மேக்னடி மரேலி, மனேசரில் எஎம்டி தயாரிப்புக்கான பிரத்தியேக தொழிற்சாலையை தொடங்கி உள்ளது.
published on அக்டோபர் 20, 2015 02:17 pm by raunak for மாருதி செலரியோ 2017-2021
- 14 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்பூர் :
பியட் நிறுவனத்தின் பாகங்கள் தயாரிப்பு பிரிவான மேக்னடி மரேலி ரோபோடைஸ்ட் கியர் பாக்ஸ் (AMT) தயாரிப்புக்கென்று ஒரு புதிய தொழிற்சாலையை மனேசர் நகரில் தொடங்கி உள்ளது. இந்த இத்தாலிய உதிரி பாகங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் இந்திய துணை நிறுவனமான மேக்னடி மரேலி பவர்ட்ரைன் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் நிறுவனம் , மேக்னடி மரேலி , மாருதி சுசுகி மற்றும் சுசுகி மோட்டார் கம்பனி ஆகிய நிறுவனங்கள் 2007 ஆம் ஆண்டு முதல் இணைந்து செய்து வரும் கூட்டு முயற்சியாகும்.இந்த புதிய தொழிற்சாலை 7,500 சதுர அடி பரப்பளவில் அலுவலக பகுதி மற்றும் உற்பத்தி பகுதிகளை உள்ளடக்கி மிகவும் விசாலமான தொழிற்கூடமாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலை முழு திறத்துடன் செயல்படத் தொடங்கும் சமயத்தில் இந்த தொழிற்சாலை சற்றேறக்குறைய 115 பேரை பணி அமர்த்தும் என்றும் 280,000 AMT கிட்களை உற்பத்தி செய்யும் என்றும் அறியப்படுகிறது. மொத்தம் இந்த புதிய கூடத்தையும் சேர்த்து 11 தொழிற் கூடங்கள் நாட்டில் இயங்கி வருகின்றன. அவற்றுள் 7 தொழிற்சாலைகள் மற்றும் ஒரு R&D ( ஆராய்ச்சி & மேம்பாடு) மையம் புது டெல்லி பகுதியில் இயங்கி வருகின்றன. அங்கே பவர்ட்ரைன், மின்னணு அமைப்புக்கள், எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம்ஸ் மற்றும் சஸ்பென்ஷன் பிரிவுகளில் தயாரிப்புக்கள் நடைபெறுகின்றன. புனே பகுதியில் மூன்று உற்பதிசாலைகள் மற்றும் ஒரு R&D ( ஆராய்ச்சி & மேம்பாடு) மையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கே லைட்டிங், பவர்ட்ரைன், எக்ஸ்ஹாஸ்ட் சிஸ்டம் மற்றும் ஷாக் அப்ஸார்பர் பிரிவுகளில் உற்பத்தி நடைபெறுகின்றன. இவைகளைத் தவிர சென்னை பகுதியிலும் எக்ஸ்ஹாஸ்ட் பிரிவில் உற்பத்தி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
மாருதி சுசுகி செலிரியோ கார்களில் தான் முதன் முதலில் AMT கியர் அமைப்பு பொருத்தப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. வெகு விரைவில் அது பிரபலமடைந்தது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. விரிவை இந்த AMT தொழில்நுட்பத்தை தனது ஆல்டோ கே 10 வாகனத்திலும் மாருதி அறிமுகப்படுத்தியது. டாடா நிறுவனம் செஸ்ட் டீசல் கார்களிலும் நானோ ஜென்எக்ஸ் கார்களிலுமிந்த AMT வசதியை இணைத்தன. இந்த அனைத்து கார்களும் மேக்னடி மரேலியில் தயாரான AMT கிட்களை பயன்படுத்திக் கொண்ட நிலையில், மஹிந்திரா நிறுவனம் தன்னுடைய TUV300 வாகனத்தில் மஹிந்திரா மற்றும் ரிகார்டோ நிறுவன கூட்டு தயாரிப்பில் உருவான AMT சாதனங்களை பொருத்தி உள்ளன. மேலும், ஹயுண்டாய் நிறுவனம் தனது க்ரேண்ட் i10 கார்களுக்கும் , ரெனால்ட் நிறுவனம் தனது க்விட் கார்களுக்கும் ZF ல் தயாரான AMT அமைப்பை பயன்படுத்தும் என்று ஒரு செய்தி வெளியாகி இருந்த போதும், ரெனால்ட்/ டாசியா கடந்த மாதம் நடந்த ப்ரேன்க்பர்ட் மோட்டார் ஷோவில் தங்களது ஈஸி - ஆர் AMT கியர் அமைப்பை வெளியிட்டுவிட்டது. க்விட் கார்களுடன், அடுத்து வரும் டஸ்டர் கார்களிலும் இந்த ஈஸி - ஆர் AMT அமைப்பே பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.
பரிந்துரைக்கப்பட்டது - மாருதி சுசுகி ஆல்டோ கே 10 AMT - நிபுணர் ஆய்வு
0 out of 0 found this helpful