• English
    • Login / Register

    Kia Carens MY2024 அப்டேட்: விலை உயர்த்தப்பட்டுள்ளது, டீசல் MT புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது, மேலும் பல

    க்யா கேர்ஸ் க்காக ஏப்ரல் 03, 2024 05:58 pm அன்று sonny ஆல் திருத்தம் செய்யப்பட்டது

    • 124 Views
    • ஒரு கருத்தை எழுதுக

    கேரன்ஸ் MPVயின் வேரியன்ட் வாரியாக வசதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இப்போது ரூ.12 லட்சத்துக்கு சற்று கூடுதலான விலையில் 6 இருக்கைகள் கொண்ட புதிய வேரியன்ட் சேர்க்கப்பட்டுள்ளது.

    Kia Carens MY2024 updates and price hike

    • கேரன்ஸின் வேரியன்ட் பட்டியல் இப்போது மூன்று புதிய வேரியன்ட்களுடன் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது பிரீமியம் வசதிகளை மிகவும் குறைவான விலையில் வழங்குகிறது.

    • MPV இப்போது டீசல் இன்ஜினுடன் சரியான 3-பெடல் மேனுவல் ஆப்ஷனை பெறுகிறது. iMT இன்னும் மிட்-ஸ்பெக் வேரியன்ட்டிலிருந்து விற்பனையில் உள்ளது.

    • கேரன்ஸ் 6-சீட்டர் லேஅவுட் இப்போது லோவர் வேரியன்ட்டில் வழங்கப்படுகிறது. மேலும் இது விலை ரூ. 5 லட்சத்திற்கும் மேல் குறைவாக கிடைக்கிறது.

    • தற்போதுள்ள வேரியன்ட்களும் ஹையர் வேரியன்ட்களில் இருந்து கூடுதல் வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்டுள்ளன..

    • கேரன்ஸின் புதிய விலை ரூ.10.52 லட்சம் முதல் ரூ.19.67 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை இருக்கும்.

    இந்தியாவில் கியா அதன் தற்போதைய வரிசைக்கான MY2024 அப்டேட் விவரங்களை வெளியிட்டுள்ளது. கியா கேரன்ஸ் எம்பிவி இது இப்போது டீசல் இன்ஜினுக்கான சரியான த்ரீ-பெடல் மேனுவல் டிரான்ஸ்மிஷனின் ஆப்ஷனை பெறுகிறது. 6 இருக்கைகள் கொண்ட செட்டப் இப்போது விலை குறைவாக கிடைக்கும். புதிய வேரியன்ட்கள் மற்றும் லோவர் வேரியன்ட்களில் சில வசதிகளும் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றின் முழு விவரம் இதோ:

    2024 -க்கான புதிய கியா கேரன்ஸ் வேரியன்ட்கள்

    Kia Carens Premium Vs Renault Triber RXZ: Comparison Review

    கேரன்ஸ் MPV வரிசையில் (O) வேரியன்ட்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன: பிரீமியம் (O) பிரெஸ்டீஜ் (O) பிரெஸ்டீஜ் பிளஸ் (O). இவை அடிப்படையாக இருக்கும் அதே பெட்ரோல் டர்போ-பெட்ரோல் மற்றும் டீசல் பவர்டிரெய்ன் ஆப்ஷன்களுடன் வழங்கப்படுகின்றன. தற்போதைய வேரியன்ட்களுடன் ஒப்பிடும் போது இந்த புதிய வேரியன்ட்களில் கிடைக்கும் வசதிகள் இங்கே.

    பிரீமியம் உடன் ஒப்பிடும் போது பிரீமியம் (O) -வில் உள்ளவை

    பிரெஸ்டீஜ் உடன் ஒப்பிடும் போது பிரெஸ்டீஸ் (O) -வில் உள்ளவை

    பிரெஸ்டீஜ்+ உடன் ஒப்பிடும் போது பிரெஸ்டீஸ்+ (O) -வில் உள்ளவை

    • கீலெஸ் என்ட்ரி

    • 8 இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம்

    • ஸ்டீயரிங் பொருத்தப்பட்ட கன்ட்ரோல்கள்

    • ஷார்க்-ஃபின் ஆண்டெனா

    • 6 இருக்கைகள் கொண்ட அமைப்பு

    • ஸ்டார்ட் கீ வித் புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப்

    • LED DRLகள் மற்றும் LED டெயில்லேம்ப்கள்

    • லெதரால் மூடப்பட்ட கியர் செலக்டர்

    • சன்ரூஃப் (முன்பு டாப்-ஸ்பெக் லக்ஸரி (O) வேரியன்ட்டிற்கு மட்டுமேயானது)

    • LED கேபின் விளக்குகள்

    Kia Carens Premium Vs Renault Triber RXZ: Comparison Review

    இந்த அப்டேட் மூலம் கேரன்ஸின் கீழ் மற்றும் மிடில் வேரியன்ட்களில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு 6 இருக்கைகள் கொண்ட வேரியன்ட் விலை இப்போது ரூ. 5 லட்சத்திற்கு மேல் குறைந்துள்ளது.

    கியா கேரன்ஸில் சேர்க்கப்பட்டுள்ள வசதிகள்

    புதிய வேரியன்ட்களை தவிர கியா கேரன்ஸில் தற்போதைய வேரியன்ட்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. லோவர் வேரியன்ட்கள் இப்போது ஹையர் வேரியன்ட்களிலிருந்து அதிக வசதிகளைப் பெறுகின்றன. வேரியன்ட் வாரியான புதிய வசதிகளின் விவரம் கீழே உள்ளது:

    வேரியன்ட்

    சேர்க்கப்பட்டுள்ள புதிய வசதிகள்

    பிரீமியம்

    • கீலெஸ் என்ட்ரி + பர்க்லர் அலாரம்

    பிரெஸ்டீஜ்

    • LED DRLகள்

    • ஆட்டோ ஏசி

    லக்ஸரி

    • சன்ரூஃப்

    • LED கேபின் விளக்குகள்

    X-லைன்

    • 7 இருக்கைகள் கொண்ட அமைப்பு

    • டாஷ்கேம்

    • சிங்கிள் டச் ஆட்டோ அப்-டவுன் ஃபார் ஆல் விண்டோஸ்

    iMT (கிளட்ச் பெடல் இல்லாத மேனுவல்) டிரான்ஸ்மிஷனுடன் கூடுதலாக டீசல் இன்ஜினுக்கான சரியான 6-ஸ்பீடு மேனுவல் ஆப்ஷனை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம் MPV ஆனது செல்டோஸ் சோனெட் -டை பின்பற்றியுள்ளது. கேரன்ஸ் லக்ஸரி வேரியன்ட்டில் சன்ரூஃப் கிடைப்பதால் லக்ஸரி (O) டிரிம் நிறுத்தப்பட்டுள்ளது.

    Kia Carens Cabin

    MY2024 கியா செல்டோஸ் போன்றே MY2024 கேரன்ஸில் ஃபாஸ்ட் சார்ஜ் செய்யும் USB போர்ட்களுக்கான சார்ஜ் திறனை கியா 120W இலிருந்து 180W ஆக உயர்த்தியுள்ளது. MY2024 கேரன்ஸ் -க்காக செல்டோஸ் எஸ்யூவி -யிலிருந்து கடன் வாங்கிய மற்றொரு விவரம் Pewter Olive எக்ஸ்ட்டீரியர் ஷேடு ஆகும். இது X-லைன் தவிர அனைத்து வேரியன்ட்களிலும் கிடைக்கும்.

    மேலும் படிக்க:

    MY2024 கியா கேரன்ஸ் விலை

    கியா கேரன்ஸ் மற்றும் அதன் புதிய வேரியன்ட்களுக்கான பவர்டிரெய்ன் வாரியான புதுப்பிக்கப்பட்ட விலை பின்வருமாறு:

    • 1.5-லிட்டர் நேச்சுரல் அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின்

    வேரியன்ட்

    பழைய விலை

    புதிய விலை

    வித்தியாசம்

    பிரீமியம்

    ரூ.10.45 லட்சம்

    ரூ.10.52 லட்சம்

    ரூ.7000

    பிரீமியம் (O)

    விவரம் இல்லை

    ரூ.10.92 லட்சம்

    புதிய வேரியன்ட்

    பிரெஸ்டீஜ்

    ரூ.11.75 லட்சம்

    ரூ.11.97 லட்சம்

    ரூ.22000

    பிரஸ்டீஜ் (O)

    விவரம் இல்லை

    ரூ.12.12 லட்சம்

    புதிய வேரியன்ட்

    பிரெஸ்டீஜ் (O) 6-சீட்டர்

    விவரம் இல்லை

    ரூ.12.12 லட்சம்

    புதிய வேரியன்ட்

    புதிய வேரியன்ட்களில் பெரும்பாலானவை கேரன்ஸின் 115 PS பெட்ரோல் இன்ஜினுடன் அதன் கவர்ச்சியை விரிவுபடுத்துவதற்கும் அதனுடன் கூடுதல் வசதிகளையும் வழங்குகின்றன.

    • 1.5 லிட்டர் டர்போ-பெட்ரோல் இன்ஜின்

    வேரியன்ட்

    பழைய விலை

    புதிய விலை

    வித்தியாசம்

    பெட்ரோல் iMT

    பிரீமியம்

    ரூ.12 லட்சம்

    விவரம் இல்லை

    நிறுத்தப்பட்டது

    பிரீமியம் (O)

    விவரம் இல்லை

    ரூ.12.42 லட்சம்

    புதிய வேரியன்ட்

    பிரெஸ்டீஜ்

    ரூ.13.35 லட்சம்

    ரூ.13.62 லட்சம்

    ரூ.27000

    பிரஸ்டீஜ் +

    ரூ.14.85 லட்சம்

    ரூ.14.92 லட்சம்

    ரூ.7000

    லக்ஸரி

    ரூ.16.35 லட்சம்

    ரூ.16.72 லட்சம்

    ரூ.27000

    லக்ஸரி +

    ரூ.17.70 லட்சம்

    ரூ.17.82 லட்சம்

    ரூ.12000

    லக்ஸரி + 6 இருக்கைகள்

    ரூ.17.65 லட்சம்

    ரூ.17.77 லட்சம்

    ரூ.12000

    பெட்ரோல்  DCT ஆட்டோமெட்டிக்

    பிரஸ்டீஜ் +

    ரூ.15.85 லட்சம்

    விவரம் இல்லை

    நிறுத்தப்பட்டது

    பிரெஸ்டீஜ் + (ஓ)

    விவரம் இல்லை

    ரூ.16.12 லட்சம்

    புதிய வேரியன்ட்

    லக்ஸரி +

    ரூ.18.60 லட்சம்

    ரூ.18.72 லட்சம்

    ரூ.12000

    லக்ஸரி + 6 இருக்கைகள்

    ரூ.18.55 லட்சம்

    ரூ.18.67 லட்சம்

    ரூ.12000

    எக்ஸ்-லைன்

    விவரம் இல்லை

    ரூ.19.22 லட்சம்

    புதிய வேரியன்ட்

    எக்ஸ்-லைன் 6-சீட்டர்

    ரூ.18.95 லட்சம்

    ரூ.19.22 லட்சம்

    ரூ.27000

    புதுப்பிக்கப்பட்ட வேரியன்ட் பட்டியலில் 160 PS டர்போ-பெட்ரோலின் விலை சற்று அதிகமாக இருக்கும் அதே வேளையில் இந்த பவர்டிரெயினின் நுழைவு நிலை வேரியன்ட்டின் மூலம் அதிக வசதிகளையும் பெறுவீர்கள். இங்கு காணப்பட்ட மிகப்பெரிய விலை உயர்வு ரூ.27000 ஆகும்.

    Kia Carens Engine

    • 1.5 லிட்டர் டீசல் இன்ஜின்

    வேரியன்ட்

    பழைய விலை

    புதிய விலை

    வித்தியாசம்

    டீசல் MT

    பிரீமியம்

    விவரம் இல்லை

    ரூ.12.67 லட்சம்

    புதிய வேரியன்ட்

    பிரீமியம் (O)

    விவரம் இல்லை

    ரூ.12.92 லட்சம்

    புதிய வேரியன்ட்

    பிரெஸ்டீஜ்

    விவரம் இல்லை

    ரூ.14.02 லட்சம்

    புதிய வேரியன்ட்

    பிரஸ்டீஜ் +

    விவரம் இல்லை

    ரூ.15.47 லட்சம்

    புதிய வேரியன்ட்

    லக்ஸரி

    விவரம் இல்லை

    ரூ.17.17 லட்சம்

    புதிய வேரியன்ட்

    லக்ஸரி +

    விவரம் இல்லை

    ரூ.18.17 லட்சம்

    புதிய வேரியன்ட்

    லக்ஸரி + 6 இருக்கைகள்

    விவரம் இல்லை

    ரூ.18.17 லட்சம்

    புதிய வேரியன்ட்

    டீசல் iMT

    பிரீமியம்

    ரூ.12.65 லட்சம்

    விவரம் இல்லை

    நிறுத்தப்பட்டது

    பிரெஸ்டீஜ்

    ரூ.13.95 லட்சம்

    விவரம் இல்லை

    நிறுத்தப்பட்டது

    பிரஸ்டீஜ் +

    ரூ.15.45 லட்சம்

    விவரம் இல்லை

    நிறுத்தப்பட்டது

    லக்ஸரி

    ரூ.16.95 லட்சம்

    ரூ.17.27 லட்சம்

    ரூ.32000

    லக்ஸரி +

    ரூ.18.15 லட்சம்

    ரூ.18.37 லட்சம்

    ரூ.22000

    லக்ஸரி + 6 இருக்கைகள்

    ரூ.18.15 லட்சம்

    ரூ.18.37 லட்சம்

    ரூ.22000

    டீசல் ஆட்டோமெட்டிக்

    பிரெஸ்டீஜ் + (ஓ)

    விவரம் இல்லை

    ரூ.16.57 லட்சம்

    புதிய வேரியன்ட்

    லக்ஸரி (O)

    ரூ.17.85 லட்சம்

    விவரம் இல்லை

    நிறுத்தப்பட்டது

    லக்ஸரி +

    ரூ 18.95 லட்சம் (w/o சன்ரூஃப்)

    ரூ.19.12 லட்சம்

    ரூ.17000

    லக்ஸரி + 6 இருக்கைகள்

    ரூ.19.05 லட்சம்

    ரூ.19.22 லட்சம்

    ரூ.17000

    எக்ஸ்-லைன் 6-சீட்டர்

    ரூ.19.45 லட்சம்

    ரூ.19.67 லட்சம்

    ரூ.22000

    Kia Carens First Drive Review

    116 PS திறன் கொண்ட டீசல் இன்ஜின் இப்போது சரியான மேனுவல் கியர்பாக்ஸின் தேர்வைப் பெறுகிறது எனவே இது கேரன்ஸ் லக்ஸரி வேரியன்ட்டிலிருந்து மட்டுமே கிடைக்கும் என்பதால் iMT ஆப்ஷன் மிகவும் விலை உயர்ந்தது. 3-பெடல் மேனுவல் (MT) 2-பெடல் மேனுவல் (iMT) செட்டப்பை விட குறைவான தொழில்நுட்பத்தைக் கொண்டிருந்தாலும் அந்த கேரன்ஸ் டீசல் வேரியன்ட்களுக்கான விலை உயர்வு அந்த லோவர் வேரியன்ட்களுக்கு ரூ.7000 வரை விலை உயர்ந்துள்ளது. MY2024 கேரன்ஸின் மிகப்பெரிய விலை ஏற்றம் டீசல்-iMT லக்ஸரி வேரியன்ட் ரூ.32000 ஆகும்.

    போட்டியாளர்கள்

    மாருதி எர்டிகா மற்றும் XL6 கியா கேரன்ஸ் போன்றவற்றுக்கு பிரீமியம் மாற்றாக இருக்கின்றது. டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மற்றும் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் ஆகியவற்றுக்கு விலை குறைவான மாற்றாகவும் இருக்கின்றது.

    Kia Carens Vs Hyundai Alcazar

    அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் -க்கான விலை ஆகும்

    மேலும் படிக்க: டீசல் டீசல்

    was this article helpful ?

    Write your Comment on Kia கேர்ஸ்

    ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

    புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை

    கார் செய்திகள்

    • டிரெண்டிங்கில் செய்திகள்
    • சமீபத்தில் செய்திகள்

    டிரெண்டிங் எம்யூவி கார்கள்

    • லேட்டஸ்ட்
    • உபகமிங்
    • பிரபலமானவை
    ×
    We need your சிட்டி to customize your experience