மஹிந்த்ரா KUV 100 காரின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படும்?
மஹிந்திரா கேயூவி 100 என்எக்ஸ்டி க்கு published on dec 29, 2015 05:40 pm by raunak
- 10 பார்வைகள்
- ஒரு கருத்தை எழுதுக
மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனம், இதுவரை இந்தியாவில் நன்கு பரீட்சயம் இல்லாத மைக்ரோ SUV பிரிவில், ஏகபோகமாக கோலோச்ச முழு மூச்சில் தயாராகிக் கொண்டிருக்கிறது. தற்போது, சந்தையில் உள்ள வேறு எந்த காரையும் KUV 100 காருக்கு, நேரடி போட்டியாளராக குறிப்பிட முடியாது. எனினும், இந்த வாகனம் B செக்மண்ட் ஹாட்ச் பேக் பிரிவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃபோர்ட் பிகோ, மாருதி சுசுகி ஸ்விஃப்ட், ஹுண்டாய் கிராண்ட் i10 மற்றும் பல கார்கள் இந்த பிரிவில் அடங்கும். KUV 100 காரின் போட்டியாளர்களைப் பற்றி பேசும் போது, மாருதியின் இக்னிஸ் பற்றி நிச்சயம் குறிப்பிட வேண்டும். அடுத்த பிப்ரவரியில் நடக்கவுள்ள 2016 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில், இக்னிஸ் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். எனவே, KUV 100 காரை அறிமுகப்படுத்தியவுடன், அதனோடு நேருக்கு நேர் மோத தரமான தொழில்நுட்பத்தில் தயாராகும் இக்னிஸ் கார் காத்துக் கொண்டிருக்கும். தற்போதைக்கு, இதன் விலையை ஆராயும் பொருட்டு, KUV 100 காரை B செக்மெண்ட் ஹாட்ச் பேக் பிரிவில் வைத்துக் கொள்வோம்.
2016 ஜனவரி 16 –ஆம் தேதி அன்று, KUV 100 காரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப் போவதாக, மஹிந்த்ரா நிறுவனம் அறிவித்துள்ளது. எனவே, இதற்கான முன்பதிவு ஏற்கனவே ஆரம்பித்து விட்டது. இந்த காரின் விற்பனை, தாறு மாறாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. ஏனெனில், தற்போது பெரும்பாலான இந்தியர்கள், காம்பாக்ட் க்ராஸ் ஓவர் கார்களின் மீது அதீத பற்று கொண்டவர்களாக இருக்கின்றனர். மேலும், இந்த காரில் பாதுகாப்பை மேம்படுத்த ஸ்டாண்டர்ட் ABS அமைப்பு, அனைத்து வேரியண்ட்களிலும் பொருத்தப்பட்டு வருகிறது. இது தவிர, அடிப்படை டிரிம்மில் இருந்து அனைத்து வித வேரியண்ட்டிலும் டூயல் ஃப்ரண்ட் ஏர் பேக்குகள் ஆப்ஷனாலாக தரப்படுகிறது.
மேலும் வாசிக்க
மஹிந்திரா KUV100-யை குறித்து நீங்கள் அறிய வேண்டியவை!
- Renew Mahindra KUV 100 NXT Car Insurance - Save Upto 75%* with Best Insurance Plans - (InsuranceDekho.com)
0 out of 0 found this helpful