ஸ்பெக்டர் திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்டை பழிவாங்க துரத்தும் ஜாகுவார் C-X75 (வீடியோ மற்றும் படங்கள் கேலரி)
published on நவ 23, 2015 01:03 pm by nabeel for ஜாகுவார் சி எக்ஸ்75
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
ஜேம்ஸ்பாண்ட் திரைப்படங்கள் என்றாலே, அதில் எப்போதும் சில அட்டகாசமான கார்களை காணலாம். ஆனால் இந்த முறை, அவர்கள் ஒருபடி மேலே போய், பிரத்யேகமான கார்களை அறிமுகம் செய்துள்ளனர். திரு.007 தனது DB10 காரை ஓட்ட, அவரை பழிக்குபழி வாங்குபவர் ஒரு ஜாகுவார் C-X75 காரில் துரத்துகிறார். இந்த திரைப்படத்தில் உள்ள கதாபாத்திரங்களை வைத்து பார்க்கும் போது, DB10 காருக்கு முன்னால் ஒரு மதிப்பு மிகுந்த போட்டியாளராக ஜாகுவார் கார் தெரிகிறது. இந்நிலையில் அனைவரது கவனத்தையும் ஆஸ்டன் மார்டின் கவர்ந்துள்ளதாக தெரியும் நிலையில், C-X75 காரின் சில சிறப்புகளை குறித்து இங்கே காண்போம்.
கடந்த 2010 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த C-X75 ஜாகுவார் கார் மூலம் கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றில் ஒரு புதிய அத்தியாய மேம்பாடுகள் அடைந்தது. வெறும் இரண்டே ஆண்டுகளில், ஒரு ஆல்-வீல் டிரைவ், பிளெக்-இன் பாராலல் ஹைபிரிடு எலக்ட்ரிக் வெஹிக்கிள்(PHEV) உடன் ஆற்றல் மிகுந்தும், ஜாகுவாரின் முதல் கார்பன் காம்போசைட் மோனோகோக்யூ சேசிஸ் ஆகியவற்றை பெற்று, ஒரு முன்மாதிரியான படைப்பாக உருவாக்கப்பட்டது. செயல்திறனை குறித்து பார்க்கும் போது, C-X75-ல் ஒரு ஒருங்கிணைந்த ஆற்றல் வெளியீடாக 850 hp மற்றும் 1000Nm முடுக்குவிசையும் அளித்து, அதன் பார்முலா 1-யை மரியாதை பூர்வமாக தழுவி, 1.6-லிட்டர் டயல்-பூஸ்டட் (டர்போசார்ஜ்டு மற்றும் சூப்பர்சார்ஜ்டு) நான்கு-சிலிண்டர் பவர்ஹவுஸ் மூலம் 10,000 rpm-ல் 501 hp-யை உற்பத்தி செய்கிறது. அவை அனைத்தும் ஒரு 7-ஸ்பீடு ஆட்டோமேட்டேடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் இணைந்து செயலாற்றி, 200 மில்லிசெக்கண்ட்ஸை விட குறைவான நிலையிலும், கியர்ஸ்ஃப்ட்ஸ் செய்ய முடிகிறது.
C-X75-ன் பேட்டரிபேக் முழுவதும் சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 300kW-யை விட அதிகமாகவே வெளியீடை பெற முடிகிறது. இந்த ஜாகுவார் 6 வினாடிகளுக்கும் குறைவான நேரத்தில், 0-விலிருந்து மணிக்கு 160 கி.மீ வேகத்தை எட்டி சேரலாம். முதன் முதல் C-X75 முன்மாதிரியின் சோதனை ஓட்டத்தின் போது, மணிக்கு 321 கி.மீ வேகத்தையும் கடந்த நிலையில், இந்த காரின் எழுத்துப்பூர்வமான அதிகபட்ச வேகம், மணிக்கு 354 கி.மீ ஆகும்.
இது குறித்து ஜாகுவார் நிறுவன சர்வதேச பிராண்ட் இயக்குனர் அட்ரியன் ஹால்மார்க் கூறுகையில், “ஜாகுவாரின் என்ஜினியரிங் மற்றும் வடிவமைப்பு திறமையின் உச்சத்தை C-X75 காரின் உருவாக்கத்தில் காணலாம். உலகின் உன்னத மேம்பட்ட தொழில்நுட்பங்களை கொண்டு, விவாதத்தின் கீழ் உலகின் மிக வேகமான சோதனை கூடமாக திகழ்கிறது. மேலும் ஒரு குறிப்பிடத்தக்க ஹைபிரிடு பவர்ட்ரேயின் உடன் எழுச்சியூட்டும் பிரமிப்பு அளிக்கும் செயல்திறனையும் அளிக்கிறது. ஜாகுவார் நிறுவனம், நாளைய கார்களின் உருவ வடிவமைப்பை எப்போதும் எதிர்நோக்கி உள்ளது. மேலும் C-X75 போன்ற பிரஜெக்ட் மூலம் அடுத்த தலைமுறைக்கான ஜாகுவாரின் கண்டுபிடிப்புகளுக்கு நாங்கள் அடிக்கல் நாட்டி உள்ளோம்” என்கிறோம்.
மேலும் வாசிக்க :
புதிய ஜாகுவார் XF மாடல்: நுர்பர்க்ரிங்-கில் உளவுப்படத்தில் சிக்கியது
இங்கிலாந்தில் ஈகோஸ்போர்ட் கார்களை 2016 ஆம் ஆண்டு அறிமுகம் செய்ய போர்ட் திட்டமிட்டுள்ளது