இந்தியாவில் ஜாகுவார் XE உளவுப்படத்தில் சிக்கியது
ஜாகுவார் எக்ஸ்இ 2015-2019 க்காக நவ 05, 2015 07:52 pm அன்று raunak ஆல் பப்ளிஷ் செய்யப்பட்டது
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
ஆடி A4, BMW 3-சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ்-பென்ஸ் C-கிளாஸ் ஆகிய கார்களுக்கு எதிரான ஜாகுவாரின் மறுமொழியான XE, புனேயில் உள்ள ARAI-யில் உளவுப் படத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இந்த வாகனத்தை, வரும் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள 2016 இந்தியன் ஆட்டோ எக்ஸ்போவில், வாகன தயாரிப்பாளரின் மூலம் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2014 ஆம் ஆண்டு இந்த சேடன் வெளியிடப்பட்டு, இங்கிலாந்தில் உள்ள லேண்ட் ரோவரின் நீட்டிக்கப்பட்ட சாலிஹூல் உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்த வரை, விலை நிர்ணயம் மூலம் போட்டியை ஏற்படுத்தும் வகையில், நம் நாட்டில் XE-யை உள்ளூரிலேயே கூட்டிணைக்கலாம் என்று ஜாகுவார் நிறுவனம் யோசித்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இதன் மூன்று முக்கிய போட்டியாளர்களான A4, C-கிளாஸ் மற்றும் 3-சீரிஸ் ஆகியவை, உள்ளூரில் அமைந்த அவற்றின் உற்பத்தி தொழிற்சாலைகளிலேயே கூட்டிணைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இயந்திரவியலில், ஜாகுவார் XE மூலம் இந்த வாகன தயாரிப்பாளரின் இன்ஜினியம் வகையை சேர்ந்த என்ஜின்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சேடனில் 2.0-லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜினியம் ஆகிய இரு வேறுபட்ட என்ஜின்களுடன், ஒரு நுட்டி 3.0-லிட்டர் V6 பெட்ரோல் என்ஜினையும் கொண்டுள்ளது. 2.0-லிட்டர் இன்ஜினியம் டீசல் மூலம் 163 PS/ 380 Nm-மும், டியூன் செய்தால் 180 PS/ 430 Nm-மும் கிடைக்கிறது. 2.0-லிட்டர் இன்ஜினியம் டர்போ பெட்ரோல் மூலம் 200 PS/ 280 Nm-மும் அதனுடன் 240 PS/ 340 Nm-மும் அளிக்கிறது. சூப்பர் சார்ஜ்டு 3.0-லிட்டர் V6 மூலம் 340 PS மற்றும் 450 Nm முடுக்குவிசை அளிக்கிறது.
இந்நிறுவனம், தனது முதல் SUV-யான F-பேஸை (இதுவும் இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படுகிறது), சமீபத்தில் நடந்த 2015 பிராங்பேர்ட் மோட்டார் ஷோவில் வெளியிட்டது. இந்நிறுவனத்தின் புதிய எடைக்குறைந்த அலுமினியம் கட்டமைப்பை (லைட்வெயிட் அலுமினியம் ஆர்ச்சிடெக்சர்) அடிப்படையாக கொண்ட இந்த வாகனம், XE உடன் அறிமுகமாகி, இதிலிருந்து புதிய XE பகிர்ந்தும் உள்ளது.
இதையும் படியுங்கள் :