இந்தியாவில் சோதனை செய்யப்பட்டு வரும் Kia EV9 எலக்ட்ரிக் எஸ்யூவி… இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
கியா EV9 தேர்ந்தெடுக்கப்பட்ட பவர்டிரெய்னைப் பொறுத்து 562 கிமீ வரை கிளைம்டு ரேஞ்சை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கியா EV9 ஆனது கியா EV6 -யில் உள்ள அதே E-GMP தளத்தை அடிப்படையாகக் கொண்டது.
-
ஸ்பை ஷாட்களில், EV9 உலகளாவிய-ஸ்பெக் மாடலின் அதே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
-
சர்வதேச அளவில், கியா EV9 -யை 99.8 kWh பேட்டரி பேக்குடன் வழங்குகிறது.
-
உலகளவில், இது ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் ஆப்ஷன்களில் வருகிறது.
-
இந்தியாவில் இதன் விலை ரூ.80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கியா EV9 ஆட்டோ எக்ஸ்போ 2023 நிகழ்வில் இந்தியாவில் அறிமுகமானது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, EV9 எலக்ட்ரிக் எஸ்யூவியின் உற்பத்தி-ஸ்பெக் பதிப்பை உலகளவில் கியா வெளியிட்டது. இது கியா EV6 -யை போன்றே E-GMP தளத்தை அடிப்படையாகக் கொண்டது. EV9 ஆனது இந்தியாவிற்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது கியா EV9 -யின் சோதனை கார்கள் இந்தியாவில் வெளியிடுவதற்கு முன்னதாக மறைக்கப்படாமல் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
ஸ்பை ஷாட்கள் மூலம் தெரிய வரும் விவரங்கள்?
ஸ்பை ஷாட் கியா EV9 -யின் முன் மற்றும் பின் பக்கங்களை தெளிவாகக் காட்டுகிறது, இது குளோபல்-ஸ்பெக் மாடலை போலவே தோன்றமளிக்கின்றது. முன்பக்கத்தில், இது ஒரு செங்குத்து ஹெட்லைட் அமைப்பைக் கொண்ட டைகர்-நோஸ் கிரில்லை கொண்டுள்ளது, அதனுடன் ஸ்டார்-மேப் எல்-ஷேப்டு DRL கள் உள்ளன, அதே நேரத்தில் முன்பக்க பம்பர் ஒரு ஸ்போர்ட்டி தோற்றத்திற்காக ஏர் சேனல்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. சர்வதேச மாடலில் கிரில்லில் டிஜிட்டல் லைட்டிங் பேட்டர்ன், டைனமிக் வெல்கம் லைட் கொடுக்கப்பட்டுள்ளது.
பக்கவாட்டில், EV9 கார் உலகளாவிய மாடலில் வழங்கப்படும் அலாய் வீல்களுடன் ஒப்பிடும்போது வேறுபட்ட அலாய் வீல்களுடன் காணப்பட்டது. EV9 -ன் பின்புறம் அதன் உலகளாவிய வடிவமைப்பின் அதே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, வெர்டிகல் LED டெயில்லைட்கள் மற்றும் நீட்டிக்கப்பட்ட ரூஃப் ஸ்பாய்லர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. மேலும், பின்புற பம்பரை சில்வர் ஸ்கிட் பிளேட்டுடன் காணலாம்.
மேலும் பார்க்க: இந்தியாவில் டிரேட்மார்க்கிற்காக பதிவு செய்யப்பட்ட Ford Mustang Mach-e Electric எஸ்யூவி… இறுதியாக இந்தியாவில் வெளியாகவுள்ளதா ?
எதிர்பார்க்கப்படும் வசதிகள்
இங்கு படம்பிடிக்கப்பட்டுள்ள EV9 -ன் சோதனைக் கார்கள் உள்ளே நாம் இன்னும் தெரியவில்லை என்றாலும், உட்புறமானது உலகளாவிய மாடலை போலவே இருக்கும். கியா இரண்டு 12.3-இன்ச் ஸ்கிரீன்களுடன் 5.3-இன்ச் க்ளைமேட் கன்ட்ரோல் டிஸ்ப்ளே மற்றும் 708-வாட் 14-ஸ்பீக்கர் மெரிடியன் சவுண்ட் சிஸ்டம் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. EV9 ஆனது வெஹிகிள் டூ வெஹிகிள் (V2L) வசதியை கொண்டிருக்கும், இது காரின் பேட்டரியை பயன்படுத்தி உங்கள் வெளிப்புற சாதனங்களை இயக்கலாம்.
பாதுகாப்புக்காக 9 ஏர்பேக்குகள், 360 டிகிரி கேமரா, ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட் மற்றும் ஃபுல் சூட் மேம்பட்ட டிரைவர் அசிஸ்டெண்ட் சிஸ்டம்ஸ் (ADAS) ஆகியவை இதில் உள்ளன.
எதிர்பார்க்கப்படும் பவர்டிரெய்ன் ரேஞ்ச்
சர்வதேச அளவில், கியா EV9 ஆனது 99.8 kWh பேட்டரி பேக்கை பயன்படுத்துகிறது மற்றும் ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல்-வீல்-டிரைவ் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.
பேட்டரி பேக் |
99.8 kWh |
99.8 kWh |
டிரைவ் டைப் |
ரியர் வீல் டிரைவ் |
ஆல் வீல் டிரைவ் |
பவர் |
203 PS |
383 PS |
டார்க் |
350 என்எம் |
700 என்எம் |
கிளைம்டு (WLTP ரேட்டட்) |
562 கி.மீ |
504 கி.மீ |
ஆக்சலரேஷன் 0-100 kmph |
9.4 வினாடிகள் |
5.3 வினாடிகள் |
டாப் ஸ்பீடு |
மணிக்கு 183 கி.மீ |
மணிக்கு 200 கி.மீ |
கவனிக்கவும்: இந்தியா-ஸ்பெக் மாடலுக்கு பேட்டரி பேக் மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் விவரங்களில் மாற்றம் இருக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் வெளியீடு மற்றும் போட்டியாளர்கள்
கியா நிறுவனம் EV9 எலக்ட்ரிக் எஸ்யூவி -யை 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் அறிமுகப்படுத்தலாம், இது ரூ. 80 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்கும். இந்தியாவில், பிஎம்டபிள்யூ iX மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் EQE SUV போன்ற ஆடம்பர மின்சார எஸ்யூவி -களுக்கு விலை குறைவான மாற்றாக EV9 இருக்கும்.