EV பேட்டரிக்கான உற்பத்தியை உள்ளூர்மயமாக்கும் ஹூண்டாய்-கியா, எக்ஸைட் எனர்ஜி நிறுவனத்துடன் இணைந்துள்ளது
published on ஏப்ரல் 08, 2024 08:12 pm by ansh
- 40 Views
- ஒரு கருத்தை எழுதுக
EV பேட்டரிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வது அவற்றின் தயாரிப்பு செலவுகள் குறையும். இது எலக்ட்ரிக் வாகனங்களை மிகவும் குறைவான விலையில் கிடைக்க உதவி செய்யும்.
-
EV பேட்டரிகளின் உள்ளூர் உற்பத்தி லித்தியம்-அயர்ன்-பாஸ்பேட் (LFP) பேட்டரிகளில் கவனம் செலுத்தும்.
-
இந்த கூட்டமைப்பு ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய இரண்டுக்கும் எதிர்காலத்தில் வரவிருக்கும் EV -களின் விலையை குறைக்க உதவும்.
-
இரண்டு கார் தயாரிப்பாளர்களும் ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் கியா EV9 போன்ற பல EV -களை கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
ஹூண்டாய் மற்றும் கியா 20 லட்சத்திற்கும் குறைவான விலை (எக்ஸ்-ஷோரூம்) மாடல்களுடன் இந்தியாவில் விலை குறைவான வெகுஜன சந்தை EV பிரிவில் நுழைய தயாராகி வருகின்றன. ஆகவே கொரிய கார் தயாரிப்பாளர்கள் இருவரும் EV பேட்டரி பேக்குகளின் உற்பத்தியை இந்தியாவில் உள்ளூர்மயமாக்க பேட்டரி உற்பத்தியாளரான எக்ஸைடு எனர்ஜி சொல்யூஷன்ஸ் (Exide Energy Solutions) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MoU) கையெழுத்திட்டுள்ளனர்.
இந்தியாவை மையமாகக் கொண்டாலும் இது உலகளாவிய கூட்டாண்மையாக இருக்கும். தென் கொரியாவில் ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியாவின் R&D பிரிவின் தலைவரும் தலைவருமான ஹூ வான் யங் (Heui Won Yang), எலக்ட்ரிஃபிகேஷன் எனர்ஜி சொல்யூஷன் பிரிவின் தலைவர் சாங் வான் கிம் (Chang Hwan Kim), டுக் யோ யாங் (Duk Gyo Jeong) தலைவர், எலக்ட்ரிக் வெஹிகிள் பார்ட்ஸ் பர்ச்சேஸிங் சப்-டிவிஷன் பிரிவு மற்றும் மந்தர் வி (Mandar V) ஆகியோர் தென் கொரியாவில் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். எக்ஸைட் எனர்ஜியின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி டியோ கலந்து கொண்டார்.
மேலும் படிக்க: பாருங்கள்: கியா EV9 எலக்ட்ரிக் எஸ்யூவியின் விலை கிட்டத்தட்ட ரூ. 1 கோடியாக இருப்பதற்கான 5 காரணங்கள்
இந்த கூட்டமைப்பு மூலமாக ஹூண்டாய் மற்றும் கியா ஆகியவை தங்கள் எதிர்கால மின்சார வாகனங்களுக்காக லித்தியம்-அயர்ன்-பாஸ்பேட் (LFP) பேட்டரிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும். தற்போதைய நிலவரப்படி இந்த இரண்டு பிராண்டுகளும் இந்தியாவில் ஹூண்டாய் கோனா, ஹூண்டாய் IONIQ 5, மற்றும் கியா EV6 என மொத்தம் 3 EV -களை விற்பனை செய்கின்றன.
தற்போதைக்கு இரண்டு நிறுவனங்களும் கியா EV9 முழு அளவிலான எலக்ட்ரிக் எஸ்யூவி உள்பட பல சர்வதேச EV -களை இந்தியாவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.
EV பேட்டரிகளின் உள்ளூர்மயமாக்கலுடன் ஹூண்டாய் மற்றும் கியா இரண்டும் தங்கள் வரவிருக்கும் தயாரிப்புகளுக்கான பேட்டரி பேக்குகளை மிகவும் குறைவான விலையில் தயாரிக்க முடியும். இதனால் இரண்டு நிறுவனங்களும் எதிர்கால தயாரிப்புகளின் விலையை குறைக்க உதவும். 2026க்குள் உள்ளூர்மயமாக்கப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா EV மற்றும் ஒரு ஆல் எலக்ட்ரிக் கியா கேரன்ஸ் MPV ஆகியவை அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கிறோம். எந்த ஹூண்டாய்-கியா இவி -யை நீங்கள் பார்க்க உற்சாகமாக இருக்கிறீர்கள்? கமெண்டில் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.