இந்தியாவிற்கு எதிர்பார்க்கப்படும் ஜாகுவார் XE மற்றும் XF: யூரோNCAP-யின் மதிப்பீட்டில் 5-ஸ்டார் பெற்றன
published on டிசம்பர் 03, 2015 05:46 pm by raunak for ஜாகுவார் எக்ஸ்எப்
- 17 Views
- ஒரு கருத்தை எழுதுக
ஜெய்ப்பூர்:
ஜாகுவாரின் புதிய XF மற்றும் XE ஆகிய கார்களுக்கு, யூரோ NCAP-யின் 2015 பாதுகாப்பு சோதனைகளில் அதிகபட்ச விருதான 5-ஸ்டார் பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்றுள்ளது. இந்த முடிவுகளை குறித்து பார்க்கும் போது, புதிய XF மொத்தமாக 92% புள்ளிகளையும், வளர்ந்த பயணிகளின் பாதுகாப்பு மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு ஆகியவை சேர்ந்து 84% புள்ளிகளையும் பெற்றது. பாதசாரி பாதுகாப்பு (பிரிடிஸ்ட்ரியன் சேஃப்டி) மற்றும் பாதுகாப்பு உதவி அமைப்பு (சேஃப்டி அசிஸ்டன்ஸ் சிஸ்டம்) பிரிவுகள் ஆகியவை முறையே, 80% மற்றும் 83% என்று புள்ளிகளை பெற்றது. புதிய XE-யில் வளர்ந்தவர்களின் பாதுகாப்பிற்கு 92%-மும், குழந்தைகள் பாதுகாப்பிற்கு 82%மும் புள்ளிகளை பெற்றது. அதே நேரத்தில் பாதசாரிகள் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு உதவி அமைப்புகள் ஆகியவற்றிற்கு முறையே, 81% மற்றும் 82% என்று புள்ளிகளை பெற்றது.
ஜாகுவார் XE, XF, F-பேஸ் ஆகியவற்றின் வெஹிக்கிள் லைன் இயக்குனர் கெவின் ஸ்ட்ராய்டு கூறுகையில், “XE மற்றும் XF ஆகியவற்றின் வடிவமைப்பில் எந்தவிதமான சமரசத்திற்கும் நாங்கள் இடம் அளிக்கவில்லை. இந்த வாகனத்தின் இயக்கவியல், செயல்திறன், மெருகேற்றம் மற்றும் இயக்கு திறன் போன்ற காரியங்களுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதோ, அதே அளவு பாதுகாப்பின் மீதும் கவனம் செலுத்தினோம். மேலும் எங்களின் கண்டிப்பான இன்-ஹவுஸ் தரக் கட்டுப்பாட்டு விதிகளை பொறுத்த வரை, சட்டபூர்வமான மற்றும் நுகர்வோர் சோதனைகளை விட அது கடினமானதாக உள்ளன.
அலுமினியம் அலாய் முதல் கார் பாடி கட்டமைப்புகள் வரையுள்ள எல்லாவற்றையும் நாங்களே வடிவமைத்து, உலகதர நிர்ணய நிலைகளுக்கு ஏற்ற பாதுகாப்பிற்கு உகந்ததாக அளிக்க மிகுந்த சிரத்தையோடு கூடிய ஆட்டோநோமஸ் எமர்ஜென்ஸி பிரேக்கிங் சிஸ்டத்தின் நடுப்பகுதியில் கலைநுட்பம் கொண்ட ஸ்டீரியோ காமிராவை அமைத்துள்ளோம்” என்றார்.
XE மற்றும் XF ஆகிய இவ்விரண்டிலும் பாதுகாப்பு அமைப்புடன் கூடுதலாக, ஜாகுவாரின் புதிய எடைக்குறைந்த அலுமினியம் கட்டமைப்பை கொண்டு, ஒப்பீட்டில் இந்த பிளாட்பாம் எடைக்குறைந்தது என்றாலும், அதே நேரத்தில் கடினமானதும் கூட. மேலும் இந்த வாகனங்களில் டிரைவர் மற்றும் பயணி ஆகியோருக்கான ஏர்பேக்குகள், பக்கவாட்டு ஏர்பேக்குகள் மற்றும் கர்ட்டன் ஏர்பேக்குகள் ஆகியவை காணப்படுகின்றன. இதனுடன் டைனாமிக் ஸ்டேபிலிட்டி கன்ட்ரோல், டிரேக்ஷன் கன்ட்ரோல், எமர்ஜென்சி பிரேக் அசிஸ்ட், லென் டிப்பர்ச்சர் வார்னிங், பிளைன்டு ஸ்பார்ட் மானிட்டரிங், கிளோஸிங் வெஹிக்கிள் சென்ஸிங், ரிவெர்ஸ் டிராஃபிக் டிடெக்ஷன், டிராஃபிக் சைன் ரெகாகனிஷன் மற்றும் அடாப்டீவ் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற ஆக்டிவ் பாதுகாப்பு தொழிற்நுட்பங்கள் காணப்படுகின்றன.
மேலும் வாசிக்க
புதிய ஜாகுவார் XF மாடல்: நுர்பர்க்ரிங்-கில் உளவுப்படத்தில் சிக்கியது
0 out of 0 found this helpful