சிறந்த CarDekho experience க்கு Login or Register
Login

நிஸான் எக்ஸ் - ட்ரைல் மீண்டும் வரப்போகிறதா ?

published on ஆகஸ்ட் 17, 2015 10:08 am by அபிஜித் for நிசான் எக்ஸ்-டிரையல்

ஜெய்பூர்: வரும் பண்டிகை காலத்திற்குள் நிஸான் நிறுவனம் தனது எக்ஸ் - ட்ரைல் வாகனத்தை மறு அறிமுகம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை தீவிரமாக ஆராய்ந்து வருகிறது. இந்த எஸ்யூவி வாகனம் நிஸான் நிறுவனத்தின் பிரதான வாகனமாக இருந்தது. விற்பனை குறைந்ததால் 2014 ஆம் ஆண்டு அதன் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. நிஸான் நிறுவனத்தின் புதிய வடிவமைப்பு கோட்பாட்டை பின்பற்றி தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த புதிய எக்ஸ் - ட்ரைல் எஸ்யூவி வாகனம் முந்தைய மாடலை காட்டிலும் மிகவும் ஸ்போர்ட்டியான தோற்றத்தை பெற்றுள்ளது. இதை துவக்கமாக கொண்டு தன்னுடைய இன்ன பிற மாடல் வாகனங்களையும் ஒவ்வொன்றாக அறிமுகப்படுத்த நிஸான் முடிவு செய்துள்ளது.

முந்தைய எக்ஸ் - ட்ரைலுடன் ஒப்பிடுகையில் நாம் முன்பே சொன்னது போல் இந்த எக்ஸ் - ட்ரைல் ஸ்போர்ட்டியான தோற்றத்துடன் அமைக்கப்பெற்றுள்ளது. நன்கு எடுப்பாக தெரியும் முன்பக்க கிரில் மற்றும் சற்று சாய்வான கோணத்தில் அமைக்கப்பட்ட முகப்பு விளக்குகள், நேர்த்தியான பக்கவாட்டு பகுதி மற்றும் இப்போதைய வாகனங்களை போன்ற சிறப்பான பின்புற அமைப்பு ஆகியவைகளைப் பார்க்கமுடிகிறது. உட்புறமும் வெளி தோற்றத்தைப் போன்றே நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. தரமான பிளாஸ்டிக் கொண்டு கருப்பு மற்றும் பழுப்பு நிற நேர்த்தியான வண்ண பூச்சு கொடுக்கப்பட்ட டேஷ்போர்ட், இதனூடே வெள்ளி நிற செருகல்களும் சேர்க்கப்பட்டு புது போளிவ்ய்டன் காட்சியளிக்கிறது. இதைத்தவிர புத்தம்புதிய இன்போடைன்மென்ட் சிஸ்டம் மற்றும் இன்ஸ்ட்ரூமண்டேஷன் அமைப்பும் பொருத்தப்பட்டுள்ளது. ஓட்டுனர் நீங்கலாக 6 இருக்கைகைகள் அமைகப்படிருக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இன்னும் சற்று கூர்ந்து உள்ளார்ந்த விஷயங்களை பற்றி பார்க்கையில் இந்த வாகனம் நிஸான் 2.0 Dci மோட்டார் பொருத்தப்பட்டு CVT கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்படிருக்கும். AWD அமைப்பும் இந்த காரில் நாம் எதிர்பார்க்கலாம் என்றாலும் இது முந்தைய எக்ஸ் - ட்ரைல் அளவுக்கு இல்லாமல் கரடு முரடான பாதைகளில் செல்வதில் சற்று மென்மையானதாக இருக்கும் என்றும் சொல்லலாம்.

எக்ஸ் - ட்ரைல் உண்மையிலேயே ஒரு அற்புதத் தயாரிப்பு தான் ஆனால் சிபியூ முறையில் ( முழுதும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யும் முறை ) விற்பனைக்கு வரவிருப்பதால் விலை கூடுதலாக நிர்ணயிக்கப்பட்டு டொயோடா பார்ச்சுனர் போன்ற இதர இத்தகைய கார்களுலுடன் சேர்ந்து விடுகிறது. இத்தகைய ஒரு நடுத்தரமான அளவில் உள்ள எஸ்யூவி வாகனத்தை சொந்தமாக்கி கொள்ள நினைப்பவர்கள் கூட இதன் விலையை பார்த்து சற்று தயங்குகிறார்கள். நிஸான் நிர்வாணமும் இப்போதைக்கு எக்ஸ் - ட்ரைல் வாகனத்தின் தயாரிப்பை தொடங்கும் எந்த அறிவிப்பும் இல்லாத நிலையில் இந்த கார்கள் சிபியூ அல்லது குறைந்த பட்சம் சிகேடி முறையிலாவது ( உதிரி பாகங்களாக இங்கே இறக்குமதி செய்யப்பட்டு பின் பாகங்கள் இணைக்கப்படும் முறை (அசம்ப்ளிங்) ) இறக்குமதி செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மூலம்: ஆட்டோ கார்

வெளியிட்டவர்

அபிஜித்

  • 11 பார்வைகள்
  • 0 கருத்துகள்

Write your Comment மீது நிசான் எக்ஸ்-டிரையல்

Read Full News

trendingஎஸ்யூவி கார்கள்

  • லேட்டஸ்ட்
  • உபகமிங்
  • பிரபலமானவை
புது டெல்லி இல் *எக்ஸ்-ஷோரூம் இன் விலை