இந்தியாவில் வெளிவரவுள்ள ஜாகுவார் XE காருக்கு ஆல்-வீல்-ட்ரைவ் மற்றும் ஏராளமான புதிய சிறப்பம்ஸங்கள் வெளியிடப்பட்டுள்ளன
published on நவ 25, 2015 11:22 am by bala subramaniam for ஜாகுவார் எக்ஸ்இ 2015-2019
- 13 Views
- ஒரு கருத்தை எழுதுக
விரைவில், இந்தியாவில் வெளிவரவுள்ள ஜாகுவார் XE 2017 மாடல் இயர் காருக்கான ஏராளமான சிறப்பாம்ச மேம்பாடுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகமாகி, 6 மாதங்களே ஆனா ஜாகுவார் XE காருக்குப் பலவிதமான சிறப்பம்ஸங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆல் வீல் ட்ரைவ் (AWD) அமைப்பு பொருத்தப்பட்டுள்ள செய்தியே, புதிதாக இணைக்கப்பட்டுள்ள சிறப்பம்சப் பட்டியலில் முக்கியமானதாகும். இது அபரிதமான டார்க்கை உற்பத்தி செய்ய உதவுகிறது. 180 PS இங்கேனியம் டீசல் இஞ்ஜின் மற்றும் 340 PS சூப்பர் சார்ஜ்ட் V6 பெட்ரோல் இஞ்ஜின் போன்றவை 8 ஸ்பீட் ஆட்டோமேடிக் ட்ரான்ஸ்மிஷன்களுடன் இணைந்து அருமையாக செயல்பட்டு, அபரிதமான டார்க்கை உற்பத்தி செய்கின்றன. XE காரை ஓட்டும் ஓட்டுனர் சிறப்பாக செயல்படுவதற்காக, இதன் AWD அமைப்பு தேவையான நேரம் மட்டுமே டார்க்கை முன்புற சக்கரங்களுக்கு அனுப்பி வைக்கும், மற்ற நேரத்தில், ரியர் வீல் ட்ரைவ் அமைப்பு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
அனைவரையும் கவரும் AWD அமைப்பைத் தவிர, நெக்ஸ்ட்-ஜென் InControl டச் ப்ரோ இன்ஃபோடைன்மெண்ட் சிஸ்டம்; F-TYPE மாடலில் இருந்து பெறப்பட்ட கான்ஃபிகரபில் டைனமிக்ஸ்; மற்றும் வண்டியை எளிதாகக் கையாள உதவும் பல விதமான மேம்பட்ட அமைப்புகளும் பொருத்தப்பட்டுள்ளன. டேப்லெட் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ள 10.2 அங்குல டச் ஸ்கிரீன் இன்கண்ட்ரோல் டச் ப்ரோ அமைப்பில், அற்புதமான கிராபிக்ஸுடன் கூடிய இண்டெலிஜெண்ட் நேவிகேஷன்; 8 விதமான சாதனங்களுடன் இணைந்து செயல்படும் Wi-Fi ஹாட்ஸ்பாட் மற்றும் வாட்ச்களுக்கான ஆப் தொழில்நுட்பம் ஆகியவை இந்தப் புதிய சிறப்பாம்ச பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
சாலை நிலைகளுக்கு ஏற்றவாறு, அடாப்டிவ் சர்ஃபேஸ் ரெஸ்பான்ஸ் (AdSR) மற்றும் டைனமிக் ஸ்டபிலிட்டி கண்ட்ரோல் அமைப்புகளை, இந்த AWD அமைப்பு உபயோகப்படுத்திக் கொள்ளும். முதலில் F-TYPE மாடலுக்காக தயாராகி வெற்றிகரமாக இயங்கிக் கொண்டிருக்கும் கான்ஃபிகரபில் டைனமிக்ஸ் இதில் பொருத்தப்பட்டுள்ளது. த்ரோட்டில் ரெஸ்பான்ஸ், ட்ரான்ஸ்மிஷன் ஷிப்ட்கள் மற்றும் கண்டினுவஸ்லி வேரியபில் டாம்பிங் அமைப்பு கொண்ட அடாப்டிவ் டைனமிக்ஸ் ஆகியவற்றை இண்டிவிஜூவல் செட்டிங்கில் தேர்ந்தெடுக்க கான்ஃபிகரபில் டைனமிக்ஸ் உதவுகிறது.
ஓட்டுனர் சோர்வாக இருப்பதைக் கண்டறிய லேன் கீப் அஸ்சிஸ்ட் மற்றும் டிரைவர் கண்டிஷன் மானிட்டர்; ஸ்பீட் லிமிட்கள் மாறும் போது ஓட்டுனர் எளிதாக வேகத்தைக் குறைக்கவும் கூட்டவும் உதவுவதற்காக அடாப்டிவ் ஸ்பீட் லிமிடர் போன்ற ஓட்டுனருக்கு உதவும் அமைப்புகளும் இதில் இணைக்கப்பட்டு வருகின்றது.
இதையும் படியுங்கள்
- இந்தியாவில் ஜாகுவார் XE உளவுப்படத்தில் சிக்கியது
- ஜகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்திற்கு சொந்தமான 5,800 கார்கள் சமீபத்திய சீன டியான்ஜின் துறைமுக வெடி விபத்தில் சேதமடைந்துள்ளன
- ஸ்பெக்டர் திரைப்படத்தில் ஜேம்ஸ்பாண்டை பழிவாங்க துரத்தும் ஜாகுவார் C-X75 (வீடியோ மற்றும் படங்கள் கேலரி)