• login / register

ஜாகுவார் இந்தியா தனது  சிறப்பு வெளியீடாக XF ஏரோ ஸ்போர்ட் கார்களை  ரூ.52 லட்சத்திற்கு அறிமுகப்படுத்தியது.

ஜாகுவார் எக்ஸ்எப் க்கு modified on jul 18, 2015 05:00 pm by saad

  • 5 பார்வைகள்
  • ஒரு கருத்தை எழுதுக

டாடாவின்  ஜாகுவார் லாண்ட் ரோவர் முதல் முறையாக XF ஏரோ ஸ்போர்ட் கார்களை இன்று அறிமுகப்படுத்தியது. இதன் மும்பையின் பழைய ஷோரூம் விலை இந்திய ரூபாய் 52 லட்சம் ஆகும் (வரி விதிப்புக்கு முன்). இம்மாததில்,ஜாகுவார் நிறுவனத்தின் சிறப்பு வெளியீடான இந்த  சேடன், சிறப்பு பரிணாமங்களை கொண்டு பற்பல வெளிப்புற மேம்பாடுகளுடன் சந்தைக்கு வந்துவிடும்

அழகான மாற்றங்களை உள்ளடக்கிய ஜாகுவார் XF ஏரோ ஸ்போர்ட் காரில், பந்தய வாகனங்களைப் போல் உறுதியான முன்புற முட்டுத்தாங்கியும் (பம்பர்) ; க்ரோமிய முலாம் பூசபட்ட கிரில்லும்; R ஸ்டைலில் உள்ள கதவின் கீழ் உள்ள வாசற்படி மற்றும் பின்புற ஸ்பாய்லரும் இந்த காரை அனைவரும் கொண்டாடும்படிச் செய்கிறது. ஜாகுவார் XF ஏரோ ஸ்போர்ட் கார் போலரிஸ் வெள்ளை, சிறப்பு பரிணாமத்தில்  அல்டிமேட் கருப்பு, சபையர் நீலம் மற்றும் ஓடிசி சிகப்பு போன்ற அழகிய வண்ணைங்களில் சந்தையில் கிடைக்கும். 

இந்திய ஜாகுவார் லாண்ட் ரோவர் நிறுவன தலைவர் ரோஹித் சூரி இந்த மாடலைப்பற்றி கூறும்போது, “டாடாவின்  ஜாகுவார் லாண்ட் ரோவர் XF மிகவும் ஆற்றல் வாய்ந்த வடிவமைப்புடனும், தங்குதடையில்லாத செயல்திறனாலும், எளிதான சவாரியாலும் மற்றும் அதன் அருமையான பலத்தாலும், சிறந்து விளங்குகிறது. தனித்துவ மேம்பாடுகளை  கொண்ட ஜாகுவாரின் XF ஏரோ ஸ்போர்ட் மாடல் எங்களது இளவயது வாடிக்கையாளர்களும், அதிநவீனத்தை விரும்பும் வாடிக்கையாளர்களும் ஜாகுவாரின்  சொகுசு மற்றும் பந்தைய கார் மாடல்களை வாங்கும் விருப்பத்தில் உள்ளவர்களை மேலும் அதீத ஆசையை ஊக்குவிப்பதாக இருக்கும்,”என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஜாகுவாரின் XF ஏரோ ஸ்போர்ட் காரின் சிறப்பான வெளிப்புற அலங்காரங்களை தவிர  உள்ளே 7 அங்குல தொடுதிரை தொழில்நுட்பதுடன் கூடிய இன்ஃபோடைன்மெண்ட் சாதனமும், அழகிய மேற்கூரையும், கால்களை சவுகர்யமாக வைப்பதற்கேற்ற மாற்றியமைக்கக்கூடிய முன்புற இருக்கை மற்றும் முழுமையான உபரி சக்கரத்தையும் உள்ளடக்கும். மேலும், உள்ளறையில் உள்ள மென்மையான தோல், நவீன அலுமினிய வேலைப்பாடு மற்றும் பகட்டான மரப்பூச்சும் ஜாகுவார் XF ஏரோவை மிடுக்காக்குகின்றன. 

ஜாகுவார் XF ஏரோ ஸ்போர்ட் கார் தனது ஆற்றலை 2.2 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் இஞ்ஜின் மூலம் உற்பத்தி செய்கிறது. இந்த இஞ்ஜின் திறன் 187bhp @ 3500rpm உந்துவிசை மற்றும் 450 முறுக்குவிசை அதிக பட்சமாக 2000rpm சேர்ந்து  8 வேக தானியங்கி பல்லிணைப்புப் பெட்டி (கியர் பாக்ஸ் ) மூலம் பின்புற சக்கரங்களுக்குச் செல்கிறது. 

பற்பல வடிவருவுங்களை எடுத்துள்ள ஜாகுவார் XF- இன் புதிய வடிவமானது நியூயார்க்கில் நடந்த ஆட்டோ ஷோவில் அறிமுகப்படுத்தப்பட்டது. மற்றுமொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் ஜாகுவார் XF- இன் அடுத்த மெருகேற்றப்பட்ட வடிவம் இந்தியாவில் அடுத்த ஆண்டு (2016) வெளியிடப்படும். 

வெளியிட்டவர்

Write your Comment மீது ஜாகுவார் எக்ஸ்எப்

Read Full News
அதிக சேமிப்பு!
% ! find best deals on used ஜாகுவார் cars வரை சேமிக்க
பயன்படுத்தப்பட்ட <CITYNAME> இல் <MODELNAME>ஐ காண்க

ஒத்த கார்களை ஒப்பீட மற்றும் கருத்தில் கொள்ள

Ex-showroom Price New Delhi
  • டிரெண்டிங்கில்
  • சமீபத்தில்
×
உங்கள் நகரம் எது?