 காரில் பொருத்தப்பட்டுள்ள 1.2 லிட்டர் mFalcon G80 இஞ்ஜின், 81 bhp என்ற அளவில் சக்தியை உற்பத்தி செய்கிறது. அதே நேரத்தில், டீசல் வகையில் பொருத்தப்பட்டுள்ள mFalcon D75 1.2 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ இஞ்ஜின், 77 bhp சக்தியை 3,750 rpm என்ற அளவில் 77 bhp சக்தி மற்றும் 1,750 - 2,250 rpm அளவில் அதிகபட்சமாக 190 Nm டார்க்கை உற்பத்தி செய்கிறது. KUV 100 அறிமுகம் ஆகும் வேளையில், 5 ஸ்பீட் மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டு வரும், ஆனால் விரைவில் இதன் ஆட்டோமேடிக் ஆப்ஷனை, இந்நிறுவனம் அறிமுகப்படுத்தும் என்று தெரிகிறது. 


பழமையான தோற்றத்தில் இல்லாமல், இந்த காரின் அமைப்பு SUV கார்களின் தோற்றத்தின் சாயலில் புதுமையாக இருக்கிறது. மேலும், சற்றே பெரிதாக்கப்பட்ட ரினால்ட் கிவிட் போல, புதிய KUV 100 காரின் தோற்றம் உள்ளது. உண்மையில், இந்த காரின் வெற்றி அல்லது தோல்வியை இந்த அமைப்புதான் நிர்ணயிக்கும், ஏனெனில், இந்த அமைப்பின் காரணமாக நீங்கள் KUV பிரியராக மாறலாம் அல்லது இதன் தோற்றத்தை முற்றிலுமாக வெறுக்கலாம். ஹெட் லாம்ப் க்லஸ்டர்கள் மற்றும் பெரிய பனி விளக்குகள் போன்றவை க்ரோமிய அலங்காரங்களைப் பெற்றுள்ளதால் பளீரென்ற தோற்றத்தில், இந்த காரின் முன்புறத்தை முழுவதுமாக ஆதிக்கம் செலுத்துகின்றன. அகண்ட கம்பீரமான கிரில் மாடல்களையே பார்த்த நமக்கு, இதன் ஒல்லியான மெலிதான கிரில் வித்தியாசமான தோற்றத்தைத் தருகிறது. முன்புற ஆராய்ச்சியை விட்டு விலகி பக்கவாட்டுத் தோற்றத்திற்கு நழுவினால், அங்கே, உயரமான டால்பாய் போல உள்ள KUV 100 காரின் தோற்றத்தில் நளினமாக வளைந்து செல்லும் பாடி லைன் அம்சமாக இருக்கிறது. பின்புற கதவின் கைப்பிடி, செவ்ரோலெட் பீட் காரில் வருவது போல C பில்லரில் பொருத்தப்பட்டிருப்பது, அசத்தலாக இருக்கிறது. ஏகப்பட்ட ஸ்டைலான டிசைன்கள் இடம்பெற்றிருந்தாலும், நீண்ட கண்களை உடைய கயல்விழியாள் என்று சொல்லும் அளவிற்கு இதன் mFalcon பாட்ஜ் பொருத்தப்பட்ட நீளமான ஹெட் லாம்ப் க்லஸ்டர் அமைப்பு, நம்மை உடனடியாகக் கவர்ந்திழுக்கும் அம்சமாகத் திகழ்கிறது. KUV 100 காரின் பின்புறம் தட்டையாக இல்லாமல், கிவிட் மாடலில் உள்ளதைப் போலவே சற்றே சாய்ந்த நிலையில் ஸ்டைலாக உள்ளது. பூட் கதவின் மேல், மஹிந்த்ரா நிறுவனத்தின் சின்னம் மற்றும் இந்த காரின் பெயர் போன்றவை இடம்பெற்றுள்ளன. 
2016 ஜனவரி 15 -ஆம் தேதி இந்த கார் சந்தைக்கு வந்துவிடும். இதன் விலை அனேகமாக ரூ. 4 லட்சங்களில் இருந்து ரூ. 7 லட்சங்கள் வரை இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஸ்விஃப்ட், கிராண்ட் i10, பிகோ மற்றும் போல்ட் போன்ற கார்களுடன் இந்த கார் போட்டியிடும். 

மேலும் வாசிக்க 

வெளியிட்டவர்
was this article helpful ?

0 out of 0 found this helpful

Write your Comment on Mahindra kuv 100 nxt

Read Full News

கார் செய்திகள்

  • டிரெண்டிங்கில் செய்திகள்
  • சமீபத்தில் செய்திகள்

trending ஹேட்ச்பேக் கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
  • பிஒய்டி seagull
    பிஒய்டி seagull
    Rs.10 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • நிசான் லீஃப்
    நிசான் லீஃப்
    Rs.30 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • ரெனால்ட் க்விட் இவி
    ரெனால்ட் க்விட் இவி
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    ஜனவ, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • மாருதி எக்ஸ்எல் 5
    மாருதி எக்ஸ்எல் 5
    Rs.5 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    செப, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
  • எம்ஜி 3
    எம்ஜி 3
    Rs.6 லட்சம்கணக்கிடப்பட்ட விலை
    பிபரவரி, 2025: அறிமுக எதிர்பார்ப்பு
×
We need your சிட்டி to customize your experience