சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

குளோபல் NCAP சோதனையில் மீண்டும் 3 நட்சத்திரங்களை பெற்றது Kia Carens

published on ஏப்ரல் 23, 2024 08:06 pm by ansh for க்யா கேர்ஸ்

இந்த மதிப்பெண் கேரன்ஸ் MPV -யின் பழைய பதிப்பை போலவே பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 0-நட்சத்திர மதிப்பெண்ணைப் பெற்றுள்ளது.

குளோபல் NCAP (புதிய கார் மதிப்பீட்டுத் திட்டம்) -ல் கியா கேரன்ஸ் மீண்டும் கிராஷ் டெஸ்ட் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனையில் 3-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றது. உண்மையில் இது 2022 -ல் அதன் முதல் GNCAP மதிப்பெண்ணிலிருந்து இரண்டு முறை கிராஷ் டெஸ்ட்டுக்கு உட்படுத்தப்பட்டது. MPV -யின் இரண்டு வெவ்வேறு வேரியன்ட்கள் சோதிக்கப்பட்டன, ஒன்று 2023 டிசம்பரில் தயாரிக்கப்பட்டது, இது 3-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றது. மற்றொன்று 2023 மே மாதம் தயாரிக்கப்பட்டது. இது GNCAP -லிருந்து 1 நட்சத்திரத்தை மட்டுமே பெற்றது. இரண்டு கிராஷ் டெஸ்ட்களின் விரிவான விவரங்கள் இங்கே.

பெரியவர்களுக்கான பாதுகாப்பு

முன்பக்க தாக்கம் (64 கிமீ/மணி)

பாதுகாப்பு

தாக்க புள்ளிகள்

கியா கேரன்ஸ் - மே 2023

கியா கேரன்ஸ் - டிசம்பர் 2023

டிரைவர் தலை

நல்லது

நல்லது

முன்பக்க பயணிகள் தலை

நல்லது

நல்லது

டிரைவர் கழுத்து

மோசமானது

பலவீனமானது

முன்பக்க பயணிகள் கழுத்து

நல்லது

நல்லது

டிரைவர் மார்பு

விளிம்புநிலை

போதுமானது

முன் பயணிகள் மார்பு

நல்லது

நல்லது

டிரைவர் முழங்கால்

விளிம்பு நிலை

விளிம்பு நிலை

முன்பக்க பயணிகள் முழங்கால்

விளிம்பு நிலை

விளிம்பு நிலை

டிரைவர் டிபியாஸ்

போதுமானது

போதுமான (இடது) நல்லது (வலது)

முன்பக்க பயணிகள் டிபியாஸ்

போதுமானது (இடது) நல்லது (வலது)

நல்லது

பாடிஷெல் இன்டெகிரேஷன்

நிலையற்றது

நிலையற்றது

ஒரு எளிய காரணத்தால் டிசம்பர் 2023 கேரன்ஸ் கிராஷ் டெஸ்டில் சிறந்த செயல்திறனை பெற்றது. மே 2023 கேரன்ஸின் சீட்பெல்ட் கட்டுப்பாடுகள் ஓட்டுநரையும் பயணிகளையும் இடத்தில் வைத்திருக்க போதுமானதாக இல்லை, இதன் விளைவாக முன்பக்க விபத்தில் கடுமையான காயம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தது.

மேலும் படிக்க: 2025 ஆண்டில் Kia Carens EV இந்தியாவிற்கு வரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

இந்தக் காரணத்தால் 2023 மே மாதம் உருவாக்கப்பட்ட கேரன்ஸ் ஆனது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் (AOP) 34 -க்கு 0 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் விளைவாக 0-நட்சத்திர AOP பாதுகாப்பு மதிப்பீடு கிடைத்தது. இந்தச் சிக்கல் 2023 டிசம்பரில் தயாரிக்கப்பட்ட கேரன்ஸில் சரி செய்யப்பட்டது. மேலும் அதனால் 34 -க்கு 22.07 மதிப்பெண்களைப் பெற்றது இதன் விளைவாக 3-நட்சத்திர AOP பாதுகாப்பு மதிப்பீடு கிடைத்தது.

பக்கவாட்டு தாக்கம் (50 கிமீ மணி)

பாதுகாப்பு

தாக்க புள்ளிகள்

கியா கேரன்ஸ் - மே 2023

கியா கேரன்ஸ் - டிசம்பர் 2023

டிரைவர் ஹெட்

நல்லது

நல்லது

டிரைவர் மார்பு

நல்லது

நல்லது

டிரைவர் வயிறு

நல்லது

நல்லது

டிரைவர் இடுப்பு

நல்லது

நல்லது

பக்க தாக்க சோதனைகளில், கேரன்ஸின் மே 2023 மற்றும் டிசம்பர் 2023 ஆகிய இரண்டு வேரியன்ட்களும் ஒட்டுமொத்தமாக நல்ல பாதுகாப்பைப் பெற்றன.

சைடு போல் இம்பாக்ட்

கேரன்ஸின் இரண்டு வேரியன்ட்களிலும் சைடு போல் இம்பாக்ட் சோதனை நடத்தப்படவில்லை.

குழந்தைகளுக்கான பாதுகாப்பு

அளவீடுகள்

மே 2023 கியா கேரன்ஸ்

டிசம்பர் 2023 கியா கேரன்ஸ்

டைனமிக் ஸ்கோர்

23.92/24 புள்ளிகள்

24/24 புள்ளிகள்

CRS இன்ஸ்டாலேஷன் மதிப்பெண்

12/12 புள்ளிகள்

12/12 புள்ளிகள்

வாகன மதிப்பீட்டு மதிப்பெண்

5/13 புள்ளிகள்

5/13 புள்ளிகள்

மொத்தம்

40.92/49 புள்ளிகள்

41/49 புள்ளிகள்

முன்பக்க தாக்கம்

18 மாத குழந்தை டம்மி விஷயத்தில் குழந்தை இருக்கை பின்புறமாக பொருத்தப்பட்டிருந்தது மேலும் தலைக்கு முழு பாதுகாப்பை வழங்க முடிந்தது. இந்த சோதனையில் கேரன்ஸ் 8-க்கு 8 புள்ளிகளைப் பெற்றார். 3 வயது குழந்தை டம்மிக்கு, குழந்தை இருக்கை பின்புறமாக பொருத்தப்பட்டு கிட்டத்தட்ட முழு பாதுகாப்பையும் வழங்கியது. இங்கே, கேரன்ஸ் 8-க்கு 7.92 புள்ளிகளைப் பெற்றது.

மேலும் படிக்க: EV பேட்டரிக்கான உற்பத்தியை உள்ளூர்மயமாக்கும் ஹூண்டாய்-கியா, எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது

இதற்கிடையில் டிசம்பர் 2023 கேரன்ஸ் ஆனது குழந்தைகள் டம்மிகள் இருவருக்கும் முழுப் பாதுகாப்பிற்காக முழு 8 புள்ளிகளுக்கு மேம்படுத்தப்பட்டது. மேலும் குழந்தைகளுக்கான பாதுகாப்பு மதிப்பெண்ணை 4 முதல் 5 நட்சத்திரங்கள் வரை உயர்த்த இந்த மாற்றம் முக்கியமானது.

பக்கவாட்டு தாக்கம்

கியா கேரன்ஸ் எம்பிவியின் இரண்டு பதிப்புகளுக்கும் சைல்டு ரீஸ்ட்ரெயின் அமைப்பு இரண்டு நிலைகளிலும் முழுமையான பக்கவாட்டு தாக்க பாதுகாப்பை வழங்கியது.

மொத்த மதிப்பெண்கள்

மே 2023 கேரன்ஸ் ஆனது குழந்தைகளின் பாதுகாப்பில் 4 நட்சத்திரங்களைப் பெற்றிருந்தாலும், 0-நட்சத்திர பெரியவர்களுக்கான பாதுகாப்பு மதிப்பீட்டின் காரணமாக, அதன் ஒட்டுமொத்த பாதுகாப்பு மதிப்பீடு வெறும் 1 நட்சத்திரமாகக் குறைந்துள்ளது. மறுபுறம் டிசம்பர் 2023 கேரன்ஸ் குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 5 நட்சத்திரங்களையும் வயது வந்தோர் பாதுகாப்பில் 3 நட்சத்திரங்களையும் பெற்றுள்ளது. இதன் விளைவாக ஒட்டுமொத்தமாக 3-ஸ்டார் கிராஷ் டெஸ்ட் பாதுகாப்பு மதிப்பீடு கிடைத்தது. இருப்பினும், இந்த இரண்டு வேரியன்ட்களிலும் பாடிஷெல் இன்டெகிரேஷன் நிலையற்றதாக இருந்தது. அதாவது அவற்றால் கூடுதல் தாக்கங்களைத் தாங்க முடியாது.

மேலும் படிக்க: இந்த 7 படங்களில் Kia Sonet HTE (O) வேரியன்ட்டை பாருங்கள்

இந்த மதிப்பெண் மீண்டும் ஒரு உண்மையை எடுத்துக்காட்டுகிறது: பாதுகாப்பான காருக்கு ஏர்பேக்குகளி எண்ணிக்கை என்பது மட்டுமே அதை தீர்மானிக்கும் காரணி அல்ல.

கியா கேரன்ஸின் பாதுகாப்பு வசதிகள்

கியா கேரன்ஸ் ஸ்டாண்டர்டாக 6 ஏர்பேக்குகளுடன் வருகிறது. மேலும் ABS உடன் EBD, எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), வெஹிகிள் ஸ்டெபிலிட்டி மேனேஜ்மென்ட் (VSM), பிரேக் அசிஸ்ட், ஹில் ஹோல்ட் அசிஸ்ட், ஆல்-வீல் டிஸ்க் பிரேக்குகள், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் (TPMS), மற்றும் பின்புற பார்க்கிங் சென்சார்கள் போன்ற பல ஸ்டாண்டர்டான பாதுகாப்பு வசதிகளை கொண்டுள்ளது.

வேரியன்ட்கள் விலை

கியா கேரன்ஸ் 10 வேரியன்ட்களில் விற்பனை செய்யப்படுகின்றது: பிரீமியம், பிரீமியம் (ஓ), ப்ரெஸ்டீஜ், பிரெஸ்டீஜ் (ஓ), ப்ரெஸ்டீஜ் பிளஸ், ப்ரெஸ்டீஜ் பிளஸ் (ஓ), லக்ஸரி, லக்ஸரி (ஓ), லக்ஸரி பிளஸ் மற்றும் எக்ஸ்-லைன். இதன் விலை ரூ.10.52 லட்சத்தில் இருந்து ரூ.19.67 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை உள்ளது. மாருதி எர்டிகா, டொயோட்டா ரூமியான், மற்றும் மாருதி XL6 ஆகிய கார்களுக்கு போட்டியாக உள்ளது.

மேலும் படிக்க: கியா கேரன்ஸ் ஆன் ரோடு விலை

a
வெளியிட்டவர்

ansh

  • 51 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது க்யா கேர்ஸ்

Read Full News

trendingஎம்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
பேஸ்லிப்ட்
Rs.10.44 - 13.73 லட்சம்*
Rs.19.77 - 30.98 லட்சம்*
Rs.10.52 - 19.67 லட்சம்*
Rs.2 - 2.50 சிஆர்*
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை